முட்டை மசாலா

தேதி: November 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

முட்டையை சைவத்தில் சேர்த்ததில் இருந்து(?!), இப்போது முட்டை என்பது அனைத்துத் தரப்பினரும் விரும்பி சாப்பிடும் உணவாகிவிட்டது. முட்டையக் கொண்டு விதவிதமான உணவுகள் தயாரிக்கலாம். இங்கே உங்களுக்காக முட்டை மசாலா செய்வது எப்படி என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல முட்டைக் குறிப்புகள் அவ்வப்போது இங்கே இடம்பெறும்.

 

முட்டை - 5
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

தேங்காயைத் துருவி அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொண்டு, தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து எடுத்து மேல் ஓட்டை நீக்கிவிட்டு இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அத்துடன் நறுக்கின தக்காளி சேர்த்து சுமார் 4 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கவேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், சோம்பு தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து பிரட்டி விடவும்.
நன்கு பிரட்டி விட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும். குழம்பு போல் மாறி சற்று சுண்டும் வரை வேகவிடவும்.
சிறிது சுண்டியவுடன் இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டை துண்டங்களை அதில் இட்டு நன்கு பிரட்டி விடவும்.
மசாலா நன்கு முட்டையில் சேரும் அளவுக்கு சுமார் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி விடவும்.
இப்போது சுவையான முட்டை மசாலா தயார். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டா போன்ற சிற்றுண்டிகளுக்கும் பக்க உணவாக சேர்த்து கொள்ளலாம்.
இந்தக் குறிப்பினை வழங்கி இதனை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. முத்துலெஷ்மி ஜெயராஜ் அவர்கள். சமையல் துறையில் நீண்ட அனுபவம் உடையவர். மிகவும் ருசிபட சமைக்கக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hello Madam
This site is helping me a lot i got married August 2006 and came to London , I tried u'r chicken kuruma too That too came out very well i like u'r recipe , its simple and easy to prepare
thank u so much ...

யாழ் அவர்களுக்கு, மிக்க நன்றி. இந்த இணையத்தளம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தாங்கள் தெரிவித்து உள்ள கருத்து எங்களுக்கு மிகவும் உற்சாகம் தருகின்றது. உங்களின் பாராட்டுகளை திருமதி. முத்துலெட்சுமி ஜெயராஜ் அவர்களிடம் தெரிவிக்கின்றோம். அவர் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Dear admin sir,

its very useful to me and i never skipp one day
to view this site i tried one or tow recepies from this it came out well.usually i used scared about trying new new dishes though i am interested in it but now on seeing this site i am more confident to cook any type of dishes.yes today itried tomato guruma withou using onion.it came out well and my husband was very much enjoying it i want to share this recepie to our arusuvai viewers how can i? admin sir can u help me.i dont have tamil font shall i give u in english.

KEEP SMILING ALWAYS

I ve been in it for quite long,, ive tried a lot more from it,though nothin was missed. Its really happy to have kinda web for tamil recipes, especilly like me people in abroad as single,, much appreciated..

Regards admin team

RAVI

RAVI

I ve been in it for quite long,, ive tried a lot more ,though nothin was missed. Its really happy to have kinda web for tamil recipes, especilly like me people in abroad as single,, much appreciated..

Regards admin team

RAVI

Regards admin team

RAVI

RAVI

pls send all tamil samayal tips