நான் இந்த தளத்தில் பதிவுகள் இட்டு பல நாட்கள் ஆகி விட்டன. நான் சில வருடங்களுக்கு முன்பு எனது இரண்டு குழந்தைகளை SMA என்கிற கொடிய நோய்க்கு இழந்ததை பற்றி பதிவு செய்திருந்தேன்.
மருத்துவர்கள் அடுத்த குழந்தைக்கும் இந்த நோய் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கும் படி கூறுகின்றனர். அல்லது கருதரித்து இரண்டாவது மாதம் சோதனை செய்து முடிவு பாசிடிவ் என்றால் அபார்ஷன் செய்ய சொல்கின்றனர். எங்களுக்கு கருவில் ஒரு உயிரை கொல்ல விருப்பம் இல்லை. எனவே நாங்கள் தத்து எடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பல இடங்களில் முயற்சித்து பலன் இல்லை. எங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமும் கூறியுள்ளோம்.
கருனை இல்லங்களை தொடர்பு கொண்டாலும் அவர்கள் குழந்தை தற்போது இல்லை என திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
குழந்தை இல்லாத பெற்றோர்களையும், பெற்றோர் அன்புக்கு வாடும் குழந்தைகளையும் கூட சேர விடாமல் சில பணப்பேய்கள் தடுக்கின்றனர்.
அனைத்து துறைகளிலும் புகுந்த லஞ்சம் எனும் வைரஸ் இப்போது தத்தெடுக்கும் மையங்களிலும் புகுந்துள்ளது.
ஒருமாத குழந்தை 2,00,000 ரூபாய் பிறந்த உடனா 2,50,000 ரூபாய் ஒரு வயத்துக்குள் கேட்டால் 1.50.000 ரூபாய் என் விலை பேசுகிறார்கள்.
தர மறுத்தால் குழந்தை இல்லை என அனுப்பி விடுகின்றனர் அல்லது உங்க ஏரியா பக்கம் பாருங்க என்பது தான் பதில்.
நாங்கள் உண்கின்ற உணவோடு எங்கள் அன்பையும் ஊட்டி வளர்க்க ஒரு வாரிசை தேடுகின்றோம்.
எங்களை விட்டு பிரிந்த இருவரும் தேவதைகள் என்பதால் முதலில் ஒரு பெண் குழந்தையை எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு இடத்திலும் முயற்சித்து எங்களுக்கு மிஞ்சுவது எங்கள் கண்களில் சில துளி கண்ணீர்கள் மட்டுமே
இந்த தளத்தை பார்வையிடும் யாராவது ஒருவர் மூலமாக எங்களுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நாங்கள் அதிகம் நம்புகின்றோம்.
அவன் தடுத்தவற்றை எவராலும் கொடுத்து விட முடியாது.
அவன் கொடுக்க நினைத்து விட்டால் அதை தடுக்க எவராலும் முடியாது.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பாத்திமா அக்கா,
பாத்திமா அக்கா,
கண்டிப்பா உங்களுக்கு ஒரு குட்டி தேவதை சீக்கிரம் கிடைக்கும். நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்.
உங்களோட நல்ல மனசுக்குகாகவே பாப்பா கிடைக்கும்.
ம்ம் ஆமாம் அக்கா எல்லா பக்கமும் லஞ்சம் தான்,
அக்கா நீங்க உங்களுக்கு தெரிந்த பக்கத்தில இருக்க ஆஸ்பிட்டல் சொல்லி வைங்க அக்கா, அங்க நிறைய பேரு 2,3 வது பெண் குழந்தையா பிறந்தா வேண்டாமுனு தத்துக்கொடுக்கிறாங்க,
மெயினா G.H ல, இது மாதிரி நிறையா இருக்கு.
இப்ப சமீபத்துல எங்க ஏரியால கூட அது மாதிரி ஒரு அக்கா அடாப்ட் பண்ணி இருக்காங்க.
\\\\அவன் தடுத்தவற்றை எவராலும் கொடுத்து விட முடியாது.
அவன் கொடுக்க நினைத்து விட்டால் அதை தடுக்க எவராலும் முடியாது.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.\\\\
கண்டிப்பா உங்களுக்கு ஒரு குட்டி தேவதை சீக்கிரம் கிடைக்கும். நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நன்றி சுபி
உங்கள் பதிவுக்கு நன்றி. அரசு மருத்துவமனைகளில் சொல்லி வைக்க அங்கு தெரிந்த மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் இருக்க வேண்டும் அல்லவா?
நான் எனக்கு இரண்டாவது பிரசவம் நடந்த வீட்டின் அருகில் உள்ள சிறிய தனியார் கிளினிக்கில் சொல்லி வைத்து உள்ளேன்.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பவர்கள் இப்படி தருவது அரிது இருந்தாலும் வந்தால் தெரிய படுத்துகிறோம் என்று கூறுகின்றனர்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
குழந்தை தத்தெடுப்பு
குழந்தை தத்தெடுப்பு சம்பந்தமாக உங்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து உதவுங்கள் தோழிகளே
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
ஃபாத்திமா
ஃபாத்திமா... இந்த இழையை பாருங்க, உங்களுக்கு உதவலாம்.
http://www.arusuvai.com/tamil/node/23969
நீங்க வசிப்பதும் சென்னை தானா? தெரிந்தவர்களிடம் சொல்லி கேட்டுப் பார்க்கிறேன் ஃபாத்திமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனிதா அக்கா
நான் சென்னையில் தான் இருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் நன்றி.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
இப்படி பட்ட பண பேய்களை வளர்த்து விட்டால் நாடு சுடுகாடுதான்
http://www.tn.gov.in/adoption/regform.htm இந்த தளத்தில் நாங்கள் பதிவு செய்து பல நாட்கள் ஆகி விட்டன. எந்த தகவலும் இல்லை. நாங்கள் விண்ணப்பித்திருந்த எக்மோர் ஆதரவு இல்லத்தை தொடர்பு கொண்டால் இப்போது நிறுவனம் மூடப்பட்டு விட்டது என கூறினார்கள்.
அடுத்து வேறு ஒரு இல்லத்தை தொடர்பு கொள்ள இது உங்க ஏரியால கவர் ஆகாது. அருகில் உள்ள மையத்தில் தொடர்பு கொள் என பதில்.
வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றால் உங்களை விட வயது மூத்த பதிவாலர்களுக்கே இன்னும் கொடுக்க முடிய வில்லை என பதில்
இவ்வளவுக்கும் நாங்கள் பதிவு செய்த தளத்தில் இருந்து எந்த பதிலும் தகவலும் இதுவரை இல்லை.
எங்களது அண்டை வீட்டார் ஒருவரை அழைத்து வர அவர் சொன்னது இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை தருகிறோம். ஒன்றரை லட்சம் வேண்டும் என்றார்
கடன் வாங்கி குழந்தை தத்தெடுத்து விட்டு குழந்தையை வளர்ப்பதில் சிரமப்பட விரும்பவில்லை.
இப்படி பட்ட பண பேய்களை வளர்த்து விட்டால் நாடு சுடுகாடுதான்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
fathima madam
இப்படியும் நடப்பதை கேட்டால் இறைவன் மேல் கோபமாக வருகிறது. வேதனையாக உள்ளது மேடம். நீங்கள் ஏன் வேறு சில அன்பு இல்லங்களை நாடக்கூடாது? தாம்பரம் சிவாநந்தா குருகுலத்தில் கேட்கலாம். நிச்சயம் உங்கள் மனம் போல் ஒரு குழந்தை அமைய வேண்டுகிறேன்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
பாத்திமா
உங்களுக்கு நிச்சயம் குழந்தை கிடைக்கும்
நீங்கள் உங்கள் அறிந்த அறியாத அனவைரிடமும் கூரி வையுங்கள் அவர்கள் உதவளாம்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
Fathima அக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்.. நீங்கள் சொல்வதை கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது... நிச்சயம் அல்லாஹ் எந்த ஒரு உயிரையும் அதன் சக்திக்கு அதிகமா சோதிப்பது இல்லை... நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்.. நானும் உங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்னால் ஆன முயற்சிகளையும் செய்கிறேன்... விரைவில் எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து உங்களுக்கு பதில் தருகிறேன் அக்கா வருத்தப் படாதீர்கள் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
பரிதா, ஜன்னத், அஷ்விதா உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு.
பரிதா, ஜன்னத், அஷ்விதா உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
நானும் வல்ல இறைவனிடமே ஒப்படைத்து விட்டேன். அவன் நிச்சயமாக எனக்கு நன்மையானதையே செய்வான் என நம்புகிறேன்.
தீமைகளை விட்டு விலகுவதும், நன்மைகளை புரிவதும் மகத்துவமிக்க மேன்மை பொருந்திய எல்லாம் வல்ல இறைவனை வேறு எவராலும் இயலாது.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.