கடலை மாவு சட்னி

தேதி: May 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 8 (அ) 9
பொட்டுக்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி
கடலை மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காயுடன் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைக்கவும். அதனுடன் கடலை மாவைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கவும் (அல்லது) உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் (அல்லது) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் சட்னியை நீர்க்கக் கரைத்து ஊற்றவும். கடலை மாவு சேர்த்திருப்பதால் அடிபிடிக்காமல் இருக்க உடனேயே நன்கு கிளறிவிடவும். (அடிக்கடி கிளறிவிடவும்).
கடலை மாவின் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். சட்னி கொதித்து கெட்டியாகத் துவங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான கடலை மாவு சட்னி தயார். சப்பாத்தி, பூரிக்குப் பொருத்தமான சிம்பிளான சைட் டிஷ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

it is very simple & quick side dish.........
Very Nice...
Thanks ka
Dhivyaeaswaran

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

கடலைமாவுசட்னி வித்தியாசமாகவும்,அருமையாகவும் இருக்கு சீதாமா

வித்தியாசமான‌ குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பு. வித்தியாசமான குறிப்பு.

Wow நல்லா இருக்கு.......கண்டிப்பா செய்து பார்க்கிறேன்...

Anbudan,
Viji

வித்தியாசமான குருமா மேடம், நீங்க சொன்னது போன்று சப்பாத்தி, பூரிக்கு அடுத்த முறை செய்துப் பார்க்கணும்.

புதுவிதமான‌ சட்னி வகை... நல்லா இருக்கு

சீதாம்மா ஈஸி & டேஸ்டி சட்னி சப்பாத்தி கூட‌ நல்லா இருந்துச்சு. டநன்றிம்மா

இன்னக்கு டிபன் பூரிக்கு சாப்பிட்டோம் இந்த‌ சட்னி. அருமையா இருந்துச்சு சீக்கிரமே செய்துட்டேன். தாங்ஸ் சீதாம்மா

சட்னி வித்தியாசமா சூப்பரா இருக்கும்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு திவ்யா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இனியா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு முசி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு விஜயலஷ்மி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பிரியா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தேவி,

செய்து பார்த்தீங்களா, மிக்க மகிழ்ச்சி.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

செய்து பார்த்தீங்களா, மிக்க மகிழ்ச்சி.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சமையல் கத்துக்குற மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இது போல சுலபமான குறிப்பு... சூப்பர், நானும் ட்ரை பண்றேன், எனக்கு செய்ய சுலபமா இருந்தா பிடிக்குமே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,

ரொம்ப சிம்பிளான குறிப்புதான் இது. ஆனால், டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.

அதுவும் பூரி சப்பாத்திக்கு திகட்டாத சைட் டிஷ் இது. ரொம்ப ஸ்பைஸியா இல்லாம, வாசனையாக இருக்கும்.

கடலை மாவு கரைச்சு ஊத்தறதால, அடி பிடிக்காம, கிளறி விட்டுகிட்டே இருக்கணும். கடலை மாவு அளவு கூடிடுச்சுன்னா, சட்டுன்னு கெட்டியாகிடும்.

அன்புடன்

சீதாலஷ்மி