கத்தரிக்காய் பிரியாணி

தேதி: April 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சின்ன கத்தரிக்காய் - 8 - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பாசுமதி அரிசி - 2 கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான‌ அள‌வு
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை - ஒரு இணுக்கு
மசாலா விழுது செய்ய:
பச்சை மிளகாய் - 5 (கார‌த்திற்கேற்ப‌)
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 (சிறிய பற்கள்)
சோம்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க‌:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - சிறிது
ப‌ட்டை, கிராம்பு, ப்ரிஞ்சி இலை, ஏல‌க்காய்
ம‌ராத்தி மொட்டு - ஒன்று (விருப்பப்பட்டால்)
புதினா, கொத்த‌ம‌ல்லித் தழை - இரண்டு கைப்பிடி


 

கத்தரிக்காயில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். (தண்ணீரில் போடாமல் வைத்திருந்தால் கத்தரிக்காயின் நிறம் மாறிவிடும்). அரிசியைக் களைந்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். மசாலா விழுது செய்ய கொடுத்துள்ளவற்றில் கரம் மசாலா தூள் தவிர மீதமுள்ளவற்றை ஒரு துளி எண்ணெய் விட்டு லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் அதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் (அல்லது) குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு லேசாக வறுக்கவும்.
அதனுடன் மெல்லியதாக நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து, வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு கத்தரிக்காயைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்புச் சேர்த்து, தேங்காய்ப் பால் மற்றும் தண்ணீர் கலந்து சேர்க்கவும். (1:2 என்ற விகிதத்தில் 2 கப் அரிசிக்கு, ஒரு கப் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் சேர்க்கவும்).
தண்ணீர் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் ஊறவைத்த அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
மீண்டும் கொதி வந்ததும் மூடி போட்டு குறைந்த தீயில் வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். (அல்லது) குக்கரில் செய்தால் கொதி வந்ததும் மூடி வைத்து, ஆவி வந்ததும் வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் திறந்து ஃபோர்க் (அல்லது) முள்கரண்டியால் மெதுவாக சாதம் உடையாமல் கிளறிவிடவும்.
கத்தரிக்காய் பிரியாணி தயார். தயிர் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரியாணி சிம்பிள் & சூப்பர் சுஸ்ரீ. கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன். நான்தான் ஃப்ர்ஸ்ட் கடைசி ப்ளேட்ட எனக்கு கொடுத்துடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கத்திரிக்காய் பிரியாணி நான் இதுவரை செய்ததே இல்லை, சுஸ்ரீ, ஒரு முறை உங்க குறிப்பை செய்துட்டு சொல்றேன்.

வர வர எல்லாரும் அதிரா நியாபகத்தை அதிகமாக்குறீங்க ;) சூப்பரா இருக்கு சுஸ்ரீ. கட்டாயம் செய்து பார்க்குறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யம்மி பிரியாணி,செய்து பார்க்கிறேன்.படங்கள் தெளிவு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கத்தரிக்காய்ல‌ கூட‌ பிரியாணி செய்யலாம்கிறதே எனக்கு இப்பத்தான் தெரிது. அவசியம் செய்து பார்க்கிறேன் சுஸ்ரீ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு சுஸ்ரீ,
நானும் இது போல் தான் செய்வேன். நல்ல‌ போட்டோக்களுடன், விளக்கமா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

குறிப்பை வெளியிட்ட‌‌ அட்மின் & அறுசுவை குழுவிற்கு மிக்க‌ நன்றி!

உமா,
பாராட்டிற்கு மிக்க‌ நன்றி! கடைசி ப்ளேட்ட‌ மட்டுமா கேட்கறீங்க‌?! ;‍‍) ப்ளேட்டோட‌ பிரியாணியும் சேர்த்து உங்களுக்கே தந்திட்டேன், எடுத்துகிட்டிங்கதானே?! :‍) கண்டிப்பா செய்துப்பார்த்தும் சொல்லுங்க‌ உமா. நன்றி!


வாணி,
கண்டிப்பா செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க, வெயிட் பண்றேன். நன்றி!

வனி,
ஆமாம், அதிராவோடதும் ஒன்னு இருக்கில்ல‌? நீங்க‌ சொன்னதும் ஞாபகம் வருது. பாராட்டிற்கு நன்றி வனி! கண்டிப்பா செய்துப்பார்த்து சொல்லுங்க‌ வனி.

முசி,
பாராட்டுகளுக்கு மிக்க‌ நன்றி!

அருள்,
நானும் இப்ப‌ சமீப‌ காலமாதான் கத்தரிக்காயில் ட்ரை பண்ணி, இந்த‌ செய்முறையின் சுவை பிடித்ததில் இதையே ஃபாலோ பண்ணறேன். நீங்களும் அவசியம் செய்துப்பார்த்து சொல்லுங்க‌ அருள். நன்றி!

செல்விக்கா,
அப்படியா? உங்களோடதும் இதே முறையா?! சூப்பர்! :‍)
பாராட்டுகளுக்கு மிக்க‌ நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

I tried this recipe today. Very Tasty!!!!
Thanks for sharing the recipe.