மிதுலாவின் அப்பா - சுதர்ஷினி ரவி பிரசன்னா

அப்பா இன்று ஈவினிங் 5 க்கு கே.எஃப்.சி க்கு வந்திடுங்கப்பா, ராகேஷ் உங்ககிட்ட‌ பேசணும்னு சொன்னார்ப்பா என்று சொல்லிவிட்டு சென்ற மகள் மிதுலாவை ஒருவித‌ பயத்தொடு பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். இதுவரை தன் மகள் தன்னிடம் எதும் மறைத்ததில்லை என்று நினைத்து கொண்டிருந்த‌ ராகவனுக்கு தன் மகள் என்ன குண்டை தூக்கி போட போறாளோ என்று இருந்தது. சரியாக‌ ஈவினிங் 4.55 வத்தளை கே.எஃப்.சி யில் மகள் மிதுலாக்கு பிடித்த‌ கே.ஃப்.சி பொப்கோன் ஓர்டர் செய்துவிட்டு மனதில் திக் திக்குடன் காத்திருந்தார் ராகவன்.

லைட் நீல‌ நிற‌ சர்ட் அதற்கு மேச்சாக‌ டார்க் நீல‌ டையுடன் காதில் ஹெட் போன், கையில் ஐ பெட் மெலிதான‌ பொன்டிங் தாடியுடன் உடன் வந்த‌ அந்த‌ மாநிற‌ இளைஞ்சனை கண்டவுட‌ன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது, இவன் தான் அந்த‌ ராகேஷ் என்று உறுதியாய் நம்பியது. அதை ஆமோதிப்பது போல‌ அவனும் ராகவன் இருந்த‌ மேசையை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

ஹெலோ அங்கிள், ஐம் ராகேஷ் என்றவாறு எதிர் இருக்கையில் அமர்ந்தான், சாரி அங்கிள் உங்க‌ள இங்க‌ வரவழைத்து சிரமம் கொடுத்திட்டேன், எக்ஸ்டிரிம்லி சாரி அங்கிள் என்றவனை இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே என்று ஆசுவாசப்படுதினார்.

அங்கிள், நான் நேரடியா விசயத்துக்கு வாரென் அங்கிள் உங்க‌ மகள் மிதுலாவை ஒருதலையா விரும்புறேன், அவங்கக்கிட்ட‌ சொன்னேன் அவங்க‌ அப்பாவின் முடிவுதான் என் முடிவுனு சொல்லிடாங்க, உங்க‌ வீட்டுக்கு வந்து பேசுரேனு சொன்னதுக்கும் மறுத்துட்டாங்க, அதான் இப்படி மீட் பண்ண ...........

அங்கிள், நான் உங்க மகள் வேலை செய்யும் கம்பெனில‌ இன்டெர்னல் ஆடிடரா இருக்கேன், என் சொந்த‌ ஊர் கண்டி, அம்மா ரிட்டையர் டீச்சர், அப்பா இல்ல‌, ஒரு அக்கா டீச்சர், கல்யாணமாகி கண்டில‌ இருக்கிறாள் அம்மா அக்கா கூட‌ இருக்கா, அக்காக்கு ஒரு வயது மகன், மச்சான் பலசரக்கு கடை வைச்சிருக்கார். நான் இங்க வத்தளையில் ஒரு அறை எடுத்து தங்கி இருக்கேன். கார் லீசிங்க்ல‌ எடுத்திருக்கேன், கொழும்பில் சொந்த வீடு எடுக்க போறேன் அங்கிள், என்று படபடவென்று பேசியவனை வைத்த கண் வாங்காது பார்த்த வாரே இருந்தார் ராகவன்.

உங்க‌ அம்மாக்கு தெரியுமா? நான் அவங்க‌ கிட்ட‌ பேசணும்.

ஓ.. ஸ்வர் அங்கிள், நான் அரென்ச் பண்றேன், அம்மாக்கு தெரியும்.

இரவு 8 மணி, சக்தி டீவி தமிழ் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அதில் மனம் செல்லவில்லை, என்றுமில்லதவாறு இவ்வளவு நேரமும் தன் கண்ணிலே படாமல் இருக்கும் மகளின் மன‌ நிலையை புரிந்தவராய் அவளுக்காய் காத்திருந்தார்.

அப்பா இன்று உங்களுக்கு பிடித்த நூடுல்ஸ் செய்டேன் என்று வந்த‌ மகளின் முகத்தை கவனித்துவிட்டு, முதல்ல உட்கார் என்றார்.

அப்பா, நான்... இல்ல‌ எனக்கு.... என்று தடுமாறிய‌ மகளை, முதல்ல சாப்பிடுவோம் என்றார்,

......... சில‌ நொடி மௌனத்திற்கு பிறகு, மிது, நீ நேற்று சொன்னதையே தான் ராகேஷ் சொன்னார், நீ ஏன் ஏதோ தப்பு செய்தவ‌ மாதிரி இருக்க? என்னடாம்மா? என்ற அப்பாவை பார்த்து விசும்ப‌ தொடங்கினாள்.

இல்ல அப்பா, எனக்கு மனசுக்கு கஸ்டமா இருக்கு, நீங்க எவ்ளோ ஆசையை வைத்து இருப்பீங்க‌ என் கல்யணத்தை பற்றி நான் இப்படியெல்லாம் உங்கள கஸ்டப்படுத்துறேனே, உங்களுக்கு பிடிக்காட்டி வேண்டவே வேண்டாம்ப்பா, என்ற மிதுலாவின் கண்களில் இருந்த‌ தவிப்பு அவள் மனதில் ராகேஷ் இருப்பதை படம் பிடித்து காட்டியது.

காலை 9 மணி வத்தளை பூங்காவில் அமர்ந்து தன் நண்பன் யோகநாதனுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த ராகவனின் கையில் இருந்தது அன்றைய‌ வீரகெசரி பத்திரிக்கை.

கோபத்தில் வீட்டிலிருந்து சென்ற‌ கணவனை தேடிச்சென்ற காதல் மனைவி விபத்தில் உயிரிழப்பு, அழும் கணவன்.

ஒரு சின்ன சண்டை கணவன் கோவித்து கொண்டு குடிக்க சென்று விட‌, மனைவி செல்போனில் அழைத்து பேச‌ போதையில் அவன் பேச‌, இறுதியில் நான் இனி வர‌ மாட்டேன், எங்காவது போய் செத்து தொலைறேன் என்று வைத்த செல்போன் இரவு 2 மணி வரை ஆன்ஸர் இல்லாமல் போகவே பயந்து போன‌ மனைவி நடு ராத்திரியில் வெளியில் போய் தேட‌ வேகமாக வந்த‌ வேனில் மோதி உயிரிழப்பு. வாசித்த ராகவன் ஒரு கணம் ஆடிப்போனார், மகளை பெற்றவருக்கே அந்த‌ வலி தெரியும்.

என்னையா... முகம் பேயரைச்ச மாதிரி இருக்கு என கேட்டவாரு வந்தமர்ந்த‌ யோகநாதனை பார்த்தவர் பத்திரிக்கையை காட்டியவர் பின் தன் மகளின் விடயத்தை சொன்னார்.

அதுவரை கலகலப்பாய் இருந்த யோகநாதன், என் மகளின் நிலைமை உனக்கு தெரியும் தானே, அவள் விரும்பியவனுக்கே அவளை கட்டி கொடுத்திருந்தா இப்ப‌ நல்லா இருந்திருப்பானு நான் நினைச்சி தவிக்காத‌ நாளே இல்ல ராகவா, சாதி சொந்தம்னு பார்த்து கட்டி வைச்சா அந்த‌ குடிகார‌ பாவி நல்லா கொடுமைப்படுதிட்டான் என் பிள்ளையை, ஒன்னும் வேணாம் வானு விவகரத்து பண்ணி கூட்டிட்டு வந்து வீட்ல வைச்சிடேன், அது விரும்பின‌ பையன் கண் முன் நல்லா வாழ்ந்திட்டிருக்கான்.

குழப்பதில் ஆழ்ந்தார் ராகவன், எனக்காக தன் காதலை வெளிக்காட்டாமல் இருக்கும் மகள், உங்க முடிவு தான் முக்கியம் என்கிற ராகேஷ், காதலை எதிர்த்த‌ நண்பனின் மகளின் நிலை, பத்திரிக்கை காதல் எல்லாம் அவரை நன்றாக குழப்பின‌.

இது என் மகளின் வாழ்க்கை குழம்பி பிரயோசனம் இல்லை, தெளிவான‌ முடிவு எடுப்பதே உத்தமம் என்று அதற்கான முழு முயற்சியில் இறங்கினார் ராகவன்.

கண்டிக்கு சென்று ராகேஷின் நண்பர் வட்டம், குடும்பம் எல்லாம் நன்று விசாரித்து, மகளின் எதிர்காலம் பற்றிய‌ ஒரு முடிவோடு வந்தவருக்கு மிதுலாவின் அழுது களைத்த முகமே வரவேற்பளித்தது.

என்னம்மா என்னாச்சி? ஏன்டா அழுதியாமா? என்று பதறிய அப்பாவிடம், இல்லப்பா உங்கள கஸ்டப்படுத்திடேன்ப்பா, தேவையில்லாம‌ உங்கள அலைய‌ வைச்சிட்டேன். சாரிப்பா என்று விசும்பிய‌ மகளை சரிடா சரிடா அதை விடு, இல்லப்பா, எனக்கு அந்த‌ ராகேஷ் வேண்டாம்ப்பா.........!

அப்பா நேற்று எங்க‌ கம்பனியின் 25ஆவது ஆண்டு அனிவசரி தானே, ஈவினிங் பார்டி இருந்தது நாங்க‌ லேடிஸ் எல்லாம் 7.30 க்கே டின்னர் சாப்பிட்டு கிளம்பிட்டோம்ப்பா, ஜென்ஸ் எல்லாம் ட்ரின்க்ஸ் பண்ணிக்கொண்டிருந்தாங்க‌.

இன்று ஆபிசில் எல்லா ஜென்ஸும் நேற்று ட்ரின்க் பண்ணிட்டு போட்ட‌ டான்ஸ் பற்றி சொல்லி ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தாங்க‌, நானும் யாமினி மிஸும் சி.சி.டீ.வி கேமரால‌ பார்த்தோம்ப்பா, அதில் ராகேஷ்
குடிச்.......... ,

எனக்கு வேண்டாம், அப்பா உங்களுக்கு தெரியும் தானேப்பா எனக்கு ட்ரிங்னா அலர்ச்சினு, எனக்கு வேண்டவே வேண்டாம்ப்பா என்று விசும்ப‌ தொடங்கிய மகளை தேற்றிவிட்டு, பையன் நல்லவன் தான் கை நிறைய‌ சம்பாதிக்கிறான், பார்டினா மட்டும் குடிப்பான் மற்றபடி நல்லவன் தான் இந்த‌ காலத்தில் யார் தான் குடிக்கல‌, மகளை நல்லா பார்த்துப்பான் என்ற நம்பிக்கையோடு என்று மகளின் காதலுக்காக மனதை தேற்றிக்கொண்டு வந்தவருக்கு மகளின் வார்த்தை இன்ப‌ அதிர்ச்சியாய் இருந்தது.

இனி வேறென்ன‌, தன் மகளுக்கு நல்ல பையனா (குடிக்காத‌) பார்க்கனும் என்று மீண்டும் அதற்கான முழு முயற்சியில் இறங்கினார் ராகவன்.

Comments

ரொம்ப நல்லா இருக்குங்க... :) இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ நன்றிங்க‌
நன்றி,நன்றி

என் முதல் கதையை வெளியிட்ட‌ அறுசுவை அட்மின்க்கு எனது மனமாரந்த‌ நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கதை மிக‌ அருமை :) முதல் கதையாங்க‌, நல்ல‌ எழுத்து நடை, நல்ல‌ கருத்துள்ள‌ கதை:) மேன்மேலும் கதைகள் படைக்க‌ மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் சுதர்ஷினி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நல்ல கருத்துள்ள கதை.. அருமைங்க..
மேலும் வாழ்த்துக்கள்ங்க..

நட்புடன்
குணா

ரொம்ப‌ நன்றிங்க‌, முதல் கதைதான்ங்க.

நல்லா எழுதுறீங்கள். என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கோ.

‍- இமா க்றிஸ்

nan puthithu. enaku age26&weight52&height5.4". enathu udal migavum melithaga irukirathu. en udal edai athikarikka enna panna vendum. pls sollungalen.

ரொம்ப‌ நன்றிங்க‌, என் கதையை வாசித்திட்டு பாராட்டியதுக்கு ரொம்ப‌ நன்றி.

நன்றிங்க‌, ரொம்ப‌ சந்தொசமா இருக்கு.

சுதர்சினி அக்கா,
உங்கள் கதை எதார்த்தமாக‌ நன்றாக‌ இருக்கிறது,வாழ்த்துக்கள் அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *