சிக்கன் சூப்

தேதி: April 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

சிக்கன் - 300 கிராம் (எலும்பு பகுதி)
ப்ரெட் - 2 துண்டுகள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
மல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 1 (அ) 2
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

சிக்கனை சுத்தம் செய்து எலும்பிலுள்ள கறியை இயன்ற வரை தனியாக எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எலும்பை அம்மி அல்லது உரலில் வைத்து தட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எலும்புடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, அரைத்த விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெந்ததும் சூப்பைத் தனியாக வடிகட்டி வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு உருகியதும், ப்ரெட் துண்டுகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிறிதளவு உப்பு (சிக்கன் வதங்க), மீதமுள்ள மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான சிக்கன் சூப் தயார். பரிமாறும் போது வறுத்த ப்ரெட் துண்டுகளைச் சேர்க்கவும்.

மிளகு மற்றும் வரமிளகாயை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

முதலிலேயே ப்ரெட் துண்டுகளைச் சேர்த்தால் சூப்பில் ப்ரெட் ஊறி நன்றாக இருக்காது. அதனால் தான் பரிமாறும் போது சேர்க்கச் சொல்லி இருக்கிறேன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... எனக்கு பிடிச்ச சூப். சிக்கனாச்சே... செய்யாம இருப்போமா, செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அண்ணா & டீமுக்கு நன்றி. பாபுண்ணா எங்கண்ணா கப்ல ஒரு துண்டை காணோம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி. டேஸ்ட்டும் நல்லாருக்கும் செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிக்கன் சூப் சூப்பர்.

நன்றி பாரதி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப் அருமை...

அன்பு உமா,
நாட்டுக் கோழியில் இடுபோல் இடித்து ரசம் வைத்து பிள்ளை பெற்றவர்களுக்கு கொடுப்போம் நல்லா சுவையாக‌ இருக்கும் சூப்பர்!

அன்புடன்,
செல்வி.

நன்றி நித்யா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றிக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிக்கன் சூப் பார்க்கவே நல்லா இருக்கு, அவசியம் தேங்காய் சேர்க்கணுமா உமா?

நன்றி வாணி. சேர்க்காட்டி பரவாயில்ல வாணி. சேர்த்தா டேஸ்ட் நல்லாருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

டேஸ்டி சூப் சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கும் என் குட்டீஸ் க்கும் சிக்கன் சூப் ரொம்ப‌ பிடிக்கும்.நிறைய‌ பேர் மைதா மாவு கரைத்து ஊற்ற‌ சொல்லுவார்கள்.ஆனால் உங்களோடது நம்ம‌ ஊர் ஸ்டைலில் உள்ளது.கண்டிப்பா முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுறேன்.

//உமா உங்களோட‌ பாசி பயறு வடை இன்றும் செய்தோம்.படங்களை முகப்புத்தகத்தில் போட்டுள்ளேன்.//

நன்றி உமா

Expectation lead to Disappointment

பதிவுக்கு நன்றி முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி மீன்ஸ். நல்லாருக்கும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பயறு வடை உங்களுக்கு பிடிச்சிருக்கது சந்தோஷம். நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா