ரோஜா பதியம்

எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் அழகான‌ நன்கு வளர்ந்த‌ ரோஜா செடிகள் இருக்கு, அதில் இருந்து நான் என் வீட்டில் வளர்க்க‌ எப்படி கம்பு எடுத்து பதியம் போட‌ வேண்டும். கொஞ்ஞம் தெளிவா முடிந்தால் படத்துடன் விளக்கம் தாருங்கள் தோழீஸ்.

பெரிதாக எக்ஸ்பர்ட் இல்லை நான்.
நான் செய்வது இதுதான் - பென்சில் அளவு தடிமனான, சற்று முதிர்ந்த தண்டாகத் தெரிந்து எடுங்கள். வெட்டிய உடனே நீருள்ள ஒரு பாட்டிலில் சொருகிவிடுங்கள். (நீர் உறிஞ்சுதல் தடைப்படுப் போது உள்ளே காற்றுக் குமிழ் நுழைந்துவிடும் என்று எங்கோ படித்தேன்.) தடி ஆறு அல்லது ஏழு அங்குலம் இருந்தால் போதும். ஸ்டாட்டர் மிக்ஸை ஒரு சிறு தொட்டியில் போட்டு நீர் விட்டு வடிய விடுங்கள். தடியின் அடிக்கணுவிலிருந்து ஒரு அங்குலம் கீழே இருக்க விட்டு கூரான கத்தியால் சரிவாக ஒரு வெட்டு வெட்டுங்கள். சிலும்பாமல் இருந்தால்தான் நல்லது. கீழ்க் கணுக்களிலுள்ள இலைகளை நீக்கிவிடுங்கள். மேலே உள்ளவை ஒவ்வொன்றையும் தனித்தனியே கத்தரிக்கோலால் பாதி அளவுக்கு வெட்டிவிட்டுத் தடியைக் குற்றிவிடுங்கள். வெற்றுக் கண்ணாடிப் போத்தல் அல்லது பாதியாக அறுத்த கூல்ட்ரிங்க் பாட்டிலைக் கொண்டு மூடிவிடுங்கள். தடி ஆடாமல் இருக்கும் அதே சமயம் காய்ந்து போகாமலும் இருக்கும். தினமும் நீர் விட வேண்டியது இல்லை. மண் காய்ந்தால் மட்டும் நனைத்து விடுங்கள். தொட்டியைக் குளிர்மையான இடத்தில் வைத்துவிட்டால் போதும். துளிர்க்க ஆரம்பித்தாலும் சட்டென்று திறக்க வேண்டாம். நன்கு வளர ஆரம்பித்த பின்னால் வேறு தொட்டிக்கு மாற்றலாம். (மூடாமல் பதிவைக்கும் என்னை வளர்த்த பாட்டி, தடி காய்ந்து போகாமல் அதன் மேல் சின்னதாக பசுஞ்சாணத்தை உருட்டி தொப்பி போல் வைத்துவிடுவார்.)

இன்னொரு முறை - தடியை மேலே சொன்னது போல ஆயத்தம் செய்து ஒரு கழுத்து ஒடுங்கிய பாட்டில் நீருள் சொருகிவிடுவது. அடி நீருள் அமிழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் கண்ணாடியில் பட்டுவிடக் கூடாது. இப்படி வைப்பது சிரமமாக இருந்தால் தடியைச் சிறிய கடதாசியால் சுற்றி (cork போல) போத்தலில் இறுக்கி வைடலாம். அப்படியே ஜன்னல்கட்டில் வைத்தால் வேர் வருவது தெரியும். நன்கு வேர் பிடித்ததும் வேர் உடையாமல் சிறிய தொட்டிக்கு மாற்றி சில நாட்கள் நிழலில் வைக்கவும்.

//படத்துடன் விளக்கம்// :-) இரண்டு நாள் முன்னால் கேட்டிருந்தால் செடியிலிருந்து நேரடியாகப் பதி வைப்பது கூடக் காட்டியிருக்கலாம். செடிகளை நறுக்கிவிட்டேன். ;( மீண்டும் வளர்ந்தால்தான் முடியும். வேறு யாராவது உதவுகிறார்களா என்று பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

அக்கா ரொம்ப‌ ரொம்ப‌ நன்றி. கண்டிப்பா செய்து பார்கிறேன். உங்கள் விளக்கப்படமும் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அக்கா உங்கள் பதிலில் சில இடங்கள் எனக்கு புரிந்துக்கொள்ள‌ சற்று சிரமமாக இருந்தது. இருந்தாலும் புறிந்தவரை செய்து சூப்பரா பதியம் போட்டு விட்டு சொல்கிறேன்.

தற்பொழுது இங்கு சுட்டெரிக்கும் வெயில் இந்த‌ சீசனில் பதியம் போடலாமா அதையும் கொஞ்ஞம் தெளிவு படுத்துங்கள் பிளீஸ்.

\\தடி காய்ந்து போகாமல் அதன் மேல் சின்னதாக பசுஞ்சாணத்தை உருட்டி தொப்பி போல் வைத்துவிடுவார்.// நான் இந்த‌ முறையில் செய்திருக்கிறேன் ஆனால் சும்மா கம்பை உடைத்து நேரடியாக‌ தொட்டியில் நட்டு செய்திருக்கிரேன். இதில் சில் நேரம் என் அதிஷ்டத்திற்கு வளரும், சிலது பட்டும் போகும். இனிமேல் தாங்கள் சொன்ன‌ முறையில் தான் பதியம் இட்டு பார்க‌ வேண்டும்.

அக்கா உங்க‌ தமிழ் சூப்பர். நிறைய‌ பழமையான சொற்களை காண முடிந்தது. எனக்கு சிறு வயது முதலே எங்கள் பழந்தமிழ் மீதும், உங்கள் ஊர் தமிழ் மீதும் ஒரு ஈர்ப்பு உண்டு. இந்த‌ பதிலில் நீங்கள் உங்கள் ஊர் தமிழை முலுவதுமாக‌ உபயோகப் படுத்தாவிட்டாலும், நிறைய‌ சொற்களில் நியாபகப் படுத்துகிறீர்கள், அதற்காக‌ நன்றி.

//புரிந்துக்கொள்ள‌ சற்று சிரமமாக இருந்தது.// எந்த இடம்? சொல்லுங்க. தெளிவா சொல்லப் பார்க்கிறேன்.

//சுட்டெரிக்கும் வெயில்// இந்த இரண்டு முறைகளையும் பாதிக்காது. இப்போது ஆரம்பித்தால் செடி முளைக்க ஆரம்பிக்கும் சமயம் காலநிலை சரியாகி இருக்கும்.

//தமிழ் சூப்பர்.// அவ்வ்!! ஜில்ல்ல். ;))

‍- இமா க்றிஸ்

ஸ்டாடர் மிக்ஸ் என்று நீங்கள் குறிப்பிட்டது மண் மற்றும் உரக் கலவை தானே? மூடிய‌ பாதி பாட்டிலா, அந்த‌ கம்பை மட்டும் மூடினார் போல் வைத்தால் போதுமா அல்லது தொட்டியையே மூட‌ வேண்டுமா.

//ஸ்டாடர் மிக்ஸ்// இங்கு வாங்கலாம். //மண் மற்றும் உரக் கலவை// தான் அது. ஆனால் உரம் மிகமிகக் குறைவாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால் செடி வளராது. //கம்பை மட்டும் மூடினார் போல் வைத்தால் போது//ம். :-)

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா

நீங்க‌ சொன்ன‌ முறையில் ஒரு டார்க் ஆரஞ்சு ரோஸ் அழகாக‌ வளர்ந்து பூத்து விட்டது. நன்றி.
இப்ப‌ வேறு வீடு மாற‌ வேண்டும். காய்த்து தொங்கும் மாதுளை,செழித்து வழர்ந்த‌ மருதோன்றி, தற்பொழுதே காய் விட்டிருக்கும் வென்டை, பூத்துக்குலுங்கும் செம்பருத்தி, காய்களால் நிரம்பி இருக்கும் பப்பாளி, செழித்து வளர்ந்துள்ள‌ சிவப்பு கீரை, பருப்பு கீரை.. இதையெல்லாம் விட்டு விட்டு போகவே மனசு இல்லை. இப்ப‌ மாறும் வீட்டில் மன் தரையையே பார்க்க‌ முடியாது.. வெள்ளை சாக்குகளில் காய்கறிகள் வளர்க்கும் முறை கூறவும். இது பற்றிய‌ லின்க்ஸ் இருக்குதானு பார்கிறேன். பழைய‌ வீட்டில் இருப்பது போல் வரிசையாக‌ காய்கறிகள் நட‌ முடியாது, பைகளிலும் தொட்டியிலும் ஒரு பை வீதம் எத்தனை செடிகள் நடலாம்? நிறைய‌ தொட்டிகள் தேவைப்படுமா.. சொல்லுங்க‌ அக்கா.

ரோஜா, இம்மா அக்கா சொன்ன‌ முறையில் வளர்த்து பூத்து விட்டது, கருத்து தெரிவிக்கும் பொழுதே அதன் படத்தையும் போட்டு காட்டினால் மகிழ்ச்சியாக‌ இருக்கும். அதனால் இதற்கு ஏதேனும் வழி இருந்தால் எல்லாரும் பயனடைய ஏற்படுத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அட்மின் அவர்களே

அன்புள்ள நிஷாவிற்கு, யூ டியூபில் மாடித்தோட்டம் என்ற‌ தலைப்பில்
தேடுங்கள். நிறைய‌ கிடைக்கிறது. ஒரு தொட்டியிலேயே 15 முதல் 40 வகையான‌
செடிகளை வளர்க்கும் முறைகள் கிடைகின்றன‌. அத்தகைய‌ தொட்டிகளை
நாமே நம்மிடம் இருக்கும் பொருள்களைக் கொண்டு நாமே தயாரித்துக் கொள்வது
எப்படி என்று செய்முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் தேடிப்
பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிக்க‌ நன்றி, கண்டிப்பாக‌ தேடிப்பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்