கறி வடை

தேதி: November 28, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் அல்லது பீஃப் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ
தேங்காய் (அரைத்தது) - 2 ஸ்பூன்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 3
மல்லிக்கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

முதலில் எலும்பு நீக்கிய கறியை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த தேங்காய், உப்பு, மசாலாத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, நைசாக நறுக்கிய மல்லிக்கீரை, கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


இது சாதத்துடன் சாப்பிடும் கறி வகை. தனியாக மாலை நேர சிற்றுண்டியாக, லெமன் சாறு கலந்த வெங்காயத்தோடு சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி அஸ்மா அவர்களுக்கு,
நலமா? நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் பேசி.
கறி வடை இன்று செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இனி விருந்தினர் வந்தால் இதை செய்து அசத்தி விடலாம். அருமையான, எளிமையான குறிப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம் அவர்களுக்கு,
நான் நலமே! உங்கள் உடல்நிலை எப்படியுள்ளது? அதிகமான, அருமையான குறிப்புகள் கொடுத்துள்ள நீங்கள், என்னுடைய குறிப்பையும் செய்து பார்த்து பாராட்டியுள்ளீர்கள். மிக்க சந்தோஷம். நன்றிகள் பல!

இந்த வார சமையலில் என்னுடைய குறிப்பையும் தேர்ந்தெடுத்த சகோதரி விதுபாவுக்கும் எனது நன்றிகள்!

சகோதரி செல்வி அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தான் செய்த கறிவடையை படம் எடுத்து அனுப்பியுள்ளார். உங்களின் பார்வைக்கு

<img src="/contrib/curry_vadai.jpg" alt="curry_vadai" />

செல்வி மேடம்! கறி வடை படத்தைப் பார்த்தவுடன் சாப்பிடணும்போல் உள்ளது! ரொம்ப வேகமாக களத்தில் இறங்கிவிட்டதுபோல் தெரியுது.......? :-) வாழ்த்துக்கள்!