குழப்பத்தில் உள்ளேன்.தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

தோழிகளே நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன்.முதல் மாதத்திலிருந்து எனக்கு இடது பக்க ஓவரி பாரமாக(தாங்கிகொள்ளும்படியான) இருந்தது.ஆனால் நேற்று இரவிலுருந்து எந்த ஒரு வலியும் தெரியவில்லை.எனக்கு மிகவும் பயமாக உள்ளது.இதனால் எதாவது பிரச்சனையா.யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.அது போல் உடம்பும் இந்த 3 மாதம் இல்லாத அளவிற்கு முகவும் சுறு சுறுபாக உள்ளது.தீடிரென்று இந்த மாதிரி மாற்றங்கள் தோன்றுமா? பதில் தெரிந்தவர்கள் விடை அளிக்கவும்.என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.இல்லை என்றால் நான் மருத்துவரிடம் சென்று பார்க்கலாமா?

உங்களுக்கு இருந்த அணைத்து அறிகுறிகளும் எனக்கும் இருந்தது. இப்பொழுது நான் மிகவும் நார்மல் ஆகிவிட்டேன் .3 மாதம் முடிந்தாலே நமக்கு உடல் தெம்பு வந்துவிடும். 3 மாத ஹோர்மோன் மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ள பழகிவிடும். இதனால் பயப்பட தேவை இல்லை.. எனக்கும் அப்படிதான் இருந்தது..

Thanks for your reply.naan romba itha pathi think pannite irunthen pa.unga bathil yenna relax pannirchu pa.once again thanks.

தோழிகளே நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன்.முதல் மாதத்திலிருந்து எனக்கு இதய துடிப்பு தெரிந்தது.ஆனால் நேற்று இரவிலுருந்து எந்த ஒரு துடிப்பும் தெரியவில்லை.எனக்கு மிகவும் பயமாக உள்ளது.இதனால் எதாவது பிரச்சனையா.யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.இது நார்மல் தானா.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

Neenga yepdi pa atha feel panninga?naan ithu varai oru thadava kooda heart beat ah feel pannathillai.

en stomachla kaiya vaichu patha thudikara mathiri feel pannuva, ana nethu nightla irunthu na adha feel pannala. so enaku payama iruku. Pls tell me dear friend. Its normal or not.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

நானும் 4 மாதம் தான் பா.. குழந்தையோட இதய துடிப்பெல்லாம் நம்மனால உணர முடியாது.. இருந்தாலும் எனக்கும் ஒருவித பய உணர்வு உங்கள மாதிரியே இருந்துட்டே இருக்கும்.அப்பவெல்லாம் விரல்களில நுனி விரலை அழுத்தி பிடித்து பார்ப்பேன்.. இரத்தம் ஓட்டம் அதிகமாகவும் ஹார்ட் பீட் அதிகமாகவும் இருக்கும்.. அதைவெய்து சமாதனம் ஆகிகொல்வேன்.. இப்பவெல்லாம் நான் அதிகமா பயப்படறது இல்லை.. இந்த மன அழுத்தம் குழந்தையையும் பாதிக்கும்.. அதனால் எல்லாமே நல்ல படியாக உள்ளது நு எனக்கு நானே சொல்லிப்பேன்.
நீங்களும் தைரியமாக இருங்க.. மன பலம் தான் இந்த நேரத்துல ரொம்ப முக்கியம்... ALL IS WELL...;-)

என் கணவரும் தைரியமா இருக்க சொன்னாங்க. ஆனா எனக்கு பயமாக இருக்கு. இருந்தாலும் தோழிங்ககிட்ட கேட்கலாம்னுதான் கேட்டேன். இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கு. ரொம்ப நன்றி தோழி. Take care for your health pa.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

Thank u pa.. u 2 take care.

யாரும் பயப்பட‌ வேண்டாம் குழ்ஹப்பமும் கொள்ள‌ வேண்டாம். கர்ப்பம் உறுதி பண்னிட்டீங்கண்ணா நல்ல‌ ஓய்வு,விருப்பமான‌ சாப்பாடு, உடலை வறுத்தி எந்த‌ வேலையும் செய்யாதிருத்தல்,மனதில் பாசிட்டிவான‌ எண்ணங்களை நினைத்தல். இதுவே போதும் உங்களையும் உங்கள் குழந்தையையும் நல்லா வைத்துக்கொள்ள‌. பலதும் நினைத்து குழ்ஹம்ப‌ வேண்டாம்.
மணிக்கட்டில் இருக்கும் கங்கணரேகை வாட்ச் கட்டுமிடம் நாடி துடிப்பு இருக்கும்ல‌ அங்க‌ விரல்வைத்து துடிப்பு பாருங்கள். நார்மலா ஒருநிமிடத்திற்கு 70 72 முறைகள்ன்னா. கன்சீவ் ஆகியிருக்கும்போது கூடுதலாக‌ அதாவது 80 , 90 , சிலசமையம் 100 சம்திங் கூட‌ துடிக்கும். இது குழ்ஹந்தை மற்றும் தாயின‌ மனநிலைபொறுத்து இருக்கும். ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறான‌ உடல்வாகு இருக்கும். ஒருவர்போலவே மற்றவருக்கு அறீகுறீகள் இருக்கனும்னு அவசியம் இல்லை. தைரியமான‌ தெளிவான‌ மனதுடன் தாய்மையை எஞாய் பண்ணுங்க‌.....வாழ்த்துக்கள்....:‍)

மேலும் சில பதிவுகள்