கத்தரிக்காய் மசாலா

தேதி: May 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

இந்த குறிப்பு திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களின் கத்தரிக்காய் மசாலா குறிப்பைப் பார்த்து செய்தது.

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
நன்கு சுருள வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
அத்துடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். கத்தரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான கத்தரிக்காய் மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்மி கத்திரிக்காய் மாசாலா;பட்டை கிராம்பு சேர்த்து செய்தது கிடையாது.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாக்கவே கலர்புலா இருக்கு.கத்தரிக்காயை அழகாக கட்பண்ணிருக்கீங்க.வாழ்த்துக்கள் வாணி.

கத்தரிக்காய் மசாலா சூப்பர், படங்களும் தெளிவாக உள்ளன.

நானும் இதுவரை கத்திரிக்காய் அதிகம் சமைத்ததில்லை முசி, ஒரு நாள் கத்திரிக்காய் நிறைய கிடைத்தது, என்ன பண்ணலாம்ன்னு தேடிப் பார்த்த போது, செல்வி மேடமோட இந்த குறிப்பை சில தோழிகள் செய்துப் பார்த்து நன்றாக இருந்ததாக பதிவிட்டிருந்தார்கள். நானும் செய்துப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. டிரை பண்ணிப் பாருங்க.
நன்றி

வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி இனியா

மிக்க நன்றி பாலபாரதி

சுவையான இந்த குறிப்பை அறுசுவைக்கு கொடுத்த திருமதி.செந்தமிழ் செல்வி அவர்களுக்கு நன்றி

கத்தரிக்காய் மசாலா பார்க்கவே நல்லா இருக்கே கத்தரிக்காய் கைவசம் இருக்கு, செய்து ருசிச்சுடுவோம்.

கத்திரிக்காயில் நல்லதொரு மசாலா... சூப்பரா இருக்கு........

எளிமையா, அருமையா இருக்கு கத்தரிக்காய் மசாலா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாணி அக்கா,
கத்தரிக்காய் மசாலா ரொம்ப‌ ஈஸியா இருக்கு ,
நீங்க‌ கட் பண்ணிருக்க‌ விதமே அழகா இருக்கு.
பட்டை, கிராம்பு போடாம‌ செய்யலாம்ல‌ ,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

மிக்க நன்றி

நன்றி உமா

நானும் முதல் முறையா இதுபோல செய்துப் பார்த்துள்ளேன் சுபி, பட்டை, கிராம்பு போடாமலே செய்யலாம்.
நன்றி