சிக்கன் பிரியாணி

தேதி: April 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

சீரகச் சம்பா அரிசி - கால் கிலோ (அ) 2 கப்
சிக்கன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2 (சுமாரான அளவில்)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பற்கள்
புதினா - ஒரு கைப்பிடி
தயிர் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - சிறு துண்டு
புதினா - அரை கட்டு
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
ப்ரிஞ்சி இலை - ஒன்று


 

அரைக்கக் கொடுத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். சிக்கனை நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை லேசாகக் கீறி வைக்கவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா மற்றும் தக்காளிச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அரிசியைச் சேர்க்கவும்.
அரிசியிலுள்ள நீர் வற்றும் வரைக் கிளறிவிடவும்.
பிறகு 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து மூடி வேக வைக்கவும். அரிசி பாதி வெந்ததும் உப்புச் சேர்த்து கலந்து மூடி வேக வைக்கவும். (குக்கராக இருந்தால் தண்ணீர், தேங்காய்ப பால், உப்பு சேர்த்து கலந்து 2 விசில் வரவிட்டு, சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லித் தழை, நெய் சேர்த்து கிளறிவிட்டு மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து திறக்கலாம்).
முக்கால் பதம் வெந்ததும் தோசைக்கல்லை பாத்திரத்தின் அடியில் வைத்து 10 நிமிடங்கள் தம்மில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து திறந்து நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் நெய் சேர்த்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு, மேலும் 5 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கவும். (விருப்பமுள்ளவர்கள் அரை மூடி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம்).
சுவையான, அரைத்து செய்யும் மசாலா மணத்துடன் சிக்கன் பிரியாணி ரெடி. சிக்கன் கிரேவி மற்றும் தயிர் பச்சடியுட்ன் பரிமாற சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரியாணி நல்லா இருக்கு. ஏற்கனவே ரம்யா ரெசிபி பார்த்து இது போல அரைத்து செய்திருக்கேன், என் ஃபேவரட் ஆயிடுச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் பிரியாணி அக்கா. அடுத்த முறை பிரியாணி செய்யும்போது இப்படிதான் செய்வேன். அதுக்கு முதல்ல அந்த கடைசி ப்ளேட்ட அப்டியே பார்சல் அனுப்பிடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Tempting ஆ இருக்குங்கா.... அரைக்கும் போது சிலதை தனியாகவும் சிலதை பொடி பண்ணியும் சேர்ப்போம்... யம்மி

அன்பு வாணி,
அப்படியா? ரம்யா கொடுத்து இருக்காங்களோ? நான் அடிக்கடி செய்யும் முறை இது. வாராவாரம் வீட்டில் பிரியாணி இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு வாரமும் ஒரு விதமாக‌ செய்து பார்ப்பேன். மனநிலையைப் பொறுத்து செய்யும் விதம் குறையும் அல்லது கூடும்.
இந்த‌ முறையும், இன்னொரு முறையும் நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
செய்து பாருங்க‌. நல்லா இருக்கும். பார்சல் அனுப்பிட்டேன். இன்னும் வரலையா?

அன்புடன்,
செல்வி.

அன்பு பிரியா,
அது ஒரு முறை தான். நான் இப்படித்தான் செய்யணும்னு இல்லாம‌ மாத்தி மாத்தி செய்து பார்ப்பேன். அதுல‌ ஒரு வகை இது.

அன்புடன்,
செல்வி.

chicken biriyani romba nalla irukku. instant masala use seivathai vida masala araithu seivathu thani taste than. muthalil thalikkum pothu ghee add seiya vendama?

எங்க அம்மாவும் கொத்தமல்லி,புதினா அரைத்துப் போட்டுத்தான் செய்வாங்க.நான் வதக்கித்தான் செய்வேன். எங்க அம்மா செய்வது நினைவுக்கு வந்து விட்டது, அடுத்த முறை இப்படி செய்து விடுகிறேன். பிரியாணியா செய்து அசத்துறீங்க.

அன்பு கலைவாணி,
அரைத்து செய்யும் முறைதான் ரொம்ப‌ நல்லா இருக்கும். தாளிக்கும் போது நெய் சேர்க்கத் தேவை இல்லை. கடைசியில் சேர்த்தால் போதும். நான் எப்போதுமே எண்ணெய் குறைவாகத்தான் சேர்த்து சமைப்பேன். நெய் கடைசியாக‌ சேர்க்கும் போது மணமும் இருக்கும். நிறைய‌ எண்ணெய் சேர்த்த‌ லுக் கிடைக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
அரைத்து செய்யும் சுவையே தனிதான். எவ்வளவு அவசரம்னாலும் அரைத்துத்தான் செய்வேன். செய்து பாருங்களேன். நல்லா இருக்கும்.

வாராவாரம் பிரியாணி செய்யும் போது, ஒரே மாதிரி செய்தா போரடிக்குமில்ல‌? அதான் ஒவ்வொரு வாரமும் ஒரு மெத்தட். இந்த‌ வாரமும் ஒரு வகையான‌ பிரியாணி தான், அதுவும் வரும்:)

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா, பிரியாணி இதேமுறைலதான் செய்வேன். இந்த சுவை அப்படியே ஞாபகம் வந்து இன்னும் எச்சா பசிய தூண்டுது. அழகா செய்து இருக்கீங்க :)
ஆனா கடைசி தம் வைப்பது மட்டும் தெரியாது. அடுத்தமுறை இதேபோல் செய்து பார்க்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,
ஓஒ... அப்படியா? நான் அடிக்கடி செய்யும் விதம் இதுதா. என் பெண்ணுக்கும் இதுதான் பிடிக்கும்.

தம் வைக்காமல் குக்கரில் வைப்பீங்களா? தம் வச்சுப் பாருங்களேன். இன்னும் சுவையா இருக்கும். மூடி போட்டு மூடிட்டு, மேலெ ஏதாவது வெயிட் வெச்சா நல்லா இறுக்கமா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

Tried ur biryani today.. came out very well.. thank u for ur receipe :)
Raji

Enjoy the life