ரெக்கார்ட் பென் ஸ்டாண்ட்

தேதி: February 24, 2014

5
Average: 5 (6 votes)

ரெக்கார்ட் உடைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து அமைப்பைத் தீர்மானிக்கலாம். அவரவர் ரசனையைப் பொறுத்து எந்த உருவம் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

'தொட்டுக்கொள்ள...' 'ரெக்கார்ட் ப்ரேக்கிங்' போட்டியில் முதலிடம் பெற்ற திருமதி. சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களது யோசனையிலிருந்து உருவாக்கம் பெற்ற கைவினை இது.

மீண்டும் நானே உடைத்தாலும் இதே வடிவ துண்டுகளாக உடையாது என்பதால், செய்முறையை 'உலரவிடவும்', 'ஒட்டவும்' என்று எழுதாமல் எவ்வாறு செய்தேன் என்பதை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

 

உடைந்த ரெக்கார்ட் துண்டுகள்
ரெக்கார்ட் ட்ரே - http://www.arusuvai.com/tamil/node/20768 11வது படத்திலுள்ளது
ப்ளூ டாக்
ஹாட் க்ளூ
பேனை

 

முதலில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, ரெக்கார்ட் துண்டுகளையும் ரெக்கார்ட் ட்ரேயையும் தூசு இல்லாமல் அலம்பி உலரவிட்டேன்.
பூ வடிவத்திற்கு ஏற்றபடியான இடைத்தர அளவான துண்டுகளைத் தெரிந்து ப்ளூ டாக் வைத்து ஒட்டிப் பார்த்தேன்.
மெல்லிய துண்டுகளை பூக்களின் காம்புகள் போல் வரும் விதமாகப் பொருத்தி வைத்தேன்.
மீதித் துண்டுகளில் வளைவாக இருந்தவற்றில் ஒவ்வொரு பூவுக்கும் இரண்டு இலைகள் வீதம் தெரிந்து வைத்தேன்.
ப்ளூ டாக்கை நீக்கிவிட்டு, ஹாட் க்ளூ கொண்டு ஒட்டிய முழுமையான முதலாவது பூச்செடி.
முழுமையான இரண்டாவது பூச்செடி.
மீன் வால் போல ஒரு துண்டு இருந்தது.
சமையலுக்கு உதவாத நான்ஸ்டிக் பான் ஒன்றில் சிறிது நீரை கொதிக்க வைத்தேன். கொதித்ததும் பானின் அடியில் V வடிவின் ஒரு பக்கம் படும்படி பிடித்து இளகும்வரை காத்திருந்து பேனாமுனை அளவிற்குச் சுருட்டிக் கொண்டேன். அது இறுகுவதற்காக ஒன்றிரண்டு நிமிடங்கள் அப்படியே பிடித்துக்கொண்டு இருக்கவேண்டியதாக இருந்தது.
மறு பக்கத்தையும் இதே போல் சுருட்டிக்கொண்டேன். V வடிவத்தை சரியாகப் பிடித்து பாத்திரத்தில் வைக்க, அடிப்பகுதி இளகி மடிந்து வந்தது. சட்டென்று அதை நீரிலிருந்து வெளியே எடுத்து மேசையில் அப்படியே வைத்து இரண்டு நிமிடங்கள் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தேன்.
மீதி இருந்தவற்றில் இப்படி ஒரு வடிவம் செய்துகொள்ளப் போதுமான துண்டுகள் கிடைத்தன.
இந்த மூன்று துண்டுகளையும் மரம் தயாரிக்க எடுத்துக் கொண்டேன்.
அவற்றை இப்படி இணைக்க மரமொன்றின் அமைப்பு கிடைத்தது. ஹாட்க்ளூ கொண்டு ஒட்டிய முழுமையான மரம்.
மீண்டும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மரத்தின் அடிப்பகுதியை இளக்கி, தட்டையாக்கி, இறுக வைத்தேன். இதே விதமாக மற்றொரு செடியின் அடிப்பாகத்தையும் சற்றுத் தட்டையாக்க முடிந்தது.
மரங்களை ரெக்கார்ட் ட்ரேயில் ஹாட்க்ளூ கொண்டு ஒட்டினேன். சிறிய செடிகளுக்கு ஆதாரமாக இருக்குமாறு, மீந்திருந்த துண்டுகளிலிருந்து மிகச் சிறிதான சிலவற்றைச் செடிகளின் முன்னும் பின்னும் கற்கள் போல ஒட்டினேன். மேலே இலைகள் பொருத்தியிருந்த இடத்தில் பொருத்துகளை மறைப்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் சிறு துண்டு ஒட்டிவிட்டேன்.
இறுதியாக பென் வைப்பதற்கென வளைத்து வைத்த பகுதியையும் ஒட்டிவிட அழகான பென் ஸ்டாண்ட் கிடைத்தது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சீதா ஐடியா வடிவம் பெற்றுவிட்டதா?? அழகோ அழகு. வாழ்த்துக்கள் ஐடியா தந்த சீதாவுக்கும் அதற்கு உயிர் தந்த உங்களுக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ அழகு கொஞ்ச நாளைக்கு கடனா தந்தீஙனா ஆச தீர வீட்ல வச்சுடு தாரன் எனக்கு இதலாம் பன்னிப்பாக்க ஆசைதான் நேரமே கிடைக்காதுங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

கலக்கலா இருக்குங்க செடியும் ட்ரேவும்

இமா அக்கா,
சீத்தாம்மா ஐடியாவும் ஒகே,
அதுக்கு நீங்க‌ செய்த‌ வொர்க் ம் சூப்பர், சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப‌ அழகா இருக்கு இமா.வாழ்த்துக்கள்.

சூப்பர் அக்கா ரொம்ப அழகான ரெக்கார்ட் பென் ஸ்டாண்ட். ஏன் கிட்ட உடைந்த ரெக்கார்ட் துண்டுகள் இல்லை அக்கா. இருந்தால் கண்டிபாக செய்வேன்.

அட்டகாசம் ஏதேதோ வடிவத்தில் கிடைத்த ரெக்கார்ட் ட்ரேவிற்கே இப்படி ஒரு அழகான வடிவம் கொடுத்துட்டீங்க. சூப்பர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இமாம்மாக்கு உடைந்த துண்டுகள் கூட க்ராப்ட் தான்.

ஆஹா இத எப்படி 2நாளாக பார்க்காமல் இருந்தேன். அழகா இருக்கு உடைந்த துண்டுகளுக்கு ரெக்கார்ட் பென் ஸ்டாண்ட் என்ற பெயரா இமாம்மா உங்க ஸ்டைலில், நேர்த்தியான வேலை

அன்பு இமா,

பிரமிப்பு என்பதைத் தவிர‌ வேற‌ சொல்லத் தெரியல‌!!

பொறுமையாக‌, அருமையாக‌ செய்திருக்கீங்க‌. அசத்தலாக‌ இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

இது நீங்கள் நினைத்தது போல அமைந்திருக்காது என்று தெரியும். நடைமுறைச் சிக்கல்கள் சில இருந்ததால் இப்படிச் செய்யும்படி ஆயிற்று. திருப்தியாக இல்லாவிட்டால்... மன்னியுங்கள்.

‍- இமா க்றிஸ்

உமா, தேவி, பாலபாரதி, நிகிலா, சுபி, ப்ரியா, வனி, ஜனத்துல் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். :-)

இரவல் எல்லாம் வேண்டாம் ஜனத்துல். அனுப்ப முடிந்தால்... சீதாவுக்கே அனுப்பி இருப்பேன். துண்டு துண்டாகத்தான் போய்ச் சேரும். அதனால் இங்கேயே இருக்கட்டும். :-)

‍- இமா க்றிஸ்