மண் பாத்திரம் பழக்குதல்

எப்படி புது மண் பாத்திரங்களை சமையலுக்குப் பழக்கி எடுக்கனும்

http://www.arusuvai.com/tamil/node/7733
இதில போய் மண்பாண்டம்னு பின்னூட்ட தலைப்புல படிங்க நிஷா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

புது மண்பாண்டம் பழகுதல் மிக எளிது அதில் வடித்த கஞ்சி சூடாக தினம் ஊற்றினால் சிறிது நாளில் பழகிவிடும் பாரம்பரிய முறையை பின்பற்றி சமைத்தல் மிக நல்லது வரவேற்க்கத்தக்கது

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

Thank you frnd

ரொம்ப‌ நன்றி ஃப்ரண்ட்ஸ். நான் அசைவம்(குறிப்பாக மீன்) எப்பொழுதும் மண் சட்டியில் தான் வைப்பேன். ஆனால் அந்த‌ பாத்திரத்தை என் அம்மா தாந்தார்கள், வெறும் சுடு தண்ணீர் மட்டும் தான் ஊற்றி பழக்கினார்கள்.

குடிதண்ணீர் பிடித்து வைக்கும் பானையையும் பழக்க‌ வேண்டுமா? சமையல் பாத்திரம் போல் தான் பழக்க‌ வேண்டுமா?

பானையில் தண்ணீர் ஊற்றி 1 வாரம் மண் அடுப்பில் காய வைங்க

நன்றி பா. ஒரு வாரம் நிதமும் தண்ணீர் ஊற்றி விறகு அடுப்பில் சூடு படுத்த‌ வேண்டுமா. பிளீஸ் கொஞ்ஞம் தெளிவா சொல்லுங்க‌, ஃப்ரண்ட்.

enaku tamil type panna konjam kastama iruku pa athan theliva solla theriyala pa sorry. viraku adupula 1 mani neram sudu paduthunka daily ippadiya 1 varam pannunka pa

நன்றி பா. நீங்க‌ நல்லாதான் தமிழ்ல‌ டைப் பண்ணிருக்கிங்க‌ எனக்கும் தமிழ்ல‌ சில‌ எழுத்துக்கள் சரிதானானு அடிக்கடி சந்தேகம் வரத்தான் செய்யும். கண்டிப்பா நீங்க‌ சொன்னதை செய்து இந்த‌ வெயிலுக்கு பானைத்தண்ணீர் தான். ஆனா, மண் அடுப்பு இல்லதவங்க‌ என்ன‌ செய்ய‌? கியாஸ் அடுப்பு(gas stove) வைத்து சூடு படுத்தலாமா அதையும் சொல்லிருங்க‌ பா.

நான் இன்டாலியத்தில் குழி பணியார சட்டி வாங்கினேன்.அதை எப்படி பழக்குவது.யாராவது தெரிந்தவர்கள் பதில் கூறவும்.pls

மேலும் சில பதிவுகள்