ஊட்டியை பாக்கலாம்னுஇருக்கிரோம்

மார்ச்சில் ஊருக்கு வருகிறோம்.அப்ப ஊட்டியை பாக்கலாம்னுஇருக்கிரோம்.அங்க எங்கே தங்கலாமென்னும்,எதையெல்லாம் பாக்கலாம்னும் சொல்லுங்கப்பா.2குட்டியும் வேறவருது.அதனால அவங்க எஞாய்,பாதுகாப்பான இடமுமாய் சொல்லுங்கள்.நம்ம அறுசுவையில் இதைப்பத்தி அலசி ஆராய்ந்து பார்த்தேன்.ஆனாலும்ம் இன்னும் கூடுதல் தகவல் தாங்கப்பா ப்ளீஸ்.

உங்கள் ப்ரொஃபைலில் திருமணமானவராக்கு இல்லைன்னு போட்டிருக்கீங்க. இப்ப நீங்க எங்க (இந்தியாவா?வெளிநாடா?) இருக்கீங்க?மார்ச்சில் இரண்டாம் வாரம்னா கொஞ்சம் பரவாயில்லை.இப்போ ஊட்டியில் மூடுபனியும்,சாரல் மழையும்,இரவில் கனமழையும் துவங்கியிருக்கு. இது இன்னும் 2 வாரங்கள் தொடரும்னு நினைக்கிறேன். ஒரே நாலில் இரண்டு மூன்று கிளைமெட் மாறுது இது புதிதாக வந்து இருநாளில் கிளம்பிடும் குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கே ஏற்றதல்ல.

அப்படி கிளைமெட் நல்லா இருக்கும்போது வந்தால் ஊட்டி போதவுசில் இருந்து வெளியேறும்போது வலதுபுறம் குழந்தைகள் பார்க் ஒன்று உள்ளது.அதற்கு நான் வைத்துள்ல பெயர் காக் பார்க் பெரிய சேவல் பொம்மை இருக்கும்.அங்கே குட்டீஸ் எஞாய் பண்ணுவாங்க.ஓபன் ஸ்பேஸ்ங்கறதால மழை இருந்தால் சிரமம்.
அடுத்து போதவுஸ் இங்கே போட்டிங் அண்டு ஃபன் கேம்ஸ் இருக்கு. கேம்ஸ் 7வயதுக்குமேல்னா பரவாயில்லை.
அடுத்து பொட்டானிக்கல் கார்டன் இங்கே இயற்கை மரங்களையும் அவர்கள் செய்துள்ள செடி வேலைகளையும் கண்டு ரசிக்கலாம். குட்டீஸ் விளயாடவிட்டு அருகிருந்து பார்த்துக்கொள்ள நல்ல இடம் உண்டு. விளையாட்டுன்னா திறந்தவெளிதான் கேம்ஸ் ஒன்னும் இல்லை.
அடுத்து ரோஸ் கார்டன் அங்கே ரோஜா செடிகள் மட்டுமே உண்டு.அதுவும் சீசனில்தான் நல்லா இருக்கும்.இப்ப வேஸ்ட் பார்க்க ஒன்னுமில்லை.
அடுத்து தொட்டபெட்டா இன்னும் போனதில்லை ஆனாலும் அங்கே விளையாட ஒன்னுமில்லைன்னு கேள்வி,டெலஸ்கோப் வழியா பார்க்கலாம்.மூடுபனின்னா அதுவும் வேஸ்ட்.
கொஞ்சம் ஊட்டி தாண்டினா எமரால்டு லேக் பைன் பாரஸ்டில் கொஞ்சம் சருக்கினார்போல இறங்கி சென்றால் அப்பப்பா அழகான பச்சைநிற தண்னீர் குலம்.இது நீண்டுகொண்டேபோகும்.
இன்னும் கொஞ்சம்னா 7 த் மைல் ஆர் 9 த் மைல் பேர் சரியா நினைவில்லை.இங்கேதான் சூட்டிங் எல்லாம் நடக்கும்.திறந்தவெளியில் பசும் புல்தரை கம்பலம்போல நடக்க்க இதமாக இருக்கும்.
அடுத்த பாயிண்ட் பைக்காரா ஃபால்ஸ், இங்கே ஹோட்டல்(உணவகம்) உண்டு கொஞ்சம் தள்ளி நடந்தால் நீர்வீழ்ச்சி உண்டு.இங்கும் படக்காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதிலிருந்து வந்தால் பைக்காரா போதவுஸ்.இப்போதைக்கு இதுதான் தெரிந்த இடங்கள்.
மேட்டுப்பாளையம் டூ ஊட்டி வழியில் காட்டேரி பார்க் இருக்கு. குன்னூரில் சிம்ஸ் பார்க் இருக்கு இது குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும் என் குட்டீஸ்லாம் கூட்டிபோனா வெளியவரமாட்டாங்க.
வெலிங்டனில் வெலிங்டன் லேக் இருக்கு,பட் இது ஒன்லி ஃபார் அர்மி அண்டு டிபன்ஸ்க்கு மட்டும்.
இப்படியே மேலபோனா லிங்க கோயில் ஆஞ்சநேயர் கோயில்னு இருக்கு. காட்டேரில இருந்து ந்நெஆபோனா சாம்ராட் எஸ்டேட்டில் பளிங்கு கண்ணன் கோயில் ஒன்று இருக்கு மிக அமைதியான இடம்,நல்லா இருக்கும்.
ஊட்டியில் நிறைய ஹோட்டல்ஸ் இருக்குப்பா,ரெசாட்போல தனிக்குடில்களும் உள்ளன.தேடிப்பார்த்தால் (கூகுளில்)கிடைக்கும்.

ஹாய் வண்க்கம்.

ஊட்டி என்றாலே ஒன்லி இயற்க்கை அழகுதான்.அங்குபாதை ஓரத்தில் கூடபூக்கள்,நம்மை பார்த்துசிரிக்கும்ங்க‌.உங்க‌ குட்டிஸ்யே ஒவ்வொரு இடத்திலும் செடி/பூ/இலை/மழை/தண்ணிர்/குளிர்/சில்னஸ் என்று ரசிக்க‌ வைங்க‌.ஸ்வெட்டர் குடை,கேப்,குர்ங்குகுல்லா,ஷால் அவசியம் நம்மகிட்ட‌ இருக்கனுங்க‌.இல்லைனா மழை/குளிருக்கு பயந்து ஹோட்டலிலேதங்கிவிட்டு வரவேன்டியதுதான்.நாங்க‌ அப்படித்தாங்க வந்துவிட்டோம்.தங்கள் பயணம் இனியாக‌ இருக்க‌ வாழ்த்துங்கள்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரேணு,என் ப்ரொபைலில் போட்டிருப்பது எல்லாம் என் பெரிய பெண்ணை பற்றி.அது அவங்க அப்பாவோட வேலை.இப்ப நாங்க ஓமானில் நிஷ்வாவில் இருக்கிரோம்.மார்ச்சில்2வதுவாரம்தான் வருகிரோம்.அப்ப நல்லாயிருக்குமா?நீங்க ஊட்டியா,குடுத்துவச்சவங்கதான்.

rajinibaiரொம்ப நன்றி.நீங்க சொன்னமாதிரி எல்லாம் தயாராய்கொண்டுபோகிரோம்.நீங்க எந்த ஹோட்டலில் தங்கினீங்கனு சொன்னீர்களென்ரால்,எனக்கு உதவியாய் இருக்கும்.

இனியா நல்லா எஞ்ஞாய் பன்னுங்க‌. ஊட்டில‌ சீசன்க்கு போனா நல்லவெ ரசிக்கலாம், நார்மலா போனா தங்குர‌ இடத்தில் இருந்து வாங்குர‌ பொருள் வரை கொஞ்ஞம் சிலவு கம்மியா இருக்கும். ஆனால் சீசன் இல்லாத் நேரம் எப்போ மழை பெய்யும், எப்ப‌ சுல்லுனு வெயில் அடிகும்னு தெரியாது. நாஙலும் ஒரு சீசன் இல்லாத நேரம் போனோம், காலையில் செம‌ வெயில், நைட் ரொம்ப‌ குளிர். எப்படி ஆனாலும் நல்லவே எஞ்ஞாய் பன்னலாம். பார்க்க‌ ரசிக்க‌ நிறைய‌ பிளேஸ் இருக்கு. நாங்க‌ ஒரு காட்டேஜ்ல‌ தான் தங்கி இருந்தோம், ஊட்டி போகும் வழியில் நிறைய‌ வீடுகளுக்கு நடுவில், சின்ன‌ பெட்டிக்கடை இருந்ததால் அதிஅவசியமானதை வாங்கிக‌ முடிந்தது. காட்டேஜ் பராமரிப்பவரே தேவையான‌ நேரம் 2 மணி நேரம் முன்பே சொன்னால் நன்றாக சமைத்து அவர்கள் வீட்டில்லிருந்து கொன்டு வந்து தருவார், அதற்கு எக்ஸ்டிரா சார்ஜ்.

கண்டிப்பா குழந்தைகளுக்கு ஸ்வட்டர், சாக்ஸ்‍‍ 2 செட், கையுறை,தலை தொப்பி (ஸ்வட்டர் குல்லா),ஹீல்ஸ் இல்லாத‌ வழுக்காத‌ செருப்பு, விக்ஸ், சில‌ காய்சல், ஜலதோஸ‌ மருந்துகள், இது போக‌ நல்ல‌ குளிர் தாங்கும் போர்வைகள் கொன்டுப்போங்க‌. மழை நேரம் என்றால் குடையை மறக்காதிங்க‌. என் குழந்தைகளுக்கு குளிர் தாங்காமல் கால் பிடித்துக்கொண்டது.

மிதமான குளிருடன், அழகான‌ பூக்களையும், அடற்ந்த‌ காட்டையும் ரசிக்க‌ வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு டூர்கைடு பிளாக்(blog) பாருங்க‌.

மேலும் சில பதிவுகள்