தலை சுட்ரல்

frds enaku eppa parthalum thalai sutral mathiri irunthu konde iruku. ethu athanala nan oru time hospital porapa doctor enaku low pressure nu sonnar.. athanalaya vera ethum problem irukum..

லோ ஃப்ஸ்சருக்கு இரத்தம் ஓட்டம் குறைவாக இருக்கும் அதனால் தலைசுற்று, மயக்கம் ஏற்படும் அதனால் அதிகமாக தண்ணீர் குடித்தால் சரியாகிடும்.

தலை சுற்றலுக்கு பல காரணங்கள் உண்டு.

சில பேருக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருந்தாலும், போதிய எனர்ஜி இன்மையாலும், குறைந்த சர்க்கரை, குறைந்த இரத்த அழுத்தம் இருந்தாலும் தலை சுற்றும். சிலருக்கு அதிக நேரம் நின்றுக்கொண்டிருந்தாலும், அதிக வெளிச்சமுள்ள ஒளியை பார்த்தாலும் கூட தலை சுற்றும். இன்னும் பிற காரணங்களும் இருக்கின்றன.

உங்களுக்கு குறைந்த சர்க்கரை என்றால் அடிக்கடி சிறிது சிறிதாய் எதாவது சாப்பிட்டுட்டே இருங்க. பசி வரும் சமயம் சாப்பிட முடியாதவாறு சந்தர்ப்பம் அமைந்தால் முடிந்த அளவு, சாக்லெட் அல்லது 2 ஸ்பூன் சர்க்கரையாவது வாயில் போட்டுக்கோங்க. கைப்பையில் எப்பவும் சாக்லெட் அல்லது பிஸ்கட் வைத்திருங்கள்.

(பி.கு. உங்கள் கேள்விகளை தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். அப்பதான் படிப்பவர்களுக்கு இலகுவாய் இருக்கும், உங்கள் கேள்விகளும் பலரை சென்றடையும்.)

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்