சோயா கிரேவி

தேதி: April 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சோயா உருண்டை - 30
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
பால் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், ப்ரிஞ்சி இலை, சீரகம் - தாளிக்க


 

பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சோயா உருண்டைகளைப் போட்டு வைக்கவும். சிறிது நேரம் கழித்து சோயா உருண்டைகளை எடுத்து குளிர்ந்த நீரில் 3 முறை அலசினால் சோயாவின் பச்சை வாசனை போய்விடும்.
ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மீதமுள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அதனுடன் சோம்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்றாகப் பிரட்டவும்.
அதனுடன் சோயா உருண்டைகளைச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான அசைவத்திற்கு இணையான சோயா கிரேவி தயார். கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற ஜோடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சோயா க்ரேவி சூப்பர் மீன்ஸ். கைவசம் சோயாவும் இருக்கு ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எவ்வளவு நாளா எதிர் பார்த்த குறிப்பு ;) செய்துருவோம்... இதுக்காகவே அந்த சோயாவை வெச்சிருந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மீனாள்,

சத்தான‌ குறிப்பு. சப்பாத்திக்கு நல்லதொரு வித்தியாசமான‌ சைட் டிஷ்.

அன்புடன்

சீதாலஷ்மி

பார்பதிற்கு சிக்கன் குழம்பு போல் உள்ளது.செய்து பார்கிரேன்...

நல்ல‌ குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு மீனாள்,
கிட்டதட்ட‌ மட்டன் குழம்பு டேஸ்டில் வரும் போல‌ இருக்கு. நல்ல‌ குறிப்பு.

அன்புடன்,
செல்வி.

நான் வெஜ் ஸ்டைல்ல் பண்ணியிருக்கீங்க,நான் சோயா சாப்பிடுவதில்ல, காய் கறிகளில் சமைத்துப் பார்க்கிறேன்.

எனது குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

Expectation lead to Disappointment

தங்களின் வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி உமா.செய்து பார்த்திட்டு சொல்லுங்க‌.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி வனி.செய்து பார்த்திட்டு சொல்லுங்க‌.சோயா வில் புளிக்குழம்பு தான் நான் சொன்னது.அந்த‌ குறிப்பை விரைவில் அனுப்புகிறேன்.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி சீதாம்மா.சப்பாத்திக்கு மிகவும் நன்றாக‌ இருக்கும்.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி நித்யா.செய்து பார்த்திட்டு சொல்லுங்க‌.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,பதிவுக்கு நன்றி முசி.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி செல்வி அக்கா.ஆமாம் என் பொண்ணும் சிக்கன் என்று சொல்லி தான் சாப்பிடுவா.

Expectation lead to Disappointment

வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி வாணி.

Expectation lead to Disappointment

நேற்று சப்பாத்திக்கு சோயா கிரேவி செய்தேன். ரொம்ப நல்லாருந்தது மீன்ஸ். குறிப்புக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்த்து சொன்னதற்கு ரொம்ப‌ தேங்க்ஸ் உமா.

Expectation lead to Disappointment