ரெட் வெல்வெட் சீஸ் கேக்

தேதி: March 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

கேக் கலவைக்கு:
மைதா - முக்கால் கப்
வெண்ணெய் (உப்பில்லாதது) - அரை கப்
கொக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி
பொடித்த சீனி - ஒரு கப்
முட்டை - 2
வினிகர் - ஒரு தேக்கரண்டி
செர்ரி ரெட் கலர் - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பட்டர் பேப்பர்
சீஸ் க்ரீம் கலவைக்கு:
பிலோடெஃபியா சீஸ் க்ரீம் - 8oz (அ) அரை கப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பொடித்த சீனி - 3 1/2 மேசைக்கரண்டி


 

வெண்ணெய், சீஸ் க்ரீம், முட்டை ஆகியவற்றை குளிர் சாதனப் பெட்டியிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியில் எடுத்து வைத்துவிடவும். அவனை 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெயையும், சீனியையும் சேர்த்து நன்கு க்ரீம் போல வரும் வரை எலக்ட்ரிக் பீட்டராலோ அல்லது நார்மல் கை பீட்டராலோ நன்கு அடித்துக் கலக்கவும்.
அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கலக்கவும்.
பிறகு செர்ரி ரெட் கலர், வினிகர், கொகோ பவுடர் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து கொள்ளவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேர அடித்துக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீஸ் க்ரீம் கலவைக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஒன்று சேர க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடித்துக் கலந்து வைக்கவும்.
பேக் செய்யும் பாத்திரத்தில் லேசாக வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பரைப் போட்டு அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவவும். அதில் கேக் கலவையில் முக்கால் பாகத்தை ஊற்றி சமப்படுத்தி, அதன்மேல் க்ரீம் கலவை முழுவதையும் ஊற்றி லேசாக ட்ரேயை தட்டினால் ஓரளவு பரவலாக இருக்கும்.
அதன்மேல் மீதமுள்ள கேக் கலவையை பரவலாக ஊற்றிவிடவும்.
அதன்மீது கத்தியால் மெதுவாக அலை போல வளைவுகள் வரைந்துவிடவும். (பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்). பிறகு முற்சூடு செய்த அவனில் வைத்து 28 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
ரெட் வெல்வட் சீஸ் கேக் தயார். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

நான் கன்வென்ஷன் அவன் வைத்திருப்பதால் அதில் 180 டிகிரியில் 28 நிமிடங்களானது. அவரவர்களின் அவனைப் பொறுத்து நேரம் வித்தியாசமாகும். ஆனால், 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளாது. எனவே தான் 28 முதல் 30 நிமிடங்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம சூப்பர் :) ரொம்ப நாளைக்கு பின் வெகு ஜோரான குறிப்போடு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ய‌ம்மியாக‌ இருக்கு,நான் ஒரு கேக் பிரியை,அதனால் அவசியம் செய்து பார்க்கிரேன்.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யம்மி கேக். சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆஹா என்ன அறுமை செய்து சாப்பிட ஆசையா இருக்கு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நீண்ட இடைவெளிக்கு எனது குறிப்பை அனுப்பி இருந்தும் உடனே அதனை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனி எப்படி இருக்கீங்க?
வழக்கம்போல் முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
மிகவும் நன்றி.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

முசி எப்படி இருக்கீங்க?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மா.
அவசியம் செய்து பாருங்க.செம சாஃப்ட்டாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உமா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஜன்னத் மிக்க நன்றி மா.செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா கேக் பார்க்கும்போதே சாப்பிடதூண்டுது, வாழ்த்துக்கள்:)
நேற்று தங்களின் வாழைப்பழ‌ அப்பம் குறிப்பினை செய்தேன். மிகவும் சுவையாக‌ இருந்தது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அப்சரா,
கேக் பார்க்கவே சூப்பரா இருக்கு. உடம்பு சரியானதும் செய்து பார்க்கப் போகிறேன். சீஸ் கிரீம்னு இருக்கா? அப்பறம் கப் அளவு 100 கிராம்னு எடுத்துக்கலாமா? 2 முட்டைக்கு ஏற்ற‌ அளவுக்கு போதும்.

அன்புடன்,
செல்வி.

சீஸ் கேக்கிற்க்கு மைதா சேர்த்து செய்ததில்லை நான், மைதா சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன்,அடுத்த முறை இதை முயற்ச்சிக்கிறேன்.

அன்பு அப்சரா,

ரொம்பவும் அழகா இருக்கு ப்ரசன்டேஷன், சுவையும் அமோகமா இருக்கும்னு நினைக்கிறேன், பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அருமையா இருக்கு விருப்பட்டியில் சேர்த்துட்டேன் என் பொண்ணுக்கு எக்ஸாம் முடியவும் செய்ய சொல்லனும் பிள்ளைகளை கேட்டேன்னு சொல்லுமா