மூச்சு திணறி குழந்தை பிறந்தது.,

வணக்கம் தோழிகளுக்கு,

கடந்த சனி கிழமை இரவு 6.30 மணிக்கு ஆண் குழந்தை சிசேரியன் மூலம் பெற்று எடுத்தேன்,

காரணம் - வலி இல்லாமல் பனிக்குடம் உடைந்து குழந்தைக்கு மூச்சு திணறியதால்,குழந்தையை சிசேரியன் பண்ணி எடுத்தார்கள்,

சில சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளது,உங்களது பதிலினை தெரிவித்தால் நலமாக இருக்கும்

1. டாக்டர் முதற்கொண்டு அனைவரும் அதிகம் நீர்,இளநீர்,பழங்கள் சாப்பிட சொல்லு கிறார்கள்,

2. எனது உறவினர்கள் தண்ணிர் அதிகம் குடித்தால் குண்டாகி விடுவாய் என்று சொல்லுகிறார்கள்,ஆரஞ்சு சாப்பிட்டால் இருமல் வந்து தையல் பிரிந்து விடும் என்கிறார்கள்,

3. சில பேர் மஞ்சக்காய் சாப்பிட சொல்லுகிறார்கள், இதனை சாப்பிட்டால் தையல் போட்ட இடம் புண் சரியாகி விடும் என்று சொல்லுகிறார்கள்,

மன குழப்பமாக உள்ளது, இப்பொழுது உங்களது பதில்களை எதீர்பார்க்கிறேன்,

நன்றி

என்றும் அன்புடன்
பத்மா

வாழ்த்துக்கள் பத்மா.

சிசேரியன் என்றால் முதுகில் ஊசி போட்டாங்களா? அப்படி போட்டிருந்தால் டாக்டர் சொல்லுவது போல நீறைய நீர் குடிக்க வேண்டும், அப்போது தான் அந்த மருந்தின் தன்மை உடம்பை விட்டு போகும். டாக்டர்ஸ் சொல்றதை கேளுங்க.... உணவில் மற்றவர் சஜஷன் எதுவும் வேண்டாம்.

குழந்தையும் நீங்களும் நலமாக இருக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தண்ணிர் அதிகம் குடித்தால் குண்டாகி விடுவாய் // நீங்க என்ன பலூனா! :-) குடிக்கிற தண்ணீரை உடல் ஸ்டோர் பண்ணாது. அது உங்களுக்கே தெரியும். இதுக்கு முன்னாடி குடிச்ச தண்ணீருக்கு என்ன ஆச்சோ அதேதான் இப்போதும் ஆகும். //ஆரஞ்சு சாப்பிட்டால் இருமல் // சாதாரண காலத்தில் ஆரஞ்சு உங்களுக்கு அலர்ஜியாக இருந்து இருக்கா!! அப்படியானால் சாப்பிடாதீங்க. முன்னால ஒண்ணும் பண்ணாட்டா இப்போ எதுவும் ஆகாது. //தையல் பிரிந்து விடும்// அது சின்ன இருமலுக்கு எல்லாம் பிரிந்து போகாது. யோசிக்காதீங்க. பாலூட்டும் சமயம் தண்ணீர் போதுமான அளவு குடிக்காட்டா பால் தேவைக்கு சுரக்காது. பாப்பா கத்திட்டே இருப்பாங்க. நீங்க ரெண்டு பேருமே பாவம். நீங்க விஷயம் புரியாம என்ன சாப்பிட்டா பால் சுரக்கும் என்று திரும்ப வந்து த்ரெட் ஒப்பன் பண்ணணும். :-) தண்ணீர் போதாவிட்டால் நீர்க்கடுப்பு ஆக்கிரும். சங்கடம் அது.

//மஞ்சக்காய் சாப்பிட சொல்லுகிறார்கள், இதனை சாப்பிட்டால் தையல் போட்ட இடம் புண் சரியாகி விடும்// அது என்ன என்று தெரியாது. மஞ்சக்காய் சாப்பிடாதவர்களுக்கும் சரியாகிறதே!! தேவையில்லை. மருத்துவர் சொல்கிறதைக் கேட்டு நடங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்