Iui

Iui 3 தடவை செய்தும் பலன் இல்லை. எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது ஏன் என்னால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை மனதுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு யாராவது advice தாங்கள் plz

Thanks இம்மா அம்மா ராஜி...

பீரியட் வந்து 13 ஆம் நாள் Follicular study ஸ்கேன் பன்னாங்க. 14ஆம் நாள் நேற்று ஊசி போட்டாங்க. intercors வச்சிக்கக சொன்னாங்க.ஸ்கேன் ரிப்போர்டுல ரைட் அன் சைடு கருமுட்டை நல்லா இருக்கு சொன்னாங்க. ஊசி எதற்காக என்று சொல்லல. இன்னைக்கு ஒரு ஸ்கேன் எடுக்க சொன்னாங்க பா. ஊசி எதற்கு என்று சொல்லுங்க Friends. தலை பாரமா இருக்கு இந்த ஊசி போட்டா இப்படி இருக்குமா பா.

அந்த கருமுட்டை கருவுறுவதற்கு சரியான அளவில் வெளிவர ஊசி போட்ருபாங்க. இன்னைக்கு ஸ்கேன்ல கருமுட்டை வெளிவந்து விட்டதா என்று பார்பார்கள்.

கிருத்திகா எப்படி இருக்கிங்க செக்கப்குலாம் போறிங்களா. உங்களுக்கு எத்தன ஸ்கேன் எடுத்தாங்க எத்தன ஊசி போட்டாங்க பா. முதல்ல ஊசி போட்டப்ப வயிறு லைட்டா வலிச்சுதா பா.எனக்கு அப்படி இருக்கு அதான் பா கேட்டன்.

கருமுட்டை வெடிக்க ஊசி போட்டு எவ்வளவு நேரம் கழித்து அது வெடிக்கும். சொல்லுங்க Friends ...

சராசரியாக 38 மணி நேரங்கள் (3 நாட்கள்) என்கிறார்கள். சிலருக்கு 46 மணி நேரங்கள் கூட ஆகுமாம். அது 4 நாட்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்