உதவி ‍= ஆலோசணை தேவை

உதவி ‍காதில் சீழ் வருகிறது ,

தோழிகளே என் தங்கை காலேஜ் படிக்கிறாள், அவளுக்கு சிறு வயது முதலே ஒரு காதில் மட்டும் சீழ் வருகிறது , சில‌ நாட்கள் வரும், பிறகு அதுவே நின்று விடும்.
தலை குளித்தால் காதில் சீழ் வருகிறது. அவளால் அடிக்கடி தலைகுளிக்காமலும் இருக்க‌ முடியாது, ஏனென்றால் அவள் உடம்பு சூடு உடம்பு.

நாங்கள் சில வைத்தியங்கள் செய்தோம், சரியானது இப்பொழுது மறுபடியும் சீழ் வருகிறது.

மருத்துவரிடம் சென்றோம், சொட்டு மருந்து கொடுத்தார்கள், அப்பொழுது தெரிந்த‌ டாக்டர் காதில் சொட்டு மருந்து போடாதீர்கள், அது செவிட்டுதன்மை ஆக்கிவிடும் என்று பயம்காட்டிவிட்டார்கள். வேறேதும் மருந்தும் சொல்லவில்லை.

தோழிகளே தயவு செய்து உதவி செய்யுங்கள் ;;;;;;

இது எதனால் வருகிறது.என்ன‌ காரணம் ?
இதற்கு என்ன‌ தீர்வு ?
வீட்டு கைவத்தியம் தெரிந்தவர்களும் சொல்லுங்கள்..........

இதில் யாரும் டாக்டர் இருக்கீர்களா ? தயவு செய்து உதவி செய்யுங்கள்

தோழிகளே தயவு செய்து உதவி செய்யுங்கள் ;;;;;;

மருந்து சொல்லத் தெரியவில்லை. தடிமல் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்னும் ஒரு தடவை முன்பு போல மருந்து செய்து மாற்றிவிட்டு பிறகு காதில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளலாமோ! முயற்சி செய்து பாருங்கள்.
குளிக்கும் போது 'இயர் ப்ளக்' வைத்துக் கொள்ளலாம். கிடைக்காவிட்டால் ஒரு சிறு பஞ்சுத் துண்டை எண்ணெயில் தொட்டுப் பிழிந்து காதில் வைத்துக் கொண்டால் நீர் உள்ளே போகாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்