முள்ளங்கி கீரைப் பொரியல்

தேதி: April 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

முள்ளங்கி கீரை - 2 கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
கடுகு - சிறிதளவு
வரமிளகாய் - ஒன்று
சீரகம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

முள்ளங்கியின் மேல்புறத்தில் உள்ள கீரையை தண்டுடன் நறுக்கி நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் முள்ளங்கி கீரை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிவிட்டு இறக்கவும்.
எளிமையாகச் செய்யகூடிய சத்தான முள்ளங்கி கீரைப் பொரியல் தயார்.

நாம் முள்ளங்கியை மட்டும் உபயோகித்துவிட்டு, அதிகச் சத்து நிறைந்துள்ள அதன் கீரையை உபயோகிக்காமல் விட்டுவிடுகிறோம். இந்தக் கீரையில் வைட்டமின் C அதிகமாக உள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான குறிப்பு. எங்க வீட்டிலும் இப்படித் தான் செய்வோம். வெங்காயத்தோட பச்சை மிளகாய் போடாம காய்ந்த மிளகாய் மட்டும் போடுவோம்

கலை

முள்ளங்கி கீரைப் பொரியல் அருமையான பொரியல் படங்களும் தெளிவாக உள்ளது குறிப்பும் எளிமையாக உள்ளது.

சத்தான அருமையான குறிப்பு முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முசி நல்ல சத்தான குறிப்பு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி, கீரை கிடைகும் போது அவசியம் டிரை பண்ரேன்

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிர்க்கு மிக்க நன்றி.
உங்கள் அன்பான‌ முதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி.கலை.
வாழ்த்திர்க்கு நன்றி.பாலபாரதி.
நன்றி,உமா.
மிக்க‌ நன்றி,அருள்.
கீரை கிடைக்கும் போது செய்து பாருங்க‌,நல்லா இருக்கும்,வாணி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
சத்தான‌ குறிப்பு. நானும் பச்சை மிளகாய் சேர்க்க‌ மாட்டேன். இதில் கூட்டும் செய்வோம்.

அன்புடன்,
செல்வி.

பதிவிர்க்கு நன்றி அக்கா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.