Iui

Iui 3 தடவை செய்தும் பலன் இல்லை. எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது ஏன் என்னால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை மனதுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு யாராவது advice தாங்கள் plz

Thanks தோழி. நீங்க ஒன்மன்த் தான் இந்த ட்ரீட்மென்ட் எடுத்திங்களா.

Aama pa 2days tha hospital ponom

Follicular study scan. வயிறின் மேல் எடுப்பாங்களா.

Folicular study கருமுட்டை பத்தினது. அதனால் அத கருப்பைலதா எடுப்பாங்க. கருப்பைல கருமுட்டையின் வளர்ச்சி அளவு பற்றி ஸ்கேன் பண்ணி பார்ப்பாங்க.

ராஜி இந்த ஸ்கேன் எடுக்கும் போது வலிக்குமா பா

அவ்ளோ வலிலாம் இருக்காது

அது ஸ்கான் தான். முழுவதாக வயிற்றின் வெளியே தான் பரிசோதனைகள் எல்லாம் நடக்கும். வலிக்கவே வலிக்காது. கருப்பைக்கு உள்ளே சோதிப்பது கிடையாது. பயப்படாதீங்க.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா எப்படி இருக்கீங்க, உங்க பதிவையல்லாம் படித்துத்திருக்கேன். உங்க பதிவு எல்லோருக்கும் தைரியம் கொடுக்கும், நா குழந்தைக்கு ட்ரை பன்றன் மா பீரியட் வந்து இன்னைக்கு 11 நாள் ஆகுதுமா எந்த நாள் சேர்ந்தால் கருபிடிக்கும் சொல்லுங்கமா.

//எந்த நாள் சேர்ந்தால் கருபிடிக்கும்// எனக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளில் இதுவும் ஒன்று. சிகிச்சை எடுக்காவிட்டால், நாட் கணக்குப் பார்க்காமல் இயல்பாக வாழ்க்கையைக் கொண்டு போனால் டென்ஷன் இராது. இயல்பாக கருத்தரிக்கும் சாத்தியம் அதிகம்.

ஒரு வேளை, கணக்கும் பார்த்து எந்த நாட்களில் கருத்தரிப்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறீர்களோ அந்த நாளே அந்த மாதம் நல்ல நாளாக இருந்துவிட்டால்!!

இதைப் பற்றி நினைக்க வேண்டாம். எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக மட்டும் பிறந்தவர்கள் அல்ல. வாழ்க்கையை ரசித்து வாழவும் பிறந்தவர்கள். சந்தோஷமா இருங்க.

http://www.arusuvai.com/tamil/node/27790 இங்கு உங்களுக்குத் தேவையான விபரம் இருக்கும்.

சிகிச்சையின் போது மருத்துவர் சொல்வதன்படி நடவுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்க 12லிருந்து 20 நாட்கள் வரை சேர்ந்து இருங்கள். மனசை ரிலாக்ஸா வச்சுக்கங்க. எதையும் குழப்பிக்காதீங்க. சந்தோஷமா இருங்க. கண்டிப்பா உங்களுக்கு அந்த இறைவன் அருளால் குழந்தை உண்டாகும்.

மேலும் சில பதிவுகள்