பல்லி விழும் பலன்கள் பற்றி சொல்லுங்கள் தோழிகளே

நான் இன்னைக்கு காலையில் எழும்பும்போது என்னோட இடுப்புல ஒரு பல்லி விழுந்து என்னோட வயிற்றுக்கு வந்துவிட்டது இதனால என்ன பலன் நடக்கும்னு யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க என்ன பலனா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க தோழிகளே இத நெனைச்சி ஒரே குழப்பம இருக்கு. நல்லதோ கெட்டதோ முடிவு தெரிஞ்ச நான் குழப்பத்தில இருந்து விடுபட்டிருவென் பா ,தயவு செய்து யாராவது சொல்லுங நான் இதனல இன்னும் சாப்டவே இல்ல பா

இடுப்பில் விழுந்து ஓடி தானே வயிற்றுக்கு வந்தது... அப்படின்னா பல்லி உடம்பில் ஓடினதா தான் எடுக்கனும், ஆயுசு கூடும்னு சொல்வாங்க.

ஆனா ஒன்னுங்க... பல்லி ஒரு முறை என் மேல் விழுந்தப்போ மரணம்னு பலன் பார்த்தேன்... அது நடந்து பல மாதங்கள் ஆகிட்டுது. அந்த பல்லி கூட போய் சேர்ந்திருக்கும், நான் உட்கார்ந்து உங்களுக்கு பதிவு போடுறேன் ;) மனசை போட்டு குழப்பிக்க வேண்டிய விஷயம் இல்லைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.

Thanks for your comments friends

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

பள்ளி விழுந்தா அதன் பலன் ஒருநாளைக்கு தாங்க.. இப்பவே அரை நாள் போய்டுச்சு... எனக்கும் ஒருமுறை உச்சந்தலைலே பள்ளி விழுந்துருக்கு நானும் உயிரோடதான் இருக்கேன்.. அதற்காக கவலைப்பட்டு உக்காந்துஇருக்காம போய் வேலைய பாருங்க.

Thank u pa

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஹாய்...... ஹாசினி பல்லி விழுந்த பலன்/ பல்லி தலைல விழுந்தால் அதன் பலன் மரணமா? யாருக்கு ? என் வாழ்க்கைல நடந்த வேடிக்கையான சம்பவம்(வருத்தமும் இருக்கு) நான் என் கைகளை வேகமா வீசி வீட்டுக்குள்ள போகும் போது எதோ ஒன்னு மேல இருந்து என் வலது கை பெரு விரல்ல வேகமா பட்டு விழ நானும் பயத்தில பார்த்தா பல்லி ஒன்னு மல்லாந்து செத்து கிடந்துச்சி. ஒரு வேல பல்லி (க்கு) தலைல (அடி) விழுந்தா மரணமா???? இப்டி கூட இருக்குமோ?

மேலும் சில பதிவுகள்