தக்காளி தொக்கு

தேதி: December 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பழுத்த தக்காளி - ஒரு கிலோ
புளி - எலுமிச்சையளவு
முழு பூண்டு - ஒன்று
மிளகாய்தூள் - மூன்று மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - நான்கு கொத்து
எண்ணெய் - மூக்கால் கோப்பை
உப்புத்தூள் - இரண்டு மேசைக்கரண்டி


 

புளியை சுடுதண்ணீரில் போட்டு ஊறவைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வெளியில் எடுத்த பின்பு அதன் தோலை உரித்து கொள்ளவும்.
பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
புளி ஊறிய நீர்முழுவதையும் வடித்து விட்டு அதன் திப்பைகளை அகற்றி விட்டு தக்காளியைச் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். அரைக்க வேண்டாம்.
வெந்தயத்தை வறுத்து தூள் செய்து அதனுடன் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகை போட்டு பொரியவிட்டு பிறகு உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வறுக்கவும்.
தொடர்ந்து பூண்டைப் போட்டு வறுத்து தக்காளி விழுதைக் கொட்டி கிளறவும்.
பிறகு கலக்கி வைத்த தூள்வகைகளையும் உப்புத்தூளையும் போட்டு நன்கு கிளறவும்.
தொக்கு நன்கு சுண்டி எண்ணெய் கக்கும் வரை கிளறி விட்டு இறக்கி விடவும். இந்த சுவையான தக்காளி தொக்கை நன்கு ஆற வைத்து பீங்கான் குப்பியில் போட்டு வைத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம் தக்காளி தொக்கு செய்யும் போது வினிகர் ஊற்றலாமா? இந்த தொக்கு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்குமா?

டியர் பிரியா இந்த தொக்கு ஈரம் படாமல் கையாண்டால் ஒரு மாதம் வரைகூட வெளியில் வைத்திருக்கலாம் கெடாது.வினிகர் தேவைப்படாது ஆனாலும் சேர்ப்பதில் தவறில்லை.