
அதிகாலை கனவு பலிக்கும், பகல் கனவு பலிக்காது இது கனவுக்கான வரிகள் ....
எனக்கு அதிகமா கனவு எல்லாம் வராது, ஆனாலும் எப்பவாது வந்தாலும் அப்படி ஈஸியா மறக்காது, டிஸ்கவரி சனலில் பாம்பு பார்த்தா கனவுல பாம்பு வரும்ன்னு ஓடற ஆள் தான் நான்....சிலது நடந்துமிருக்கு,என் சம்பந்தவட்ட கனவுகள் என்ற போது இது தான் என்று புரிஞ்சுக்க முடியுது, ஆனா சம்மந்தமே இல்லாம கனவு வந்து நடந்துட்டா ரெம்பவே மனசு கஷ்டமாயிடுது.....
எனக்கு விமானம் கனவில் வந்தாலே கொஞ்சம் சிந்தனை, கவலை வந்திடும் ஏன் இப்படி வந்துச்சுன்னு, ரெம்ப வருஷம் முன்னாடி ஒரு முறை அப்படி தான் கனவு வந்துச்சு, வானத்துல விமானம் பறக்க பறக்க அங்க அங்க குண்டு வெடிக்குது, ஒரு இடத்துல பயங்கரமா நெருப்பு, எல்லாரும் தண்ணி ஊத்தராங்க ஆனா ஒரு டம்ளர் தண்ணி தான் வரிசையா ஊத்திட்டு போறாங்க, நெருப்பு குறையவும் இல்லை, அதிகமும் ஆகல .. இப்படி ஒரு கனவு, எனக்கு புரியவே இல்லை , இரண்டு நாள் அப்பறம் தெரிஞ்சது எங்கோ ஒரு நாட்டில் யூத்தம் ஆரம்பம் என்று.... கனவு புரிஞ்சிருந்தால் ஒரு நாட்டு சண்டையையே நிறுத்தி இருப்பேனேன்னு விளையாட்டா அப்ப சொன்னேன்....ஆனா அடுத்த கனவு என்னை ரெம்பவே அழ வைச்சது....

2010 ல் நடந்த மங்களூர் விமான விபத்து என்னால ஏத்துக்கவே முடியல...
நான் ஊரிலிருந்து துபாய் வர ஏர்போர்ட்டில் இருக்கேன், செக்கிங் எல்லாம் முடிந்து பிளைட்டுக்காக இருக்கும் போது ஒரு விமானம் வந்து இறங்குது, அது முழுக்க சிவப்பு கலர், என் பக்கத்துல இருக்கவங்க இதோ நம்ம போற பிளைட்டு இது தான்னு என் கிட்ட சொல்லவும், என்னால நம்பவே முடியல.. இந்த பிளைட்டா இதுல நான் ஏற மாட்டேன் , இது வெடிச்சிடும்,யாரும் போகாதீங்கன்னு அழறேன். , ஆனா யாரும் கேக்கல, நீ பயந்திருக்கம்மா ஒன்னும் இல்ல வான்னு எல்லாரும் சொல்லியும் கேக்கல, பிடிவாதமா இது வெடிக்கும் நான் வரல வர மாட்டேன்னு கடைசி வரைக்கும் ஏறல... ஆனா பிளைட் கொஞ்சம் ஏறும் போதே வெடிச்சுடுச்சு, நான் சொன்னேனே யாருமே கேக்கலயைன்னு அங்கயே அழறேன், அவ்வளவு தான் பயந்து, வேர்த்து போய் எந்திரிக்கிறேன் கனவு..அப்பாடான்னு இருந்தது.. அப்ப மணி சரியா 4.30 அதிகாலை, நம்ம ஊரில் 6 மணி...அதுக்கப்பறம் எங்க தூங்க ...பிரெண்ட் வீட்டுக்கு போன் அடிச்ச போது அவங்க சொன்னாங்க மங்களூர்ல பிளைட் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு, விடியற் காலை 6.30 க்குன்னு எனக்கு அழுகை மட்டும் தான் வருது புலம்பறேன்,இன்னிக்கு காலைல அதே நேரம் தானே எனக்கு கனவுவந்தது....ஏன் இப்படின்னு....

அடுத்து இப்ப காணாம போன மலேசிய விமானம்.. ரெம்ப நாள் கழிச்சு எனக்கு வந்த கனவு...ஆனா வித்தியாசமா இருந்தது...
என் கிச்சன் ஜன்னல் அருகில் தொட்டியில் செடி வைத்திருப்பேன், அதில் புதினா செடி வளர இடம் இல்லை என்பதால் ஜன்னலுக்கு வெளியே தொங்கி வளர்த்து கொண்டே போகுது ...அதனால் அந்த ஜன்னலை சாத்த மாட்டேன்,
வெளியே பயங்கரமாக மழை, எல்லா ஜன்னலையும் மூடுகிறேன் ஆனால் கிச்சன் மட்டும் மூட வில்லை, செடி இருக்கு என்று விட்டு விட்டு தூங்க போனேன், காலையில் எழுந்து பார்த்தால் கிச்சன் ஜன்னல் செடியோடு மூடி இருந்தது, பதறிப்போய் திறந்தேன், செடி மேலோட்டமாய் பார்த்துவிட்டு நன்றாக தான் இருக்கு என்று விட்டு விட்டேன், ஆனால் ஏதோ சரியில்லை என்று தோன்றியது, மீண்டும் தொட்டியை தூக்கி பார்த்தேன், வெளிபக்கம் இருந்த செடி இல்லை, இது கனவு தான், கண் விழித்ததும் இது தான் நினைவு வந்து கிச்சன் ஓடினேன், எல்லாம் நன்றாய் இருந்தது, மீண்டும் சிந்தனை தான்.. காலை சமையலை முடித்துவிட்டு முக புத்தகம் பார்த்த போது மலேசிய விமானம் கானவில்லை என்று கண்டதும், அதிர்ச்சியாய் இருந்தது... அடுத்தடுத்து வந்த தகவல்கள் என் செடியை தான் நினைவு படுத்தியது,
இன்னிக்கு மலேசிய விமானம் மூழ்கியதுன்னு படிக்கும் போது மனசுக்கு ரெம்பவே கஷ்டமா இருந்தது, இருந்தாலும் இந்த செய்தி பொய்யா இருக்க கூடாதான்னு மனசு ஏங்குது...
Comments
ரேணுகா
உண்மை தான் ரேணுகா சில பேருக்கு முன்னாடி நடக்க போறத அது கனவு மூலமா காட்டிடும், இது எங்கயோ நடந்த மாதிரி இருக்குனு சொல்ல தோனும், ஆனால் அது நம்ம கனவு கண்டதான் இருக்கும் எனக்கும் இப்படிதான் அடி அடி கடி நடக்கும். ஆனால் யாரிடமும் சொல்ல மாட்டேன். அது மாதிரி நீங்க கனவும் அப்படிதான் பயபட வேண்டாம் கனவை நம்மால் நிறுத்த முடியாது.
மலேசியா விமானம் காணமால் போனது எனக்கும் ரொம்ப வறுத்தமான செய்தி தான் நீங்கள் சொல்வது இந்த செய்தி பொய்ய இருக்குனும் தான் என் ஆசையும்.
ரேணு
கனவுகள் என்றால் எனக்கு சும்மாவே பயம். அம்மாவின் கனவுகள் பல நடந்திருக்கு, அதனால் அம்மகிட்ட நான் எப்பவும் ஒன்னு தான் சொல்வேன்... “அம்மா தயவு செய்து தூங்க போகும் முன் என்னை பற்றி நினைக்காதே”ன்னு ;) அட்லீஸ்ட் என்னையாவது காப்பித்திக்கலாம்னு தான். உங்களையும் என் பேரை மனசுல இருந்து அழிச்சுடுங்கன்னு சொல்ல தான் நினைச்சேன், ஆனா பாருங்க, நீங்க ஃப்ளைட்டா பார்க்கறீங்க கனவுல. அதனால இப்போதைக்கு பிரெச்சனை இல்லை. சரி சீரியஸா பேசுவோம்... இதெல்லாம் மனசுல நினைச்சு குழப்பிக்காதீங்க ரேணு, நானும் கனவு கண்டா 4 நாள் அதை நினைச்சு மனசு குழம்பி போய் இருப்பேன், இப்போ முடிஞ்ச வரை அதை விட பார்க்குறேன். நீங்களும் ட்ரை பண்ணுங்க. உண்மையோ இல்லையோ தெரியாது, கெட்ட கனவு கண்டா உடனே கண்ணை விழிக்க கூடாது, விழுச்சாலும் சாமியை நினைச்சுட்டு தண்ணி குடிச்சுட்டு படுக்கனும்னு சொல்வாங்க. செய்து பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாரதி
கனவிற்க்கு பயந்ததில்லை பாரதி, இருந்தாலும் சங்கடமான நிகழ்வுகள் நடக்கும் போது மனதிற்க்கு வலியாய் இருக்கு, ஒன்னுமே பண்ண முடியலயேன்னு.... ஊரில் கனவு வந்தால் உடனே என் மாமியாரிடம் சொல்லுவேன், அவங்க விளக்கம் கொடுப்பாங்க, புரியலன்னா வேண்டிக்குவாங்க கெட்டது வர கூடாதுன்னு,
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வனி
வனி நானே ஒரு பயந்தாங்கோலி, நீங்க என்னை மிஞ்சிடுவீங்க போல, என்னவர் கனவில் நான் காணா போனது போல் தான் கனவு வரும், எனக்கு சிரிப்பா வரும், என் தொல்லை ரெம்ப தாங்க முடியல போலன்னு:)முன்பெல்லாம் நிறையகனவு வரும் சிலது புரியாது, ஆனால் எனக்கு பிளைட் கனவில் வந்தால் நிச்சயம் பயம் வரும் எதோ பிரச்சனை வருது என்று, அது நான் போகும்பிளைட்டா இல்லை வேறயான்னு தான் தெரியாது:( ரெம்ப நாள் கழித்து வந்த கனவு தான் இது, சில நேரம் கனவு கனவாகவே இருந்தால் நலம் தானே...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
புரியாத கனவு
ஹாய்,
///////கனவு கானுங்கள்//////////நு சொன்னவர் நமது அப்துல் கலாம் அவர்கள்.இந்தியா வல்லரசு நாடாகனும் கனவு கானுங்கள்////என்றார்.நாம் கன்ட கனவினை மற்றவர்களுக்கு சொல்லிவிட்டால் அந்த கனவு பலிக்காதுனு சொல்வாங்க.உங்களுக்கு கெட்டகனவுனு தெரிஞ்ஞா சொல்லிடுங்க அது பலிக்காமல் போகும்.
நான் ஹாஸ்டலில் ப்டிக்கும்போது தலைகுளிக்க சாதம் வடித்த கஞ்சிக்கு போட்டி. சன்டை.அன்று நான் கன்ட கனவு //;ஒரு டாம்ல தண்ணிக்கு பதில் சாதம் வடிதத கஞ்சியா போகுது,நான் ஒடி ஒடி கஞ்சி பிடிக்கிறேன்////இந்த நினைக்கும் போதே சிரித்துவிடுவேன்.////////;ஒரு டம்ளர் தண்ணிர் தான் எல்லாரும் ஊத்திட்டு போறாங்க''//கனவுல கூட சிக்கனமா இருக்கீங்க.டேக் இட் ஈசிப்பா.
ரஜினிபாய்
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரேணு
அன்பு ரேணுகா,
எனக்கும் இது போல நிறைய நடக்கும். எனக்குள் ஏதோ தோன்றும். உடனே வீட்டில் எல்லோரையும் ஜாக்கிரதையாக இருக்க சொல்வேன்.
எனக்கு எப்பவுமே பஸ்ஸையோ, டிரெயினையோ மிஸ் பண்ணிடற மாதிரி கனவு வந்துகிட்டே இருக்கும். அதுக்கு என்ன அர்த்தமோ தெரியலை.
இது மாதிரி கனவு வந்தா நல்லா பிரேயர் பண்ணுங்க.
அன்புடன்,
செல்வி.
ரேணுக்கா
ரேணு கனவுல வர விஷயங்களே நம்மோட ஆழ்மனசில பதிஞ்சு போன விஷயம்னு படிச்சிருக்கேன். நியூஸ் பேப்பர், டிவி நியூஸ் எல்லாத்திலயும் நாம பார்க்கிற போது எப்படியும் இது போன்ற ஒண்ணு எப்பவாச்சும் பார்த்திருப்போம். அதனோட பிரதிபலிப்புனு நினைக்கலாம்.
நான் 11த், 12 த் ல சைக்காலஜி ஒரு பேப்பர் படிச்சேன். அப்ப அதில படித்த ஒன்று, வேலையாளுக்கு கனவில் தன் எஜமானரை போட்டு அடிப்பதாக வருமாம். ஏனா அவர் வேலையின் போது சொல்லும் வார்த்தைகள் பிடிக்காததின் வெளிப்பாடாம் அது.
அதே போல் எங்கயோ யாரோ வாங்கிய துணி காணம்னு பேசி இருப்பாங்க, அது நம்மையும் அறியாம மனதுள் சென்று கனவில் நாம் கொடியில் காயப்போட்டிருந்த துணிகள் காணாமல் போனது போல் வெளிப்படுமாம்.
நான் படிப்பில் மிகவும் சுமார், ஆனால் கனவில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று ஊரே போற்றுவது போல் கனவு வரும்.
ஆனால் என்னவர் படிப்பில் படுசுட்டி, அவருக்கு அடிக்கடி வரும் கனவோ, இன்னும் 2,3 பேப்பர் அரியர்ஸ் வைத்திருப்பது போல் வந்து உடனே முழிப்பு வந்துவிடுமாம்.
கெட்ட கனவு வரும்போது அதற்கான ஸ்லோகங்களை கூறிக்கொண்டால் கனவு பலிதமாகாது.
நான் தினமுமே ஸ்லோகம் சொல்லிவிட்டே , தூங்குவேன். வராது, வந்தாலும் பலிக்காது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரேணுகா அக்காங்
பைனல் டெஸ்டினேஷன் படத்தை ஞாபகப்படுத்துறது உங்க பதிவு.. கனவுகள் சிலது நடக்கும்போது நம்பலாம்..
நட்புடன்
குணா
வருத்தம் கனவு
எனக்கு ரெம்ப வேண்டியவங்களோட கண்ணுல அதிகமான வருத்ததோட கண்ணீர பார்தேன் பா கனவுல, ரொம்ப கவலையா இருக்கு, கனவுக்கு பலன் உண்டா பா?
கனவினால் கவலை
தோழிகளே நான் குழந்தைக்காக காத்திருக்கிறேன்.எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றது.எனக்கு ப்ரியட் 28 நாட்களுக்கு ஒருமுறை வந்துவிடும்.இரண்டு நாட்கள் தள்ளிப்போனால் என்னவருக்கு கனவு வருகிறது.அதில் கைகக்குழந்தையுடன் வண்டியில் செல்பவருக்கு விபத்து நடந்துவிடுகிறது.அதுவூம் எதாவது கோவில் முன்பு நடக்கிறது.இப்படி கனவு வந்தால் நான் ப்ரியட் ஆகி விடுகிறேன்.மனது கவலையாக உள்ளது. தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் ப்ளீஸ்
selvaranidevaraj
Hi frd enakku marriage panni 2years aachu en kanavarum neenga sonna kanavuthan kandar thalli pona period vanthuruchu but kanavu orusila nenangalil mattumthan palikkum neenga kadavulai nambungal ellam sariyadum frd
ஸ்டெல்லா
மிக்க நன்றி தோழி.நானும் அந்த கடவுளைத் தான் நம்பி இருக்கிறேன்.நம் வாழ்விலும் நல்லது நடக்கும்.
kulanthai kanavu
engaluku mrg agi 5 years achu innum.baby illa treatment edukurom.enaku samiba kalamaga kulanthaigal ennidam virubi vanthu vilayaduvathu polave janavu varugirathu .itharku meaning enna frds pls tell me
ALL IS WELL
selvaranidevaraj
Hi frd naa ungalukagavum kadavulai vendikolkiren kandipaka nammaipol thavikkum anaivarukakavum neengalum vendikollungal ungaluku nallathu nadakkum
gokilarajasekar
Hi frd baby illa enra mana vethanai matrum kolanthaikal patriya sinthanaiyal ungaluku kanavu varalam matrum ungalugana kolanthai varapovatharkana arikuriyaka irukkum kadavulai vendikollungal naanum ungalukaka vendikolkiren
gokilarajasekar
Hi frd baby illa enra mana vethanai matrum kolanthaikal patriya sinthanaiyal ungaluku kanavu varalam matrum ungalugana kolanthai varapovatharkana arikuriyaka irukkum kadavulai vendikollungal naanum ungalukaka vendikolkiren
gokilarajasekar
Enaku marriage panni 2years aachu enakku period varapora 4days munnadithan vellai thiravam kettiyaka athikam varukirathu ithuthan karumuttai velipadirkana arikuriya intha kadaisi 4days la udaluravu vachukitta kolanthai undakuma pls frd sollunga eppo udaluravu vachukanum eppo pirinthu irukkanum sollumgal frd
selvaranidevaraj
Hi frd enakku period varapora 4days munnadi than vellai thiravam kettiyaka athikam varukirathu ithuthan karumuttai velivaruvatharkana arikuriya intha 4days la udaluravu vachukitta kolanthai undakuma eppo udaluravu vachukanum eppo udaluravu vachuka kudathu pls sollunga frd