தேதி: April 16, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கலரிசி - ஒரு ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - அரை ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
கொள்ளு - 2 மேசைக்கரண்டி
பிஞ்சு புடலங்காய் - கால் பாகம் + விதை மற்றும் சதைப்பகுதி
புதினா - 10 இலைகள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6
எண்ணெய் - தேவையான அளவு
புழுங்கலரிசி முதல் கொள்ளு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சின்ன ரவை பதத்திற்கு அரைக்கவும். கடைசியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். (மாவு தயிர் பதத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது).

சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தாப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். (அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்).

ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.

மொறுமொறுப்பான புடலங்காய் அடை தயார். தேங்காய் சட்னி, அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் தான் சுவை நன்றாக இருக்கும்.

Comments
செந்தமிழ்செல்வி அக்கா
புதிதாகவும் வித்தியாசமாகவும் உள்ளது...
புடலங்காய் அடை
புடலங்காயில் அடையா வித்தியாசமா இருக்கே செல்வி மேடம், புடலங்காய் உள்ளே இருக்கும் விதை நார்லாம் எடுக்க வேண்டாமா?
செல்வி மேடம்
விதவிதமா சப்பாத்தியும், அடையும் செய்து அசத்துரீங்க செல்வி மேடம், ரொம்ப நல்லா இருக்கு.
உங்களோட கத்திரிக்காய் மசாலா செய்தேன், ரொம்ப நல்லா இருந்தது.
செந்தமிழ்செல்வி
புடலாங்காய் அடை சூப்பர் அக்கா, குழந்தைகள் புடலாங்காய் இந்த மாதிரி காய்கள் எல்லாம் சாப்பிட மாட்டார்கள் அதனால் இது மாதிரி அடை செய்து கொடுத்தால் கண்டிபாக சாப்பிடுவார்கள். நன்றி அக்கா.
அபிராமி
அன்பு அபிராமி,
வித்தியாசமாகத்தான் சுவையும் இருக்கும். மிக்க நன்றி!
அன்புடன்,
செல்வி.
தேவி
அன்பு தேவி,
விதை, நார் எல்லாம் சேர்த்துத்தான் அரைக்கணும். புடலங்காய் மட்டும் கொஞ்சம் பிஞ்சாக இருக்கணும். டூ இன் ஒன்! அடைக்கு அடையுமாச்சு. அதைத் தூக்கிப் போடவும் வேண்டாம்:)
அன்புடன்,
செல்வி.
நன்றி வாணி
அன்பு வாணி,
ஒரே நாளில் இரண்டு, மூன்று விதம் செய்து விடுவேன்.
கத்தரிக்காய் மசாலா நன்றாக இருந்ததா? மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.
பாலபாரதி
அன்பு பாலபாரதி,
/குழந்தைகள் புடலங்காய் இந்த மாதிரி காய்கள் எல்லாம் சாப்பிட மாட்டார்கள்/
உண்மை. இந்தக் குழந்தைக்கும் புடலங்காய் வாசம் பிடிக்காது:) அதனால் தான் இப்படி உருமாறி இருக்கு. சும்மா சொல்லக் கூடாது. புடலங்காய் அடை ரொம்பவே சுவையாகத்தான் இருந்தது.
அன்புடன்,
செல்வி.
அடை
செல்விக்கா, புடலங்காய்ல அடை இப்பத்தான் கேள்விப்படுறேன். அடை பார்க்க அழகா இருக்கு :)
உள்ள இருக்கும் பஞ்சு போன்றதையும் அரைத்தால் கசக்காதா?
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
செல்வி
முதல்ல பீர்க்கங்காய், இப்போ புடலங்காய்... கலக்குங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செல்விக்கா
சத்தான குறிப்புகளா கொடுத்து அசத்துறீங்க அக்கா. சூப்பர்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
கசக்காது
அன்பு அருட்செல்வி,
அழகா மட்டுமில்ல அருள், சுவையாகவும் இருக்கும்.
பிஞ்சு புடலங்காயா இருக்கணும். கசக்காது. விதையை கையால் நசுக்கினால், நசுங்கணும்.
சாரி அருள். இப்பத்தான் பதிவு பார்த்தேன்.
அன்புடன்,
செல்வி.
அடுத்தும்.
அன்பு வனி,
அடுத்தும் ஒண்ணு இருக்கு:)
அன்புடன்,
செல்வி.
செல்வி அக்கா
எங்க வீட்டுல புடலங்காய் செஞ்சா தீராது... இது நல்ல ஐடியா அக்கா.......