என்ன‌ செய்யலாம் நான்?

நான் 1992ல் திருமனம் முடித்து JUNE 1994ல‌ ஒரு மகன் பிறந்து இன்று அவன் B.E.(mech kovaiல‌ படிக்கிரறான். she basically பெந்தகொஸ்தே chiistian, but certificate படி இந்து. ஆகவே எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது ஆரம்பம் முதலே உண்டு. இதில் accidentல் காலில் அடி பட்டு 6மாதம் வேலைக்கு போக‌ முடியாமல், வேலைய‌ விட்டாச்சு. Diploma Civil engineer Pvt company. wife Diploma Civil engineer. 2007 முத்ல் GOVT JOB.என்னை துளியும் மதிப்பதில்லை..ஆகவே december 2013 divorce as per hindu act கோவையில் அப்ளை பன்னினேன்.காரனம் கோர்ட்டுக்கு போனால் எப்படியும் 2 வருடம் ஓடும், அதற்க்குள் மனது மாறாதா என்று...எங்களுக்குள் மதம் தான் பிரச்சினையே..
january 2014ல் வேறு வலி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஆனால் நான் என் மகனுக்கு போன் பன்னிய‌ போது எடுக்கவே இல்லை. பிரகு மெசெஜ அனுப்பி பேசினேன், நான் 2நாளீல் வீட்டுக்கு வந்து துணிமனி எடூக்கனும் என்று, அவனும் மனைவியும் உடனே police stationல‌ போய் complaint கோடுத்து, " இனி இவர் என் வீட்டுக்கு வர‌ கூடாது, என்னுடனோ மகனுடனோ பேச‌ கூடாது என்று சோல்ல‌, போலிசும் அப்படியே எலுதி வாஙகி கொன்டு அனுப்பி விட்டர்கள். நான் சென்னையில் வேலை பார்த்ததால் மாத்ம் ஒரு முறை மட்டும் தான் வீட்டுக்கு வறுவேன், அதனால் மகன், அம்மா செல்லம். என் மீது பாசம் இல்லை...
தற்சமயம் வேலை இல்லை, கன்டிப்பாக‌ கிடைக்கும்,கால் நன்றாகி விட்டது. 22வருடமாக‌ parents,2 brothers உடன் touch இல்லாததால் அங்கேயும் மரியாதை இல்லை..கடந்த‌ 2மாதமாக‌ எங்கே
போக‌ என்ன‌ பன்ன‌ என்று புரிய‌ வில்லை. என் வயது 50, பணம் பிறச்சினை இல்லை.
ஒரு idea please... இனி என்ன‌ பண்ணலாம்? மகனின் மனதில் என்ன‌ இருக்கும்? மகனை நினைதால் கவலையாக‌ இருக்கு. எந்த‌ ஊரில் செட்டில் ஆகலாம்? please...
muraliqs@yahoo.com

//பெந்தகொஸ்தே, chiistian, இந்து// இவை எல்லாம் மணமானதன் பின் யோசிக்கும் விடயங்கள் அல்லவே. முன்பே தெரிந்திருந்த விடயம்தானே! //கருத்து வேறுபாடு என்பது// மதம் சார்ந்ததல்ல; மனம் சார்ந்தது. அன்புதான் அனைத்துலக மதம்.

//கருத்து வேறுபாடு ஆரம்பம் முதலே உண்டு.// நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒன்று அல்லது இன்னொரு விடயத்தில் கருத்து வேறுபாடு இல்லாவிட்டால் எப்படி! அது இருக்கத்தான் இருக்கும். விட்டுக் கொடுக்க இருவருக்கும் இஷ்டம் இல்லை! அதுதான் பிரச்சினையே தவிர மதம் அல்ல.

அரசு வேலை, தனியாரிடம் வேலை... எல்லாவற்றிலும் யார் மேல் என்று ஒப்பீடு தெரிகிறதே! //என்னை துளியும் மதிப்பதில்லை.// மதிப்பது என்றால்!! புரியவில்லை!! மரியாதை கொடுப்பதா? எனக்கு இந்த விடயம் புரிவதில்லை. மனைவி, கணவன், குழந்தை என்றில்லை, யாரானாலும் அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். முதலில் உங்களுக்கு உங்கள் மேல் ஒரு மரியாதை / தன்னம்பிக்கை வர வேண்டும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

//கோர்ட்டுக்கு போனால் எப்படியும் 2 வருடம் ஓடும், அதற்க்குள் மனது மாறாதா என்று...// மனது உங்களுக்கும் மாற வேண்டும் என்று தோன்றுகிறது முரளி. //எங்களுக்குள் மதம் தான் பிரச்சினையே.// நிச்சயம் இல்லை. அதை ஒரு காரணியாகச் சொல்லிக் கொள்கிறீர்கள் இருவரும் என்பதை உங்கள் இந்த இடுகையே தெளிவாகச் சொல்கிறது. வேறு ஏதோ காரணம் இருக்கிறது. சில சமயம் காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சரியாகப் புரிவதில்லை. அதனால் இப்படி எதையாவது காரணமாகத் தாங்களே முடிவு செய்துகொள்கிறார்கள்.

ப்ரொஃபைல் பார்த்தேன். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் நிலமையைச் சரி செய்ய முயற்சித்திருந்தால் சுலபமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம். ஆனால் வேறு வழி இருக்கவில்லை என்கிறீர்கள். உங்கள் சிரமம் எனக்குத் தெரியாது. அதனால் நான் விமர்சிக்கக் கூடாது.

//இனி இவர் என் வீட்டுக்கு வர‌ கூடாது, என்னுடனோ மகனுடனோ பேச‌ கூடாது என்று சோல்ல‌, போலிசும் அப்படியே எலுதி வாஙகி கொன்டு அனுப்பி விட்டர்கள்.// ம்.. நீங்கள் வாய் மூலம் சொல்லியிருக்கலாம். மன உளைச்சலில் எழுதிக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். விவாகரத்துக்கும் விண்ணப்பித்து விட்டீர்கள். மனைவியின் உறவினர்கள் யாராவது பேசி சேர்த்து வைக்க உதவ மாட்டார்களா? ஆனால் யார் என்ன செய்தாலும் நீங்களும் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியது இருக்கும்.

//மகன், அம்மா செல்லம். என் மீது பாசம் இல்லை...// இல்லைங்க. பிள்ளைக்குப் பாசம் இல்லாமல் இராது. தெரியவில்லை; புரியவில்லை. காரணம் - தேவையாக இருந்த சமயம் உங்களிடமிருந்து அது கிடைக்கவில்லை அல்லது தவறான புரிதல். பாசம் தன்னால் வராது எல்லோருக்கும். நீங்கள் முயற்சி செய்யவில்லை. மகனோடு உங்கள் உறவு எட்ட இருந்திருக்கிறது. இப்போது அவரைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

//மகனின் மனதில் என்ன‌ இருக்கும்?// தெரியாது. ஆனால் இன்று இருக்கும் அதே மனநிலையில்தான் எப்போதும் இருப்பார் என்பது இல்லை. இந்த வயது கடந்து காலம் அனுபவங்களைக் கொடுக்க உங்களைத் தேடி வரக் கூடும். //கவலையாக‌ இருக்கு.// கவலை எதற்கு? நன்றாக வருவார். யோசிக்க வேண்டாம். பிரிவுத் துயர், தனிமையைக் கவலை என்கிறீர்கள். வேலை இல்லாமல் இருக்க முழு நாளும் இதே சிந்தனையாக இருக்கும். வேறு விடயத்தில் கவனத்தைத் திருப்பப் பாருங்கள்.

//பணம் பிறச்சினை இல்லை.// என்கிறீர்கள். அதுவும் ஒருவகையில் பிரச்சினைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதைச் சம்பாதிக்கும் முயற்சியில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனிக்காது விட்டிருக்கிறீர்கள். //22வருடமாக‌ parents,2 brothers உடன் touch இல்லாததால்// புரிகிறது உங்கள் நிலமை.

//எங்கே போக‌ என்ன‌ பன்ன‌// வாழ்க்கை எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பதில்லை. சரியாகும் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். இப்போ எங்கே இருக்கிறீர்கள்! சீக்கிரம் வேலை தேடிக் கொள்ளுங்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தை உபயோகமான விதத்தில் செலவு செய்யுங்கள். மனது குழப்பமாக இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் சரியானதாக அமைவதில்லை. அமைதியாக இருக்கும் போது யோசியுங்கள்.

//ஒரு idea please...// & //இனி என்ன‌ பண்ணலாம்?// நீங்கள்தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். //எந்த‌ ஊரில் செட்டில் ஆகலாம்?// எந்த ஊர் உங்கள் மனதுக்கு ஆறுதலைக் கொடுக்கிறதோ அந்த ஊர். ஏதாவது பொது சேவையில் ஈடுபடுங்கள். மனது ஒரு நிலைப்படும். புரியாத பல விடயங்கள் புரிய ஆரம்பிக்கும். குடும்பத்தோடு தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களை விட்டுத் தொலைவு போக வேண்டாம். உங்களுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு யாராவது இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். மெதுவே உங்கள் பெற்றோர் & சகோதரர்களோடும் உறவை வலுப்படுத்தப் பாருங்கள். அது கூட உங்கள் மனைவி மகனுக்கு உங்கள் மேல் இருக்கும் அபிப்பிராயத்தை மாற்றி வைக்க உதவும்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு நன்றி. நிங்கள் சொல்வது சரி தான். உன்மை புரிகின்றது.பணம் பணம் என்று ஒடியதில் பாசம்... மகன்.. குடும்பம் ... எல்லலாம் இலந்து விட்டென்..

மேலும் சில பதிவுகள்