மீன் வறுவல்

தேதி: February 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

மீன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடலை மாவு - மூன்று மேசைக்கரண்டி
காய்ந்த ரோஸ்மெரி - அரை தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
மீனுடன் ரோஸ்மெரி, கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்த மீன்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
ரோஸ்மெரி மணத்துடன் சுவையான மொறுமொறுப்பான மீன் வறுவல் தயார்.

ரோஸ்மெரியை ஃப்ரெஷ்ஷாகவும் சேர்க்கலாம். கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்ப்பதால் மீன்களை உடையாமல் பொரித்தெடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

Super yummy..

செம‌ சூப்பர் ரெசிபி கிரிஸ்பி ஃபிஷ் ஃப்ரை ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா மீன் வறுவல் பார்க்கவே நல்லா இருக்கு, சுவையும் கூடுதலா இருக்கும்னு நினைக்கிறேன் :) ரோஸ்மெரி என்றால் என்ன ? கல்பாசி போன்றதா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி

சோனாஞ்சலி
பதிவுக்கு நன்றி

கனி
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி கனி.

அருட்செல்வி
பதிவுக்கு நன்றி செல்வி. ரோஸ்மெரி ஒரு மூலிகை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மீன் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு சாப்பிடால் எப்படி இருக்கும்.

சிம்பிள். சாப்ட்டு பார்த்து சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா நல்ல மீன் பொரியல்ங
உமா உங்களுக்கு பலாக்காயில் பலாக்காய் பிரியானி (பலா சுழையினுல் சாதம் வைத்து) சமைக்க தெரியுமாங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நன்றிங்க. எனக்கு தெரியாதே! அப்டி ஒரு பிரியாணி இருக்கதே நீங்க சொல்லித்தான் கேள்விப்படுறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

யம்மி மீன் ப்ரை... இது என்ன மீன் வகை?

சூப்பர்.... ரோஸ்மெரி ஃப்ளேவர்ட் மீன் ஃப்ரை... புதுசா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி ப்ரியா. இது சாலை மீன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி. ஊருக்கு போய் வந்துட்டிங்களா? பையனுக்கு இப்ப எப்டி இருக்கு?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா