தேதி: March 13, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - அரை கிலோ (ஏதேனும் ஒரு வகை)
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
புளிக்கரைசல் - ஒரு கப்
தேங்காய் - 3
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மீனைச் சுத்தம் செய்து உப்புத் தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து நசுக்கி வைக்கவும்.

தக்காளியுடன் ஒரு பச்சை மிளகாய் மற்றும் தேங்காயைச் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கிய பூண்டு, கடுகு, வெந்தயம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் மீனைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, கொத்தமல்லித் தழை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து சிறு தீயில் வைத்து குழம்பு கெட்டியாகும் வரை (10 நிமிடங்கள்) கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான மீன் குழம்பு தயார்.

சிறிய மீன் வகையாக இருந்தால், குழம்பு கொதித்தவுடன் மீனைச் சேர்க்கவும்.
Comments
Hai
Very nice musi. You made this in salmon fish? Looks yummy.
முசி
சூப்பரா இருக்குங்க மீன் குழம்பு. என்ன மீன் இது? ரெட் கலரா இருக்கு!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
இதுக்குப் பேரு ரெட் சால்மன் மீன்,வெள்ளைக்காரங்க அதிகமா உணவில் சேர்த்துக்குவாங்க. ஒமேகா 3 அதிகம் உள்ளது.
முசி
எங்க வீட்டிலும் வாரம் இரு முறை இந்த மீன் குழம்பு தான்,ஆனால் சால்மனுக்கு நான் தேங்காய் சேர்ப்பதில்லை,
ஒரு சந்தேகம் முசி மீன் குழம்பிற்க்கு சாம்பார் தூள் சேர்த்துள்ளீர்களே! அதில் பெருங்காயம் இருக்குமே. வாசனை வித்தியாசமாக இருக்காதா?
musi
சாரி முசி, ஏதோ நியாபகத்தில் வனிக்கு நான் பதிலளித்து விட்டேன்.
musi
மீன் குழம்பு குறிப்பு அருமை :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நன்றி.
குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிர்க்கு,நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சோனா அஞ்ஜலி
மிக்க நன்றி,சால்மன் ஃபிஷ்சே தான்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி
மிக்க நன்றி,எனக்கு பதில் வாணி பதில் சொல்லிட்டாங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
vaniselwyn
சால்மன் மீன் மதுரை யில் எங்கு கிடைக்கும்
வாணி
மிக்க நன்றி,வனிக்கு பதில் அளித்தற்க்கு ஸ்பெசல் நன்றி,சாம்பார் தூள் சேர்த்து செய்வது வனியின் ஐடியா தான்,அவங்களோட எதோ ஒரு குழம்பில் சாம்பார் தூள் சேர்த்து செய்து இருந்தாங்க.நான் ரெடி மேட் சாம்பார் தூள் உபயோகித்தேன்,அதனால் பெருங்காயத்தூள் வாடை தெறியவில்லை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அருட்செல்வி
வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Musi
Super..pakave arumayarku...
Kalam pon ponrathu
Super..pakave
Super..pakave arumayarku...valthukal
Kalam pon ponrathu
ஜெனி செல்வின்,
சால்மன் மீன் மதுரையில் எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியலை தோழி, தென்னிந்தியாவில் கிடைப்பது அரிது தான் என்று நினைக்கிறேன்.
vaniselwyn
நன்றி
முசி, வாணி - சாம்பார் பொடி
இந்த பதிவை இப்போ தான் பார்க்கிறேன் ;) சாம்பார் பொடி நான் பயன்படுத்துவது வீட்டு தயாரிப்பு. முறை அறுசுவையில் கொடுத்திருக்கேன். அதில் பெருங்காயம் இருக்காது. அதனால் அது தான் நான் எப்போதும் அசைவத்துக்கும் பயன்படுத்துவது. :)
http://www.arusuvai.com/tamil/node/16543
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
help
easy ice cream thank u. iam in salem yanaku tailoring learn saiyanum idea pz