சலங்கை பணியாரம்

தேதி: February 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பாசிப்பயறு - ஒரு கிலோ (அ) 5 கப்
புழுங்கல் அரிசி ‍- ஒரு கப்
பச்சரிசி - 2 கப்
பொட்டுக்கடலை - ஒன்றரை கப்
வெல்லம் ‍- ஒரு கிலோ
எள் ‍- 50 கிராம்
எண்ணெய் - பொரிக்க‌


 

பாசிப்பயறை வெறும் வாணலியில் சிவக்க‌ வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பயறை சுத்தமான‌ தரையில் வைத்து அம்மி குழவியால் அதன் மேல் தேய்த்தால் தோல் தனியாக நீங்கிவிடும்.
பிறகு அதனை சுத்தமாக‌ப் புடைத்து வைக்கவும். (ஒரு சிலவற்றில் தோல் நீங்காமலும் இருக்கும்).
புழுங்கல் அரிசியை நன்கு சிவக்க‌ வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த புழுங்கல் அரிசியுடன் தோல் நீக்கிய‌ பயறு, பொட்டுக்கடலை ஆகியவற்றை மிஷினில் கொடுத்து மாவாக‌ அரைத்து சலித்து வைக்கவும். . (அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியில் அரைக்கலாம்).
வெல்லத்தை கரைத்து வடிகட்டி இளம் பாகாக‌ காய்ச்சவும். (கம்பி பதமெல்லாம் தேவையில்லை. நன்கு கொதித்தால் போதும்).
மாவுடன் எள் மற்றும் வெல்ல‌ப்பாகு சேர்த்து கலந்து பிசைந்து, சீடை போல‌ உருட்டிக் கொள்ளவும். (பிசைந்த‌வுடன் உருட்டவும். இல்லையெனில் மாவு பொல‌பொலவென்று உருட்ட‌ முடியாமல் போய்விடும். அப்போது சிறிது பாகு கலந்து பிசைந்து கொள்ளலாம்).
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற‌வைத்து அரைத்து தோசை மாவு போல‌ சற்று நீர்க்க‌க் கரைத்து, அதில் உருட்டி வைத்த உருண்டைகளை தோய்த்தெடுக்கவும்.
அதனை சூடான‌ எண்ணெயில் போட்டு பொன்னிறமாக‌ப் பொரித்தெடுக்கவும்.
சுவையான‌ சலங்கை பணியாரம் தயார்.

பச்சை பயறை தோல் நீக்க‌ மிக்ஸியிலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம் . ஆனால், பொடியாகக் கூடாது.

தோல் நீக்கிய‌ பயறு ஒரு படி (4 கப்), பொட்டுக்கடலை கால் படியைவிட சற்று அதிகம், புழுங்கல் அரிசி கால் படி. இது என் பாட்டி சொல்லி தந்த‌ அளவு. (இதை நான் கப் அளவாக‌ மாற்றியுள்ளேன்).

இந்த பணியாரத்தை சூடாக‌ சாப்பிடுவதைவிட‌ இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டால் சுவை அலாதியாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல‌ குறிப்பு... இந்த‌ மெதட்லாம் ரொம்ப‌ வித்யாசமா இருக்கே.. எந்த‌ ஊர் ரெசிபி இது ... கடசி கப் ல‌ இருகுறதுல‌ ஒரு 5 பீஸ் ப்ளீஸ் .. :‍)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பெயரே வித்யாசமா இருக்கே சலங்கை முத்து போல இருக்கறதால இந்த பெயரா ப்ரியா. சக்கரை சீடை போலவே இருக்கு உடனே டேஸ்ட் பண்ணனும் போல இருக்கு. ட்ரை பண்ண போறேன் ப்ரியா

ப்ரியா சலங்கை பணியாரம் பார்த்தாலே தெரியுது ருசியா இருக்கும்ணு. ஆனா வேலை கொஞ்சம் அதிகம் போல இருக்கு. அதை அப்படியே பார்சல் அனுப்பிடுங்க :) மேன்மேலும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்லா இருக்குங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

உங்க சலங்கை பணியாரம்,எங்க அம்மா செய்யும் முந்திரி கொத்தை நினைவூட்டி விட்டது,பாசி பயறு வறுத்து தோல் நீக்கி,கருப்பட்டி பாகு,ஏலக்காயுடன்,வறுத்த தேங்காயும் சேர்த்து உருட்டி 2 நாள் உலரவைத்து,மைதா கலவையில் தோய்த்து பொரிப்பார்கள்.
பாட்டி சொன்னதாயிற்றே,நிச்சயம் டிரை பண்ணிடுவோம்.

கனிமொழி 5என்ன முழுவதுமே எடுத்துக்குங்க... இது எங்க வீட்டு தீபாவளி பலகாரம்.. முந்திரி கொத்துனு ஒரு ஸ்வீட் இருக்குல்ல... அதே மாதிரி தான் ஆனா சேர்க்கும் பொருட்கள் வேற...

நிச்சயம் டிரை பண்ணிட்டு சொல்லுங்க.. சுவை மட்டுமில்ல சத்தானதும் கூட

நன்றி... கொஞ்சம் வேலை தான்.. அதனால தீபாவளி டைம்ல தான் அதிகம் செய்வோம்... ஆனா கொஞ்சமா செய்வதனால் சுலபம் தான்...

நன்றி...

முந்திரி கொத்து மாதிரி தான்பா இதுவும்.. ஆனா சேர்க்கும் பொருட்கள் மாறுபடும்.... சைஸூம் சின்னதா செய்யனும். செஞ்சு பார்த்து சொல்லுங்க

அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி

சூப்பர் பிரியா சலங்கை பணியாரம் பெயரே வித்யாசமா இருக்கு. பச்சை பயிரில் கஞ்சி, பச்சை பயறு உருண்டை, இதெல்லாம் கேள்விபட்டிருக்கேன் புதுசா பணியாரம் பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு.

பச்சபயறு உருண்டை, பச்சபயறு கஞ்சி இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் பச்சபயறு கூட வெல்லம் சேர்த்து பார்க்கவே நல்லா இருக்கு ப்ரியா, தீபாவளி பலகாரமா இது. பேரும் நல்லா இருக்கு

சூப்பர் ஸ்வீட் ப்ரியா. விருப்பப்பட்டியல்ல சேர்த்துருக்கேன் நேரம் கிடைக்கும்போது செய்து பாக்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Hi

அன்பு பிரியா,

விளக்கமான‌ தெளிவான‌ படங்களும் செய்முறைகளும் கொடுத்து, அசத்தி இருக்கீங்க‌.

குறிப்பு ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

பேரும் குறிப்பும் புதுசா இருக்கு. அவசியம் செய்து பார்க்கனும். ஹெல்தி கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க குளித்தலையா நான் திருச்சி தான் பா
இப்படிக்கு
பிரியா ஆண்டோ