தேதி: April 3, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - 4 கப்
சீனி - 2 மேசைக்கரண்டி
ரோஸ் சிரப் - 4 மேசைக்கரண்டி
குச்சி ஐஸ் மோல்டு
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.

பால் ஆறியதும் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும்.

வடிகட்டிய பாலுடன் சீனி மற்றும் ரோஸ் சிரப் சேர்க்கவும்.

பிறகு கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

குச்சி ஐஸ் மோல்டுகளில் ரோஸ் மில்க் கலவையை கவனமாக ஊற்றவும்.

மோல்டுகளை மூடி ஃப்ரீஸரில் 12 மணி நேரங்கள் வைத்து உறையவிடவும். பிறகு மோல்டுகளை வெளியே எடுத்து ஓடும் நீரில் நனைத்து குச்சியைப் பிடித்து மோல்டுகளிலிருந்து ஐஸைத் தனியாக எடுக்கவும்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற குழந்தைகளுக்கு பிடித்தமான குளுகுளு குச்சி ஐஸ் தயார்.

இதே முறையில் ரோஸ் மில்க் மட்டுமல்லாமல் ஜூஸ், ஸ்குவாஷ் சேர்த்து கலந்தும் விதவிதமாக குச்சி ஐஸ்களைச் செய்யலாம்.
Comments
வாணி மேடம்...
குச்சி ஐஸ் சூப்ப்ர்.. சம்மர் ஸ்பெஷல் குறிப்பா அசத்துங்க... போட்டோஸ் எல்லாம் சூப்பரோ சூப்ப்ர்..
கலை
ஐஸ் வாணி அக்கா,
வாணி அக்கா,
எனக்கு பிடிச்ச ஐஸ் ஈஸியா சூப்பரா இருக்கு.
இப்பவே சாப்பிடணும் போல இருக்கு .......
கலர்புல் போட்டோ, பக்கத்துல பாபிடால் இன்னும் அழகு ........
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
வாணி
கோடைகேற்ற குச்சி ஐஸ் சூப்பர், படங்கள் அனைத்தும் சூப்பர்.
vaniselwyn
ரொம்ப அழகாக இருக்கிறது என் பையன் ஐஸ் என்றால் ரொம்ப விரும்பி சாப்பிடுவான்
வாணி
ஐஸ்க்றீம் நல்லாருக்கு. மோல்ட் & பாபி சூப்பர். நான் பாலோட ரோஸ் எசன்ஸ், கலர் சேர்த்து செய்வேன். என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வாணி
ஹஹஹா.... சின்ன பிள்ளையில் அப்பா செய்து கொடுப்பார். வெறும் பாலும் சர்க்கரையும் கலந்து, இப்படி எல்லாம் செய்து கொடுப்பார். ஐஸ்க்ரீம் பவுடர் எல்லாம் பயன்படுத்த தெரியாது அப்போ. மோல்டும் இல்ல... டம்லரில் செய்து தருவார். ரொம்ப பிடிக்கும்... பழைய நினைவுகள். :) அழகான படங்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாணி
வாணி, உங்களோட குறிப்புகள் ரொம்ப அட்ராக்டிவா இருக்கு :) குச்சி ஐஸ் சூப்பர், பாபிடால் அழகா இருக்கு :) இது போன்று அல்லாது வேறொரு டால்வைத்து குறிப்பு அனுப்பி இருந்தேன், விரைவில் வரும்னு நினைக்கிறேன்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கலை,
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி
சுபி,
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி,எளிதில் செய்து விடலாம்,டிரை பண்ணுங்க
Balabharathi
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி
ஜெனிசெல்வின்,
உங்க பையனுக்கும் இதேபோன்று செய்து கொடுங்கள்,நிச்சயம் பிடிக்கும்
உமா
இம்முறையிலும் ஒரு முறை செய்து பாருங்க உமா, நல்லாயிருக்கும். நன்றி
வனி
குச்சி ஐஸ் வெறும் எசன்ஸ் கொண்டே செய்துடலாம் வனி . நன்றி
அருள்,
நீங்க கொடுக்கிற ஹெல்த்தி குறிப்புகளையெல்லாம் பார்த்து நான் பிரம்மிச்சுப் போய் இருக்கேன். உங்க டாலியை விரைவில் பார்க்க ஆவல்
வாணி
ஜில்லாஇருக்கு சாரி நல்லாஇருக்கு,குறிப்பு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி முசி
ஆசை...
அன்பு வாணி,
வெயில் காலத்தில் இப்படி கலர் கலரா போட்டு ஆசையைக் கிளப்பறீங்களே! அப்ப்டியே இரண்டு பார்சல். நல்லா இருக்கு வாணி.
அன்புடன்,
செல்வி.
வாணி
அப்பா குச்சி ஐஸ் எல்லாம் செய்ய மாட்டார் வாணி... சின்ன பிள்ளையில் தெருவில் ஐஸ் வாங்கி தர அம்மா ஒத்துக்க மாட்டாங்க, எங்களை சமாதானம் பண்ண அப்பா பாலை சர்க்கரை போட்டு கலந்து டம்ளரில் ஊற்றி ஒரு சின்ன ஸ்பூனை உள்ள போட்டு ஃப்ரீசரில் வைப்பார். குச்சிக்கு பதில் ஸ்பூன் ;) சில்லுன்னு சூப்பரா வரும். ஐஸ்க்ரீம் பவுடர் எல்லாம் கடையில் கிடைக்க ஆரம்பிச்சப்போ அப்பா அப்படியும் செய்திருக்கார். சப்பாத்தி மாவில் வாழைப்பழம் சேர்த்து பிசைந்து இனிப்பா செய்வதெல்லாம் அவர் எங்களுக்கு செய்து கொடுக்கும் சின்ன சின்ன சமையல். ம்ம்... அது ஒரு கனா காலம் :) இப்போ அவருக்கும் இதுக்குலாம் டைம் இல்ல, செய்து கொடுக்க சொல்லி அடம் பிடிக்கும் வயதும் எங்களுக்கு இல்ல. உங்க குறிப்பை பார்க்கும் போது பழைய நினைவு. இப்படி கலரா சுவையா எல்லாம் செய்ய அப்போ அவருக்கு தெரியாது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
யம்மி யம்மி..... சூப்பர் வாணி
யம்மி யம்மி..... சூப்பர் வாணி
ரோஸ் மில்க் குச்சி ஐஸ்
It's Very Easy & Super...............
செல்வி மேடம்
செல்வி மேடம் பார்சல் கேட்கிறது கூட ரொம்ப சிக்கனமா இரண்டுன்னு கேட்கிறீங்களே.
வனி
பழைய நினைவுகளை அசை போட்டிருக்கீங்க வனி. வெரிகுட்.
நன்றி பிரியா
நன்றி பிரியா
மிதுஷிகா
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி மிதுஷிகா
வாணி
அன்பு வாணி,
நானே எல்லாம் வாங்கிட்டா, மத்தவங்களுக்கும் வேணுமில்ல:) அதல்லாம இப்ப நாங்க ரெண்டு பேர் மட்டும் தானே வீட்டில இருக்கோம்:(
அன்புடன்,
செல்வி.
:))
:))
hi
vani,
enga inda mould chennai la kedaikum?
pls reply