சன்னா/கொண்டைக்கடலை மசாலா

தேதி: November 24, 2006

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக்கடலை - கால்கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி ஊப்புத்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கடலையில் கால் கோப்பை தனியாக எடுத்து வைத்து கரண்டியின் உதவியால் நன்கு மசித்துக் வைக்கவும்.
காய்ந்தமிளகாய், சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிறகு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் கலந்து ஊற்றி காயவைக்கவும்.
பிறகு வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும் பொடித்த சீரக தூளையும் சேர்த்து நன்கு வதக்கி தக்காளியைக் கொட்டி உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு வேகவைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து கொட்டி நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் மசித்து வைத்துள்ள கடலையை போட்டு நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியை தூவி அதையும் நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
பூரியுடன் சூடாக பரிமாறவும்.


சன்னா மசாலாவை விருந்துக்களுக்கு தயார் செய்யும் பொழுது ஒரு நபருக்கு ஒரு கையளவு என்ற அளவில் கடலையை ஊறவைத்து செய்தால் சரியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hai manohari
I did this recipe and it was very tasty.
Thank u.

sajuna

Thank you Dear.

மனோகரி அக்கா நேற்று இந்த மசாலா தான் சப்பாத்திக்கு செய்தேன்,சுவையாக இருந்தது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேணுகா, ஆமாம் இந்த கடலை மசாலா சப்பாத்திக்கும் நல்ல பொருத்தமாக இருக்கும், செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

மனோகரி அக்கா, இந்த மசாலாவை உங்கள் குறிப்பின்படி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. செய்வதற்கும் எளிதாக இருந்தது. உங்கள் பட்டூராவுடன் சப்பிட்டோம். சூப்பர். நன்றி உங்களுக்கு.

நன்றி வானதி, இந்த மசாலா நீங்க சொன்னதுப் போல் பட்டூராவிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும், இந்த குறிப்பைச் செய்து குடும்பத்தினருக்கு பரிமாறியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

மேடம் பட்டூராவோடு இந்த சென்னா மசாலாவும் செய்தேன்.நான் எப்பொழுதும் செய்வதை விட வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது,நன்றி மேடம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அக்கா சென்னா மசாலா புது சுவையுடன் நன்றாக இருந்தது. பட்டூராவுக்கு ஏற்ற சரியான சைட் டிஷ். அக்கா நான் கொத்தமல்லி மட்டும் சேர்க்கல. ஏனென்றால் என் வீட்டுக்காரருக்கு பிடிக்காது. வீட்டில எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க. நன்றி அக்கா.