நாட்டுக்கோழி பிரியாணி

தேதி: April 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

நாட்டுக்கோழி - முக்கால் கிலோ
பாஸ்மதி அரிசி (அ) சீரகச் சம்பா அரிசி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லித் தழை - அரை கட்டு (2 கைப்பிடி)
புதினா - கால் கட்டு (ஒரு கைப்பிடி)
கெட்டித் தயிர் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
எலுமிச்சை - கால் மூடி
ப்ரிஞ்சி இலை - 3
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
ஜாதிக்காய் - சிறிய துண்டு (மிளகு அளவு)


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நாட்டுக்கோழித் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தயிருடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிசறி தனியாக வைக்கவும்.
பொடிக்க கொடுத்துள்ளவற்றைப் பொடித்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பொடித்த மசாலா போட்டு தாளித்து, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து வதக்கி, தயிரில் கலந்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் பால் சேர்த்து, அரிசியின் அளவைவிட ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசியையும், முக்கால் பதம் வெந்த நாட்டுக்கோழித் துண்டுகளையும் சேர்க்கவும். உப்பு சரிபார்த்து மெதுவாக கிளறிவிட்டு மூடிவைத்து வேகவிடவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து, மீண்டும் கலந்துவிட்டு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து வெந்ததை சரிபார்த்து ஒரு ஃபோர்க் கொண்டு கிளறினால் சாதம் உடையாமல் இருக்கும்.
சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார். சாலட் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறலாம்.

நான் கொடுத்துள்ள அளவில் செய்தால் நெய் சேர்க்காமலேயே சுவை நன்றாக இருக்கும். இந்த பிரியாணியை சீரகச் சம்பா அரிசியில் செய்தால் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் வாணி. சூப்பர் பிரியாணி. படங்களும் பிரஷண்டேசனும் அருமை. நல்ல பசி அந்த பிரியாணிய நான் எடுத்துக்கறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா... இங்க கொஞ்சம் பங்கு அனுப்பிடுங்க... நல்ல பிள்ளை தானே நீங்க? ;)

வாணி... எனக்கு நாட்டுக்கோழி ரொம்ப இஷ்டம்... ஆனால் நம்ம வீட்டு மற்ற ஜீவங்கள் சாப்பிடுறதில்லை, அதனால் வெளிய போனா தான் நாட்டுக்கோழியே சாப்பிடுவேன். இந்த பளிச் படத்துக்காகவே 5 ஸ்டார். வெச்சுக்கங்க... எஞ்சாய். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி வனி எனக்கு ஒரு கால் உங்களுக்கு ஒரு கால். டீல் ஓகேவா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா கோழி காலை தானே சொன்னீங்க? எனக்கு டீல் ஓக்கே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வனி. என் கால் சாப்பிடுற மாதிரி இருக்காது. ஹா...ஹா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

;))

‍- இமா க்றிஸ்

வாணி பொருட்கள் வைத்துள்ள பாட்டிலா அது, அழகா இருக்கு. சயின்ஸ் லேப்ல இருக்கிறாப்பிலயே இருக்கு
வெங்காயம் அழகா நறுக்கி, வெள்ளையா ஷாம்பூ போட்டு குளிச்ச பாட்டி தலையாட்டம் இருக்கு.
ஆனா இதையெல்லாம் டைப்படிக்கும் போது, வாயில ஊறுற ஊத்து தண்ணிய எப்படி வர்ணிக்கிறதுனு தெரில போங்க!!

கடைசி படம் இதெல்லாம் அநியாயம் வாணி, இன்னிக்கு தயிர்சாதம் பண்ணி வெச்சிட்டு உக்காந்திருக்கேன், இப்படிலாம் ஆசைக்காட்டப்படாது ஆமா :)))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல‌ சுவைய்யான‌ குறிப்பு,கண்கவர் படங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நாட்டு கோழி அங்கே எப்படி கிடைக்குது.? அன்கேஜ்டு சிக்கன் கிடைக்குமே அது தானே.யம்மி.. கலக்குங்க....

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வாணி,
நாட்டுக் கோழி பிரியாணி சூப்பர். அதன் சுவையே தனிதான்.

/வெங்காயம் அழகா நறுக்கி, வெள்ளையா ஷாம்பூ போட்டு குளிச்ச பாட்டி தலையாட்டம் இருக்கு./

ஹாஹா..நல்ல‌ கற்பனை அருள்)

அன்புடன்,
செல்வி.

வாவ்வ்வ்வ் பிரியாணி பாருக்கும் போதே வாய் ஊறூதே

கண்களால் சாப்பிட்டால் மட்டும் போதாது, சமைத்துப் பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லணும் சரியா?
நன்றி

நாங்களும் , ஊருக்கு வந்த பொழுது நாட்டுக் கோழி பிரியாணி சாப்பிட்டு பழகி ரொம்பப் பிடித்து விட்டது. திடீரென்று இங்கு நாட்டுக் கோழி கிடைக்கவும் செய்து விட்டேன்.
நன்றி வனி

அருள் உங்களோட உவமைகளைப் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை. இங்கு வெள்ளை வெங்காயம் தான் அதிகம் கிடைக்கிறது. நம்மூர் ஆனியன் அளவுக்கு ருசி இருக்காது.

நீங்க பண்றது கூடத்தான் அநியாயம், தயிர் சாதம்ன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். பார்சல் அனுப்பியிருக்கலாமுல்ல :)))

நன்றி முசி

என் கணவரின் நண்பர் ஒரு வெள்ளைக்காரர் அவர் தோட்டத்தில் கோழி வளர்க்கிறார். அங்கிருந்து கிடைத்தது ரம்யா. இங்கேயும் Country சிக்கன் என்று தான் சொல்கிறார்கள்.
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

நன்றி செல்வி மேடம்

வருகைக்கும் பதிவிற்க்கும் நன்றிங்க

வாவ், நாட்டுக்கோழி பிரியாணி குறிப்பு, படங்கள் எல்லாமும் சூப்பர் வாணி!

//வெங்காயம் அழகா நறுக்கி, வெள்ளையா ஷாம்பூ போட்டு குளிச்ச பாட்டி தலையாட்டம் இருக்கு. //
அருள், உங்க உதாரணம் அசத்தல், ரொம்ப ரசிச்சேன்! :-)

அன்புடன்
சுஸ்ரீ

பிரியாணி சூப்பரோ சூப்பர் ,

Be simple be sample

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி. அருளோட விளக்கம் எனக்கும் சிரிப்பூட்டியது

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி.

பெரிய‌ வெங்காயமும், பாலும் தவிர்த்து இதே போல‌ தான் எங்க‌ வீட்டிலும் செய்வோம்... நானும் இந்த‌ குறிப்பு அனுப்பி உள்ளேன்பா..... எனக்கு மிகவும் பிடித்த‌ பிரியாணி.........
http://www.arusuvai.com/tamil/node/22685

உங்க குறிப்பையும் ஒரு முறை நான் செய்திடறேன் பிரியா, வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி