நான் வீட்டில் செய்யும் சில உணவு வகைகளை இங்கு குறிப்பிட்டு உள்ளேன். முடிந்தால் முயற்சி செஞ்சு பாருங்க.
ராகி வடை:
ராகி மாவுடன், சின்ன வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு எண்ணையில் சிறு சிறு வடைகளாக போட்டு எடுக்கவும்.
ராகி கூழ் 1:
ராகியைத் தானியமாக வாங்கி வந்து, சிறிதளவு ராகியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மிச்சியில் அடித்து, தண்ணீர் சேர்த்து வடிகட்டியில் ராகி பாலாக வடித்துக் கொள்ள வேண்டும். வடித்த பாலை, பாத்திரத்தில் ஊற்றி கை விடாமல் கிளறி, கூழ் பதம் வந்தவுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். (6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு இது.)
ராகி கூழ் 2:
ராகி மாவைத் தண்ணீரில் கரைத்து, உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து, பாத்திரத்தில் ஊற்றி கை விடாமல் கிளறி கூழ் பதம் வந்தவுடன் ஆற வைத்து குடிக்கலாம்.
கம்பங் கஞ்சி:
கம்பை தானியமாக வாங்கி வந்து, 30 நிமிடம் ஊற வைத்து, 2 டம்ளர் கம்புக்கு 5 டம்ளர் தண்ணீர் வைத்து குக்கரில் 4 விசில் விட வேண்டும். விசில் இறங்கியதும், தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து மிச்சியில் அடித்து, சின்ன வெங்காயம் அல்லது ஊறுகாய் சேர்த்து கஞ்சியாகக் குடிக்கலாம். கர்ப்பிணிகளுக்கும், உடல் சூட்டைத் தணிக்கவும் சிறந்த உணவு.
சோள தோசை:
அரிசி 2 டம்ளர், சோளம் 2 டம்ளர், சிறிதளவு உளுந்து சேர்த்து தோசை மாவாக அரைத்து, 6 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவும்.
புரியவில்லை
நீங்க என்ன கேள்வி கேட்டு இருக்கீங்கனு புரியவில்லை..
ரகு
நீங்கள் கேட்ட கேள்வியை தமிழில் டைப் பண்ணி அனுப்புங்கள் நம் தோழிகள் பதில் அளிக்க எளிமையாக இருக்கும்.
சிறுதானியம் முலம் செய்யும் உணவு வகைகள்
சிறுதானியம் முலம் செய்யும் உணவு வகைகள் பற்றி கூறவும்
அபிராமி
சிறுதானியம் முலம் செய்யும் உணவு வகைகள் பற்றி கூறவும்
Hello Rahu,நான் வீட்டில்
Hello Rahu,

Thanks,
Mahi