motion problem for my child

hai friends enaku female child piranthu 24 days aguthu pappaku pal athigam illathayhal lactodex tharugiren thaipal konjamathan iruku. pappa motion porathuku romba kasta padra romba ketiya paina iruku avaluku motion pompothu moochu vidamal alura pakrathuku kastama iruku dr ta sonnen avar oru syrub thanthar athai pottal pappa romba neram thongugiral kasta pattu yelupa vendi iruku so antha syrub tharathukum bayamaga ullathu friens. intha problemku enna pandrathu en kavalaiya nengathan friends en kavalaiya therthu vaikanum my baby ku free motion poganum and any other health tips irunthalum sollungal

நாங்க என் பொண்ணு பிறந்து 11 நாளில் இருந்தே நாட்டு மருந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... பாப்பா டாய்லெட் போகலைனால் ஒரு வசம்பை விளக்கில் சுட்டு அதை ஒரு கல்லில் இழைத்து குழந்தையோட தொப்புளில் கொஞ்சம் தடவி விட்டு விட்டு கொஞ்சம் விரலில் எடுத்து குழந்தையோட நாக்கிலும் தடவி விடுவாங்க... ஆனால் குழந்தை சிரமபட்டு போறானால்

தாய்ப்பால் குடுப்பதால் நீங்க சாப்பிடும் உணவுமுறை குழந்தைக்கும் ரியாக்ட் ஆகும்னு சொல்லுவாங்க. அதானால நீங்க நிறைய தண்ணீர் குடிங்க, அப்பறம் தாய்ப்பால் நன்கு சுரக்க அறுசுவையிலேயே நிறைய டிப்ஸ் சொல்லிருப்பாங்க... பார்முலா மில்க் குடுத்தாலும் தாய்ப்பால் குடுக்கவே அதிகம் முயற்சி பன்னுங்க...

3 மணி நேரத்திற்க்கு ஒரு முறை பால் குடுக்க சொல்லுவாங்க... அதை பாலோ பன்னுங்க... குழந்தை தூங்குறானு குடுக்காமல் விட்டுடாதீங்க... அப்பறம் குழந்தைக்கு 30 மில்லி தண்ணீர்க்கு 1 ஸ்கூப் பால் பவுடர் ரேஷியோ தான் சொல்லுங்க... நீங்க அதுக்குமேல் திக்கா குடுக்காதீங்க...

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் வயதான பெரிவர்களை கேட்டு பாருங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

உங்க குழந்தைக்கு உரம் மருந்து கொடுத்தீங்களா, குழந்தையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெது வெதுபான நீரில் குளிக்க வையுங்கள், ஏன் என்றால் குழந்தைக்கு சூடு கூட ஒரு காரணமாக இருக்கலாம், நீங்க குளிக்க வைச்சீங்க அந்த சூட்டை தனிக்கும் அதுமட்டுமல்லாமல் குளித்த முடித்தவுடன் உரம் மருந்து இழைத்து ஒரு பாலாடையில் தாய்பாலில் அந்த உரம் மருந்தை கலந்து கொடுங்கள்.

உரம் மருந்து என்னவென்றால் அது நாட்டு மருந்து கடையில் கேட்டால் கிடைக்கும், அதில் வசம்பு மட்டும் கொஞ்சமாக இழைத்து கொடுங்கள், நாட்டு மருந்து கடையில் குழந்தைக்கு உரம் மருந்து வேண்டும் என்று கேட்டால் ஒரு கவரில் எல்லா மருந்தும் பாக்கெட் போட்டு இருக்கும். இது மாதிரி குழந்தைக்கு கொடுத்து வந்தால் இந்த மாதிரி மோசன் பிரச்சனை, அப்புறம் வயிற்று வலி எந்த பிரச்சையும் இருக்காது, குழந்தையும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

thank u frnds

water kudutha motion konjam loose ah pogum. ila dr kita kaeta drops tharuvanga.

மேலும் சில பதிவுகள்