தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

தயவு செய்து உதவுங்கள் தோழிகளே... நான் தற்போது 6 மாத கர்ப்பமாகவுள்ளேன்...அந்த இடத்தில் (வெஜினாவில்) அரிப்பு தாங்கவே முடியவில்லை.. டாக்டரின் ஆலோசனை படி ஆயின்மென்ட் தடவியும் பார்தேன் சரியே ஆகவில்லை... வெள்ளை படுகிறது... தண்ணீர் அதிகமாகதான் குடிக்கிறேன்..அரிப்பு குறையவே இல்லை... எரிச்சலால் புண் ஆகிறது தயவு செய்து உதவுங்கள்

நான் எனது கனவருடன் சேரும் போதும் எரிச்சல் அதிகமாக இருக்கிறது

இது ஃபங்கல் இன்ஃபெக்ஷனாக‌ இருக்கலாம். மருத்துவர் கொடுத்துள்ள‌ கிரீமை தடவியும் அரிப்பு இருக்குன்னா மீண்டும் அவரிடம் கூறுங்கள். ( ஆயின்மென்ட்டை மாற்றலாம்). கொஞ்சம் மஞ்சள்(கிழ்ஹங்கு) கொஞ்சம் வேப்பிலை அரைத்து தேய்த்து குளியுங்கள். கொஞ்சம் எரியும் பட் சீக்கிரம் காய்ந்து விடும். தோல் அலர்ஜிக்கு இதுதான் சிரப்பு மருந்து. நீங்கள் இருவரும் சேரும்போது சுத்த‌ தேங்காய் எண்ணை உபயோகிங்கள் வலியும் அரிப்பும் இருக்காது. மருத்துவரிடம் காட்டி ஆயிண்மென்ட் மாற்றுவது சிறந்தது. சரியானவுடன் அங்கே முடிகளை அகற்றி சுத்தமாக‌ வைத்திருங்கள்.

அருசுவைக்கு வந்தால் என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையில் தான் பகிர்ந்து கொண்டேன்... நன்றி...

எனக்கும் முதல் கர்பத்தின்போது இப்படி இருந்தது. பின் 3 வருடம் கழித்து திரும்ப‌ வந்தது. என் அக்கா அரசு பொதுநல‌ மருத்துவர் அவர் எனக்கு Celotrimazole கிரீம் பரிந்துரைத்தார். கோவையில் கிடைத்தால் யூஸ் பண்ணுங்க‌.அவுட்டர் வெஜினா மட்டும்போடுங்க‌. அறுசுவை தோழீஸ் தெரிந்திருப்பின் கண்டிப்பா பதில் கொடுப்பாங்க‌. :‍)

தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்... நன்றி சகோதரி நான் அந்த மருந்து வாங்க பார்க்கிறேன்.....

என்னப்பா இது மன்னிப்புன்னு பேசிட்டு. தோழ்ஹீஸ் சந்தேகங்கள்,உதவின்னு கேட்கறாங்க‌.தெரிந்தவர்கள் சொல்றாங்க‌. தாமதமாக‌ பார்ப்பதற்கெல்லாம் மன்னிப்புன்னா எப்படி. அதவிடுங்க‌ இப்போ எப்படி இருக்கு?கொஞ்சமேனும் தேவலையா?திரும்ப‌ மருத்துவர‌ பார்த்தீங்களா?

இப்போ ரொம்பவே பரவாயில்லைங்க

மேலும் சில பதிவுகள்