engal veetil roja, kanagambaram, seetha maram, koiya maram, pappali maram apram karuveppilai ellam iruku, ellame nalla valarudhu aana roja mattum valarave illa 2 varushamachu ore oru poo thaan poothuruku.., koya marathula neraiya kai kaikum suvaiya um irukum adhil than vellaipoochi irukiradhu adhu roja chedyil vandhu ilaihalil ootai podu viduhiradhu, vetty vitalum adhe pol than irukiradhu,
naan enna seiyalam therindhal sollungal
பூச்சி போக
எனக்கும் இப்படி ஆச்சு வீட்டு செடிகளில். சீதாலஷ்மி சொன்னாங்க சாம்பலை இலை மேல் தூவினா பூச்சி போகும் என்று. நான் போடும் முன் செடியே போயே போச்சு... அதனால் முயற்சிக்கல, நீங்க ட்ரை பண்ணிப்பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanitha akka
romba nandri ungal padhivirku... naan muiyarchi seidhu paarkiren akka,
ரோஜாசெடியில் மாவு பூச்சி தாக்குதல்...
வெள்ளை பூச்சியை சப்பாத்தி பூச்சி அல்லது மாவு பூச்சின்னு சொல்வாங்க...
ஒரு லிட்டர் தண்ணீர்க்கு 2 மி.லி. என்ற அளவில் மானோகுரோட்டோபாஸ் அல்லது மிதைல் பாரத்தியான் கலந்து தெளிங்க.
எங்க நாமக்கல் மாவட்டத்துல மாவு பூச்சியை அழிக்க ஒட்டுண்ணி பூச்சி எல்லா விவசாயிகளுக்கும் கொடுத்தாங்க. இப்பொழுது எங்கள் மாவட்டத்தில் மாவுபூச்சி தொல்லையே இல்லை. குழவி இனத்தை சேர்ந்த அந்த பூச்சியானது மாவு பூச்சியின் வயிற்றை ஓட்டை போட்டு அதில் முட்டைகளை இட்டுவிடும். அந்தமுட்டையானது வெடித்து பூச்சிகள் வெளிவரும் பொழுது மாவு பூச்சிகள் செத்துவிடும்.
அன்புடன்
THAVAM