Enaku 3monthil oru baby irukiradu. Babyku passport apply panna veandumendral parents passportil address ondraga iruka veanduma.
Enaku 3monthil oru baby irukiradu. Babyku passport apply panna veandumendral parents passportil address ondraga iruka veanduma.
பாஸ்போர்ட்
கேள்வியை தமிழில் கேட்டிருந்தால் படிக்க சுலபமா இருந்திருக்கும். நீங்க பிள்ளை பாஸ்போர்ட்டுக்கு எந்த முகவரி கொடுக்க போறீங்களோ அந்த முகவரி பெற்றோர் இருவரில் ஒருவர் பாஸ்போர்டில் இருந்தால் போதுமானது. அந்த பாஸ்போர்ட்டை மட்டுமே ஃபோட்டோ காபி எடுத்து இணைத்தால் போதும். இருவருடைய பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Aysha Jasmine
என் பொண்ணுக்கு நான் மட்டும் தான் தனியா போய் அப்ளை பன்னேன். ஆனால் என் பொண்ணுக்கு இரண்டாவது பாஸ்ப்போர்ட் அப்பளை பன்னும்போது, குழந்தையோட அம்மா & அப்பா ரெண்டு பேரும் வரனும் நு சென்னை பாஸ்ப்போர்ட் சேவா பிரிவின் கஸ்டமர் கேரில் சொன்னாங்க. அப்படி குழந்தையோட அப்பா வெளிநாட்டில் வேலை செய்பவராய் இருந்தால் அவங்க குடுத்திருக்கிற ஒரு ஃபார்மட் லெட்டரில் (அ) அஃப்பிடவிட் பூர்த்தி செய்து அந்த நாட்டில் உள்ள இந்தியன் எம்பஸில அட்டஸ்டேஷன் வாங்கி பாஸ்போர்ட் அப்பளை பன்ன வரும்போது அந்த லெட்டரையும் கொண்டு வரனும்னு சொன்னாங்க. மேலும் தகவலுக்கு பாஸ்ப்போர்ட் சேவா இணையதளத்திலோ அல்லது அதன் கஸ்டமர் கேர் நம்பருக்கு முயற்சித்து பாருங்க.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்