சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

தேதி: March 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

இது வழக்கமான பாசுமதி ரைஸ் கொண்டு செய்யாமல், ப்ரவுன் ரைஸ் கொண்டு செய்யப்பட்ட சத்தான, சுவையான ப்ரைடு ரைஸ்.

 

ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
சிக்கன் - 100 கிராம்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 5
சிவப்பு குடைமிளகாய் - பாதி
பேபி கார்ன் - 2
தக்காளி - ஒன்று
வெள்ளை வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
கருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பேபி கார்னையும், பச்சை மிளகாயையும் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாகவும், வெங்காயத்தை நீளமாகவும் நறுக்கி வைக்கவும். சிக்கனைச் சுத்தம் செய்து சிறிது உப்புச் சேர்த்து வேகவைத்து உதிர்த்துக் வைக்கவும்.
அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 8 விசில் வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காய்கறிகளையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்த சிக்கனைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் ஆறவைத்த சாதத்தைச் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு கிளறிவிட்டு மூடி வைக்கவும். (அடிக்கடி கிளறிவிடவும்). சாதம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான ப்ரவுன் ரைஸ் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

ப்ரவுன் ரைஸ் சத்தானது நல்ல சுவையாகவும் இருக்கும். இது வேக நேரம் அதிகமாகும். அதனால் தண்ணீரும், விசிலும் அதிகமாக விடவேண்டும்.

டயட்டுக்காக செய்ததால் சாஸ், மசாலா எதுவும் சேர்க்கவில்லை. அஜினமோட்டோ போன்ற எதுவும் சேர்க்காமலேயே நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி ரெசிபி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுலபமான சத்தான குறிப்பு,எங்க வீட்ல நான் சைனீஸ் சாஸ் வகைகள் எதுவும் அவ்வளவாக உணவில் சேர்ப்பதில்லை,இம்முறையில் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

செல்விக்கா குறிப்பு அருமை, நிச்சயம் செய்து பார்க்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சத்தான சுவையான குறிப்பு அக்கா. நல்லாருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வனி,
நன்றி வனி. சுவையாகவும் இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
செய்து பாருங்கள். நன்றாக‌ இருக்கும். நன்றி வாணி!

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா குறிப்பு அருமை, நிச்சயம் செய்து பார்க்கிறேன் :)

அன்பு அருட்செல்வி,
நிச்சயம் செய்து பாருங்க‌. நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
நிச்சயம் ரொம்பவுமே சத்தானது தான். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சரண்யா,
நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

கண்டிபா தோழி....