உங்களுக்கு வீடில் சுயமாக எடுக்கும் hcg pergnency in பொது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும்....அதனால் ஏற்பட்ட மன உணர்வுகளையும் இங்கே பதியவும்.... உதாரணம் : கற்பமாக இருந்த போதும் negative ரிசல்ட் கிடைத்தால் / கர்ப்பமாக இல்லாத போதும் positive ரிசல்ட் கிடைத்திருந்தால்....பகிரவும்
kajalakshi
how do u think like this
enakku negtive result than
enakku negtive result than vanthichu so athapaththi therinjuka aavala irukku
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
kajalakshi
its ok dont worry ellam nallathave nadaka valthukal
plz therichavanka sollunga pa
plz therichavanka sollunga pa
ramyavivekrv
wats ur probs r doubt
unkal anupavathai sonnal
unkal anupavathai sonnal ennai pol kulapathil irukkum pala tholikalukku aruthalaka irukkum
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
ஹோம் டெஸ்ட்
இப்படி ஆங்கிலமும் தமிங்கிலமுமாக வரும் கேள்விகளுக்கு பதிலே தட்டுவதில்லை என்று தான் இருந்தேன்... ஆனாலும் இங்கு வேறு யாரும் தப்பா பதில் சொல்லிட கூடாதே என்று பதிலிட வந்தேன். முடிந்தால் தமிழில் தட்டுங்கள்... பதில் மற்ற அனுபவமுள்ள தோழிகளிடம் இருந்து கிடைக்கும்.
ஹோம் டெஸ்ட் என்பது எப்போதும் 100% சரியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உதாரணமாக சில நேரம் பாசிடிவ் என காட்டும், ஆனாலும் மருத்துவர் ப்ளட் டெஸ்ட் மற்றும் யூரின் டெஸ்ட் ஹாஸ்பிடலில் எடுத்து தான் உறுதி செய்வார். அது தான் துள்ளியமான பரிசோதனை முறை. வீட்டில் செய்யப்படுவது முழுமையான டெஸ்ட் அல்ல. சில நேரம் பிள்ளை உண்டாகி இருக்கும், பாசிடிவ் என காட்டும், ஆனால் பிள்ளை சரியான இடத்தில் உருவாகி இருக்காது, தொடர்ந்து வளரும் வாய்ப்பு இருக்காது, கலைந்து போகக்கூடும்... இதெல்லாம் மருவத்துவர் முழு பரிசோதனை செய்து தான் உறுதி செய்வார். சில நேரம் பரிசோதனை செய்யும் கருவியின் பிழையாக கூட அமையலாம்.
உங்கள் யாருக்கும் நெகடிவ் ரிஸல்ட் வந்திருந்தால் உங்களுக்கு ஃபால்ஸ் ஹோப் கொடுக்க அல்ல இந்த பதிவு... 99% ஹோம் டெஸ்ட் சரியானதாகவே இருக்கும். அதில் பிழை என்பது பாசிடிவ் ரிஸல்ட் வரும் போது ஏற்பட வாய்ப்பு அதிகமே அன்றி, நெகடிவ் ரிஸல்ட் வந்து பாஸிடிவாக இருக்க வாய்ப்புகள் இல்லை எனலாம். உண்மையில் அபார்ஷன் செய்தால் கூட முழுவதுமாக சுத்தமானதா என்பதை அறிய மருத்துவர்களே ஹோம் டெஸ்ட் கிட் பயன்படுத்துவது உண்டு. அதில் நெகடிவ் என்று வந்தால் முழுவதுமாகவே சுத்தமாகிவிட்டது என்பார்கள். பாஸிடிவ் வந்தால் இன்னுமே சுத்தமாகாமல் ஏதும் உள்ளே இருக்க வாய்ப்பிருக்கிறது என்பார்கள்.
அதனால் இந்த ஹோம் டெஸ்ட் ஒரு சின்ன பரிசோதனையே... அது எதை சொன்னாலும் மருத்துவரிடம் சென்று முழுமையான பரிசோதனையின் பின் தான் நல்ல செய்தியா இல்லையா என்பதை உறுதி செய்ய இயலும்.
*இந்த பதிவுக்கு தட்டும் பதிலையேனும் தமிழில் தட்டுங்கள்... தமிழ் தளத்தில் முகப்பு முழுக்க ஆங்கில, தமிங்கில கேள்விகள் காண வருத்தமாய் இருக்கிறது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மன்னிக்கவும் தோழி நான் என்
மன்னிக்கவும் தோழி நான் என் தொலை பேசி வழியாக தட்டச்சு செய்த போதே இந்த தவறு நடந்தது இனி இப்படி நடக்காது...... பொய்யான நம்பிக்கையை அதிகப்படுத்த இந்த பதிவை செய்யவில்லை ,,,, எல்லோரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தான் செய்தேன் ........உங்களின் அனுபவத்தையும் அதனால் ஏற்பட்ட மன சிக்கலையும் இங்கு பகிரவும் .....
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
கஜலக்ஷ்மி
எங்கள் வேண்டுகோள் ஏற்று தமிழில் தலைப்பையும், பதிவையும் மாற்றியது பெரும் மகிழ்ச்சி தோழி :) நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி எதற்கு. இது எனது கடமை
நன்றி எதற்கு. இது எனது கடமை சகோதரி
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!