குழப்பத்தை தீருங்கள் pls

அன்பு தோழிகளே , எனக்கு இன்றுடன் 80 நாள் ஆகிறது, ஆங்கில மருத்துவம் பார்த்து பார்த்து சலித்து போய் சித்த மருத்துவம் பார்கிறோம், எனக்கு 60ஆவது நாளில் urine டெஸ்ட் செய்த போது நெகடிவ் வந்தது , தற்ப்பொது ஒரு 3 நாள்களாக ,நெஞ்ஞுக்கறிப்பு, வாய் சல்லென்று போகிறது , வெள்ளை சாத வாசம் கூட குமட்டுகிறது. புளியின் வாசம் மட்டும் பிடிக்கிறது, தயிர் மட்டும் தான் ஊற்றி சாபிடுகிரேன், ரசம் குடிக்க பிடிக்கிரது. இது எதனால்? இப்படி யாருக்காவது இருன்திருக்கா? இது கர்பமா? இல்லையா? குழப்பத்தை தீருங்கள் pls

தோழி குழப்பமாக இருப்பின் ஹோம்டெஸ்ட் பண்ணி பார்துடுங்க.

தோழி, ரொம்ப நன்றி ,
முதலில் இது கர்பத்துக்கான அறிகுறிகளுள் ஒன்று தானா? எனக்கு ஹோம் டெஸ்ட் எடுக்கவே பயமாக உள்ளது , நெகடிவ் வந்தால் ரொம்ப கஷ்டமா இருக்கும் அதான்,

60 நாளில் எடுத்த போது நெகடிவெ வந்தது, இன்று 80ஆவது நாள், எனக்கு irregular periods.

சில ஹோம்டெஸ்ட்டுகளில் கரு சின்னதாக இருக்கச்சே தெரியாது . சோ அது நெகட்டிவ் காட்டும். நாட்கள் மேலும் கூடும்போது கரு உண்டாகி இருப்பின் அது நன்கு வளர்ந்த நிலையில் கண்டிப்பா பாஸிட்டிவ் வரும்.சோ கவலை விட்டு முதலில் ஹோம்டெஸ்ட் பண்ணுங்க. நல்ல விஷயமாகவே அமையும்.அப்படி இல்லைன்னாலும் கவலைப்பட்டு உடம்பை கெடுக்காதீர்கள்.மலைவேம்பு சாறு குடியுங்கள்(நெகட்டிவ் ஆகும் பட்சத்தில்)

ரேணுகா, உங்க பதில் உண்மையாகவே ரொம்ப ஆறுதலா இருக்கு, கண்டிப்ப ஹோம்டெஸ்ட் செய்து பார்க்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி. - காயத்ரி

காயத்திரி கவலை வேண்டாம்...,கண்டிபாக நீங்கள் தாய்யாக போகிறிர்கள் என்று நம்பிக்கை வையுங்கள்.....

அன்பு அக்கா இந்த‌ தலதிர்கு புதிது எனக்கு இர்ருகுலர் பிரியட் அக்கா நானும் சித்த‌ மருந்து தா சாப்பிடுடர‌ அக்கா 8 நாள் ஆகுது நீகலும் இதுகு தான் சாப்டிகளா பத்தியம் சொன்னாகளா எங்க‌ வாங்கி சாப்டிக‌ அக்கா சொல்லுக அக்கா

45 வது நாளில் யூரின் டெஸ்ட் ப்லட் டெஸ்ட் ஸ்கேனிங் எடுங்க. காச பத்தி யோசிக்காதிங்க யூரின் டெஸ்ட் சில நேரம் சரியா ரெப்போர்ட் தராது. ஸோ கண்டிப்பா ஸ்கேனிங்கல் குழந்தையோட இதய துடிப்பு 45வது நாளில் தெரியும் நேங்க உடனே அத செய்ங்க காயத்த்ரி ஆல் தி பெஸ்ட்

அன்புள்ள‌ ரேணுகா மற்றும் சரண்யா, எனக்கு 80ஆவது நாளில் கற்பம் உறுதி ஆகி உள்ளது , ரேணுகா நீங்கள் சொன்னது போலதான் டாக்டரும் சொன்னார் _ ரொம்ப‌ நன்றி தோழிகளே,

congrats... take care of your health..

மேலும் சில பதிவுகள்