பரோட்டா சிக்கன் குருமா

தேதி: December 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் பரோட்டா குருமா இது. கோழிக்கறி கொண்டு செய்யப்படும் முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இதையே ஆட்டுக்கறி கொண்டும் செய்யலாம். ஆட்டுக்கறி வேக சற்று நேரம் எடுக்கும் என்பதால், தனியாக கறியை மட்டும் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, பிறகு கோழிக்கறி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடவும். அல்லது குக்கரில் வேக வைக்கும்போது இன்னும் சற்று அதிக நேரம் வேக வைத்து எடுக்கவும். கறி மசாலா செய்முறை ஏற்கனவே <a href="http://www.arusuvai.com/tamil/node/2232" target="_blank"> இஸ்லாமிய முறை சிக்கன் குழம்பில் </a> கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் பார்வையிடவும்.

 

கறி - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தேங்காய் விழுது - கால் கப்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி


 

அதிகம் எலும்பில்லாத இறைச்சியாக எடுத்து, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆட்டிறைச்சி என்றால் சிலர் எலும்புக் கறியாக சேர்த்துக் கொள்வர். விருப்பத்திற்கேற்றார்போல் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிவிடவும்.
பிறகு அதில் சிக்கனைப் போட்டு பிரட்டி விடவும்.
இப்போது அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.
அதிலேயே கறி மசாலா, மல்லித் தூள், உப்பு போட்டு கலக்கி விடவும். இதனை சிறிது நேரம் வேகவிடவும்.
3 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும்.
குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வரை வேகவிடவும். கறி வெந்தது பார்த்து இறக்கி சூடாக பரோட்டாவுடன் பரிமாறவும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

i need a mutton briyani recipe the way u make it for Ramjan.
if you know the recipe please post it.
thanks

I had to make a veg kurma for parotta. I took your recipe and changed the chicken to potatoes ( and dint touch any other part of your wonderful recipe :)

We did it for parotta. It came out very well. It was so tasty that we again did the same kurma next day (today:) for appam.

Taste of the kurma was so great and wonderful.

Thanks for the recipe

புஸ்பா

இந்தாங்க பரோட்டா சால்னா.

சால்னா என்பது குருமா சைடில் குரும என்பதி கிளிக் பண்னுங்கள்,
இல்லை இதை டிரை பண்ணுங்கள்
சப்பாத்தி, பரோட்டா, எல்லாமே என் குறிப்பிலும் இருக்கு வேண்டுமானால் முயற்சிக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

thanks for your information madam.i will see.

hello Madam,

I've tried preparing using this and came out really well . It was extremely good with Parathas.

Thanks