22 மாத குழந்தையின் எடை 10 கிலோ

என் பெண் குழந்தைக்கு 22 மாதங்கள் ஆகிறது...எடை வெரும் 10 கிலோ தான்...இது சரியான எடையா இல்லை குறைவா?அவளது எடையை அதிகரிக்க நான் என்ன செய்ய வேன்டும்?

மேலும் அவளது கால் முட்டி அவளது உடம்பை விட மிகவும் கருப்பாக உள்ளது...அதை எப்படி வெள்ளைஆக்குவது? உதவுங்கள் தோழிகளே

என் மகனுக்கும் 22 மாதம் ஆகிறது அவனது எடை 10 கிலோ தான் இது சரியான எடை தானா.

yen paiyanukkum 22 months than avanum 10kg than erukan, yenna saivathuney thariyala, yenna sapida kuduthalum waight kudavey matinguthu,waight kuda yenna unavu kodukalam.help pls

என் பையனுக்கும் 24 மாதம் ஆகிறது... அவனும் 10கிலோ எடை தான் இருக்கிறான்.... என்ன பண்ணுவது... டாக்டர் கிட்ட வளரும் போது சரி ஆகிடும் என்கிறார்... அதனால் கவலை வேண்டாம் தோழிகள்...

தோழிகளே எங்க வீட்டு சின்னவருக்கு 38 மாதம் அதாங்க 3 வருசம் 2 மாசம் ஆகுது, அதே பத்து கிலோ தான் 2 வருசமா!! எங்க ஆள் கொஞ்சம் டயட் பாலோ பன்னுவார், சப்பாத்தி மேரி பிஸ்கட் தவிர சாப்பிட்ட, வெறும் பால், மற்றும் தயிர்.

பிறந்த வெயிட்டோடு ஒப்பிட்டு பாருங்க,பிறந்த‌ போது நல்ல‌ வெயிட் இருந்து இப்ப‌ ஏறலனாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, இங்க‌ இருக்க‌ டாக்டர் சொல்லுவது, குழந்தை நல்லா ஆக்டிவா இருக்கனும், டாய்லெட் போறது நார்மலதினமும் போகனும் இப்படி இருந்தா ஓ.கேன்னு சொல்லிட்டாங்க‌.
சில‌ பிள்ளைகளுக்கு சாப்பிட்டாலும் வெயிட் போடது, சோ வெயிட் பத்தி கவல‌ படாதீங்க‌, சாப்பாடு சத்தானதா கொடுக்க‌ முயற்சி செய்ங்க‌,சாப்படலன்னா போர்ஸ் பன்னாதீங்க‌, அப்பறம் சாப்பாட்டுக்கு ரெம்ப‌ வம்பு பன்னிபழகுவாங்களாம்.
baby weight chart kg னு கூகுல் தேடி சார்ட்ல‌ பாருங்க‌, அதுல‌ தெரியும் ஓ.கேவா இல்லையான்னு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி. என் குழந்தை வெயிட் இல்லைனு ரொம்ப கவலையா இருந்தேன். இப்ப திருப்தியா இருக்கு.

பாலபாரதி பிள்ளைங்க வெயிட் ஏத்தறது அவங்க சாப்பாட்ட பொறுத்து, என் பையன் பிறந்த பொழுது மூனேமுக்கால் கிலோ ரெம்ப குண்டா இருப்பான்னு நினைச்சோம், குச்சி போல தான் இருந்தான், இப்பவும் எந்த மாற்றமும் இல்ல, டாக்டர்கிட்ட கேட்டப்ப ஆக்டிவா இருக்கானா ஒன்னும் பிரச்சன இல்லன்னு சொல்லிட்டாங்க, இது பயங்கர சேட்டை தான், ஸ்கூல் போனா கொஞ்சம் கொஞ்சமா மாறும் சாப்பாட்டு பழக்கம்,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப நன்றி ரேணுகா அக்கா...என் குழந்தை பாதாம், முந்திரி, பால், தயிர், பருப்பு, நெய், சாதம், சிக்கன், பிஸ்கட் போன்ற weight கூடும் பொருள் தான் சாப்டுரா...ஆனா நோ improvement...

அவளது கால் முட்டிய எப்பிடி வெள்ளை ஆக்குவது என்று சொல்லுங்கல் அக்கா

என் பிள்ளைகள் இருவரில் ஒருவர் 4 வயது, ஒருவர் 5 1/2 வயது. இருவருமே ஒன்று போல 15 கிலோ தான் இருக்காங்க. குறைவான எடை தான். மருத்துவரிடம் கேட்ட போது எனக்கு சொன்ன விளக்கம்... “1 வயதுக்கு மேல் எடை பார்க்காதீங்க. 1 வயது வரை தான் மாதம் இவ்வளவு கிராம் கூட வேண்டும் என்று கணக்கு. அதன் பின் குழந்தையின் உயரம் தான் பார்க்கனும். ஓடி விளையாடும் பிள்ளைகள் எடை பெரிது இல்லை. அந்த 1 வயது வரை கூட பிள்ளையின் எடை பிறந்த போது இருந்த எடையை சார்ந்ததே. அப்போதிருந்து மாதம் எவ்வளவு கூடுகிறது என்பது தான் முக்கியம்.”

உங்க எல்லார் கவலையும் போச்சா? 22 மாசத்தில் 10 கிலோ என்ப்து குறைவான எடை இல்லை. பயமே வேண்டாம். 3 வயதை கடந்தும் 10 கிலோ இருக்கும் பிள்ளைகள் கூட உண்டு. எடையை விட பிள்ளை ஆரோக்கியமா இருக்கா என்பதை மட்டுமே பாருங்கள். எடை கூடுவது ஒரு வகையில் பெற்றோர், உடல் வாகை பொருத்ததும் கூட. உணவை மட்டுமே சார்ந்தது அல்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா, மிக்க நன்றி...இப்போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது

Enathu payan ku 3 vayathu agirathu. Avan 2 and half years ku piragu than nadaka arambithan irunthalum avanal oru balance aga nadaka mudiya villai. ithanal avan nadakakum pothu thavari kele vilunthu avanthu netriyil pala kayangal erpadugindarana.4 murai thayal podum alavu netriyil kayam erpatana.

doctor-ridam consult seithum sila medicine koduthulargal.

Avanal balance aga nadaka enaku vali solungal thozhigale... enathu kavalai ungaluku purium ena nenaikiren.

மேலும் சில பதிவுகள்