தக்காளி தோசை

தேதி: March 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

இட்லி மாவு - 2 கப்
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 5
வரமிளகாய் - 6 ‍(அ) 8
சீரகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு - சிறிதளவு
எண்ணெய்


 

மிக்ஸியில் சின்ன வெங்காயத்துடன் வரமிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நைசாக‌ அரைக்கவும். (நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைக்கவும்‌). அதனுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் இட்லி மாவைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் நன்கு கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி கலந்து வைத்துள்ள மாவை தோசையாக‌ ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
சிவந்ததும் மெதுவாக‌ திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும். (தோசை மொறுமொறுப்பாக இல்லையெனில் மேலும் சிறிது இட்லி மாவு சேர்த்துக் கொள்ளவும்).
சூடான‌ தக்காளி தோசை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ப்ரியா அக்கா,
கலர்புல் தக்காளி தோசை சூப்பர், அன்ட் ஈஸி டிப்ஸ் ,
இன்னைக்கு நைட்டே அம்மாகிட்ட‌ சொல்லி செய்யசொல்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சம கலர்ஃபுல் தோசை... டேஸ்டியாவும் இருக்கும்னு நினைக்கிறேன், அவசியம் செய்துடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு பிரியா,

தக்காளி தோசை = வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சுலபமாக‌ செய்யக்கூடிய‌, ஒரு வித்தியாசமான‌ குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நானும் இப்படித்தான் செய்வேன் என் மகளுக்காக, ரெட் தோசை என்று சொல்லிக் கொண்டே உண்பாள்.
படங்கள் அருமை

ப்ரியா தோசை அருமை, ரொம்ப ஈஸியாவும் இருந்துச்சு. இதே காம்பினேஷனோட சாப்பிட்டோம். சேம் போட்டோ நானும் எடுத்து வச்சிருக்கேன். தக்காளி தோசை தேங்காய் சட்னி.

தக்காளிதோசை கலர் கலக்குது, வாழ்த்துக்கள் ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

priya Sister, Colour full & Easy Dish ah செய்முறை சொல்லிருக்கீங்க‌ கண்டிப்பா Try பன்ற,,,,,

Yours Lovable
Maha

Hai Priya sister கலர்புல் தோசை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

இன்று காலை செய்து சாப்பிட்டேன். ரொம்ப வாசமா இருந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சுது. சுவையான குறிப்புக்கு நன்றி பிரியா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று காலை டிப்பனுக்கு செய்து பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்