22 மாதம் குழந்தைக்கு 2 நாட்களாக வாந்தி

என் குழந்தைக்கு இரண்டு நாளாக தொடர்ந்து இரவு சாப்பிடவுடன் வாந்தி எடுக்கிறான் நான் டாக்டரிடம் சென்று காட்டிவிட்டேன் இருந்தும் சரியாக வில்லை ப்ளீஸ் என்ன பண்ணுவது கொஞ்சம் சொல்லுங்க பா

பாரதி, இரவில் மட்டும் தானா? என்ன சாப்பாடு கொடுத்தீங்கன்னு கவனிச்சு பாருங்க? இருமல் எதும் இருக்கா? டாக்டர் என்ன சொன்னார்?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு பாலபாரதி,
இரவில் மட்டும் தான் வாந்தி என்றால், நிச்சயம் அஜீரணமாகத்தான் இருக்கும்.

வசம்பை தணலில் சுட்டு, பாலில் விட்டு உரைத்து நாக்கில் தடவவும். மூன்று வேளை அதுபோல் செய்யவும். மயிலிறகை சுட்டு அந்த‌ சாம்பலை தேனில் குழைத்து கொடுத்தாலும் வாந்தி நிற்கும்.

இரவில் நேரமே குழந்தைக்கு உணவு கொடுத்து விடவும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளாக‌ கொடுக்கவும். இட்லி, ரசம் சாதம், இடியாப்பம், எண்ணெய் குறைவாக‌ விட்ட‌ ஊத்தாப்பம் இது போல‌ கொடுக்கவும். இரவில் பால் அதிகம் கொடுக்க‌ வேண்டாம். தயிர் சாதம் கூட‌ கொஞ்ச‌ நாளைக்கு வேண்டாம்.

பயப்பட‌ வேண்டாம். சரியாகி விடும்.

அன்புடன்,
செல்வி.

ஆமாம் அவன் இரவில் மட்டும் தான் வாந்தி எடுக்கிறான், நீங்க சொன்னதை கண்டிபாக செய்கிறேன். ரொம்ப நன்றி அக்கா

ஆம் இரவில் மட்டும் தான் டாக்டர் சளி, இருமல் இருக்குனு சொன்னாங்க அதுக்கு டானிக், கொடுத்துருக்காங்க, பதில் அளித்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா.

இப்ப‌ எப்படி இருக்கு, Cham கு ,,, take care to Cham ,,,,,,,,,,,,,

மேலும் சில பதிவுகள்