க்வில்டு க்ரீட்டிங் கார்ட்

தேதி: March 8, 2014

5
Average: 4.3 (6 votes)

 

ஹேண்ட் மேட் பேப்பர்
O.H.P ஷீட்
க்ளாஸ் கலர் அவுட் லைனர் - கருப்பு நிறம்
க்வில்லிங் பேப்பர்
க்வில்லிங் டூல்
கத்தரிக்கோல்
மார்க்கர்
ஃபெவிக்கால்

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹேண்ட் மேட் பேப்பரை க்ரீட்டிங் கார்டின் அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ள டிசைனை அல்லது விருப்பமான டிசைனை மார்க்கரால் O.H.P ஷீட்டில் வரைந்து, அதன் நடுவில் உள்ள டிசைனில் கருப்பு நிற அவுட் லைனரால் அவுட் லைன் வரையவும்.
படத்தில் உள்ளவாறு அவுட் லைனின் உள்ளே மஞ்சள் நிற க்ளாஸ் கலரை நிரப்பவும்.
பிறகு வெளிப்புறமுள்ள டிசைனின் ஓரங்களில் ஃபெவிக்கால் தடவி கருப்பு நிற க்வில்லிங் பேப்பரை பார்டர் போல் ஒட்டி, பார்டரின் உள்பகுதியில் படத்தில் உள்ளவாறு விருப்பமான நிறங்களில் க்வில்லிங் பேப்பரில் டிசைன்ஸ் செய்து ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
அதனைத் தொடர்ந்து மஞ்சள் நிற க்வில்லிங் பேப்பரை நான்கு வளைவுகளாக மடித்து படத்தில் உள்ளது போல் ஒட்டிவிடவும்.
மீதமுள்ள இடங்களிலும் விருப்பமான நிறங்களில் க்வில்லிங் பேப்பரில் விருப்பமான டிசைனைத் தயார் செய்து ஒட்டவும்.
இதேபோல் அதன் எதிர்புறமும் விருப்பமான நிறங்களில் க்வில்லிங் பேப்பரில் டிசைன் செய்து ஒட்டிவிடவும்.
தயார் செய்த டிசைனை அதன் வடிவத்திலேயே தனியாக வெட்டி எடுக்கவும்.
வெட்டியெடுத்த டிசைனை வெட்டி வைத்துள்ள மஞ்சள் நிற ஹேண்ட் மேட் பேப்பரின் நடுவில் ஒட்டவும்.
அதன் நான்கு முனைகளிலும் க்வில்லிங் பேப்பரால் டிசைன்ஸ் செய்து ஒட்டிவிடவும். மகளிர் தின வாழ்த்தை அல்லது விருப்பமான வாசகத்தை எழுதி பரிசளிக்கலாம். அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செண்பகா... க்யூ...ட்டா இருக்கு கார்ட்.
2015ல வரும் மகளிர் தினத்திற்கு செண்பகாவுக்கு இப்படி ஒரு கார்ட் செய்து அனுப்பப் போறேன்ன்ன். ;)

அங்கே இருக்கும் மகளிர் ஐவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ அழகா இருக்குங்க‌....... மகளிர் தின‌ ஸ்பெஷல் கார்ட்..... இன்னும் நிறைய‌ க்ராப்ட் கொடுங்க‌ மேடம்... கார்விங் உங்களோடது எல்லாமெ ரொம்ப‌ அழகு...

தங்களின் கைவண்ணத்தில் உருவான‌ வாழ்த்து அட்டை மிக‌ அழகாக‌ உள்ளது. வாழ்த்துக்கள்..!!

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

அப்பாடி!! காணாமல் போனவங்க இப்படி மகளிர் தினத்துக்காவது தரிசனம் தந்தீங்களே ;) அழகான வேலை. சூப்பர் செண்பகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு பாப்பி,
ரொம்ப‌ அழகா இருக்கு. எனக்கு ஒரு கார்டு அனுப்பலாமில்லே:)

அன்புடன்,
செல்வி.