நேத்து என் கணவரின் நண்பர் வீட்டுக்கு போனேன். அந்த அக்கா தீயல்(புளி குழம்பு)வச்சிருந்தாங்க. டேஸ்ட் நல்ல இருந்திச்சு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம், அந்த அன்னனுக்கு புளியே புடிக்காது, புளிக்கு பதில் தக்காளி தான் உபயோகிக்க சொல்வாங்க அப்புறம் புளி இல்லாத புளி குழம்பு எப்படி?!!! அந்த அக்காட்டயே கேட்டுட்டேன், கொஞ்ஞமா புளி போட்டேன் ஆனா தக்காளி மட்டும் தான் போட்டதா சொல்வேன்னு சிரிச்சிடே சொன்னாங்க. அது சரி. நான் கிளம்புரப்போ நல்லா இருந்துதுனு சொன்னதுக்காக, அந்த குழம்பு ஒரு பாக்ஸில் உற்றப்பட்டு என் வீட்டிற்கே வந்து விட்டது. இது மாதிரி கண்டிப்பா எல்லார் வீட்லயும் எதோ ஒரு சமாளிப்பு நடக்கதான் செய்யும். அப்டித்தான தோழீஸ்... :)
ஆமா, கேட்க வந்ததை கேட்காம விடப்பார்தேனே., தக்காளியா, புளியா எது பெஸ்ட் உடலுக்கு??
தக்காளி Vs புளி
எனக்கு தக்காளி அலர்ஜி. புளி ஓகே. அதே மாதிரி புளி அலர்ஜியான ஆட்களுக்கு தக்காளி ஓகேயா இருக்கும். ;)
ரெண்டுல எதுவானாலும் அளவோட இருக்கிறதுதான் பெஸ்ட்.
- இமா க்றிஸ்
நிஷா
இமா அக்கா சொல்வதான் நானும் சொல்ல போறேன். எனக்கும் புளி தான் பெஸ்ட்னு தோனுது. தக்காளியை விட புளிதான் குழம்புக்கு ருசி அதிகம். அதுமட்டும் அல்ல புளி சேர்த்த குழம்பு இரண்டு நாள் வரை நல்லா இருக்கும். கெட்டு போகாது ஆனால் தக்காளி சேர்த்தது அன்றைக்கு மட்டும் தான் நல்லா இருக்கும். ஆனால் உடலுக்கு எது பெஸ்ட் என்று தெரியவில்லை.
நிஷா
இமாம்மா சொன்னதே தான். புளி அதிகம் சேர்த்துக்கிட்டால் இரத்தம் சுண்டும்னு பெரியவங்க சொல்லுவாங்க. தக்காளி அதிகம் எடுத்துகிட்டால் ஆண்களுக்கு சிறுநீரக கல் அடைப்பு போன்ற ப்ரச்சினைகள் வரலாம் என எங்கயோ படிச்சேன். அதனால எதுவானாலும் அளவோடு சேர்ப்ப்தே நலம்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
imma, bala, prema
நீங்க சொன்னது சரிதான். நான் ரென்டுமே உபயோகிப்பேன், அளவாதான் உபயோகிப்பேன். எந்த சமையலுக்கு எது தேவையொ அத உபயோகித்தால் தான் டேஸ்ட்டும், மணமும் நல்லா இருக்கும்.