எனக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. என் கணவர் வீட்டில் குழந்தையை பற்றி ரொம்ப எதிர்பார்க்கிரார்கள். நானும் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.
எனக்கு இன்று மாதவிடாய் முதல் நாள். நான் என்ன செய்வது? எனக்கு குழந்தை பிறக்க தயவுசெய்து ஆலோசனை கூருங்கள் தோழிகளே!!!!
தயவுசெய்து ஆலோசனை கூருங்கள்
தயவுசெய்து ஆலோசனை கூருங்கள் தோழிகளே!!!!
hai sarnya... today unaku
hai sarnya... today unaku first day period thana ma... i am shobana yanaku marriage agi 1 /2month aguthu ma
குழந்தை!
//4 மாதம்// தானே ஆகிறது சரண்யா! நாலு வருஷம் இல்லையே! இன்னும் காலம் இருக்கு குட்டிப்பெண்ணே! முதல்ல இப்படி யோசிக்கிறதை விடணும் நீங்க. எல்லோரும் எதிர்பார்ப்பாங்க. இப்போதைக்கு அதையெல்லாம் மனதில் போட்டுக் குழம்ப வேணாம். நீங்க எதிர்பார்ப்பு பரபரப்பு எதுவும் இல்லாமல் சந்தோஷமா இருங்க. மற்றவங்க எதிர்பார்ப்பு உங்க மனசை ரொம்ப தொந்தரவு படுத்தினால் ஒரு வழி இருக்கு. நீங்களாகவே பின்போட்டிருக்கிறதா சொல்லுங்க. :-)
இது உங்களுக்கு என்று இல்லை. கலியாணமான ஒரு வருஷம் ஆவதற்குள் இங்கு இப்படி த்ரெட் போடுற எல்லா குட்டீஸ்டயும் இமா கேட்க நினைக்கிற கேள்விதான். நீங்கதான் மாட்டி இருக்கீங்க. :-)
ம்... கலியாணம் பண்ணிக்கறது குழந்தை பெத்துக்கறதுக்கு மட்டும்தானா? ஒரு ஆணும் பெண்ணும் சந்தோஷமா வாழுறதுக்கு இல்லையா! லவ் பண்ணி கலியாணம் பண்ணுறவங்களா இருந்தால் கூட திருமணத்திற்குப் பின்பான அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும். மற்றவரிடம் முன்னால தெரியாத இன்னொரு முகம் கூட இருக்கலாம் அறிந்துகொள்ள. குழந்தை பிறந்த பின்னால் ஒருவரோடு ஒருவர் செலவளிக்கும் நேரம் பிறகு குறைந்து போகும். எல்லா நேரத்தையும் குழந்தையே பிடித்துக்கொள்வது போல் போய்விடும். குழந்தை கிடைக்க முன்னால் இருவர் மத்தியிலும் நல்ல புரிந்துணர்வு முக்கியம் இல்லையா! ஒரு ஈடுபாடு வரமுன்னால் அவசரமாகக் குழந்தை... ரொம்ப மெக்கானிக்கலா படுது எனக்கு. ;( கவலையா இருக்கு. ;((
நீங்க என் பொண்ணா இருந்தால் இதுதான் சொல்லுவேன்... இளமையான, புதுமையான இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது. வாழ்க்கையை ரசிச்சு அனுபவிக்கணும். ஓவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழணும். சந்தோஷமா இருக்கணும். மீதி எல்லாம் தானா சரியாகும்.
- இமா க்றிஸ்
குழந்தை
இமா அம்மாவுக்கு முதலில் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.
நீங்கள் கூறியது மிகவும் சரிதான். ஆனால் என்னவரின் சொந்தங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.நான் என்ன செய்வது? குழந்தை பெற எனக்கு உதவி செய்யுங்கள்.
Hellow Shobana..
ஆமாமா...... இன்றுதான் முதல் நாள் மா..
சரண்யா
ஆரம்பத்திலே சொந்தங்களுக்காக உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாதீர்கள், இது உங்களின் வாழ்க்கை. மற்றவர்களைக் குறித்து கவலைப் படாதீர்கள் தோழி, அவங்க எப்பவுமே இப்படித்தான், இப்படியே உங்கள் வாழ்க்கயின் எல்லா விஷயங்களிலும் அவர்களின் பேச்சுக்கே அடி பணிந்து நடக்க முடியுமா? மற்றவர்களுக்குப் பயப் படுவதை விட்டு விடுங்கள், இது உங்களுக்கும்,உங்கள் கணவருக்கும் இடையில் உள்ள விஷயம், அவர்கள் யார் குறுக்கிடுவதற்க்கு? இது நம் சமுதாய பழக்கம், காலங்காலமாய் இதற்க்கு தலயாட்டிக் கொண்டிருப்பதினாலேயே இவை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன, யார் தான் கேள்விக் கேட்ப்பது? அடுத்த முறை யாராவது கேட்டால் இமா சொன்னது போன்று தள்ளிப் போட்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் ஒரு மருத்துவரிடன் போய் திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகிறது என்று சொன்னால் ஒரு வருடமாவது ஆகட்டும் அப்புறம் வாங்க என்றுதான் சொல்வார்கள்.
கருத்தரிப்பதற்க்கு பயம், மற்றும் மன அழுத்தமில்லாதா சூழ்நிலைகளும் அவசியம், நீங்கள் மற்றவர்களின் பேச்சையெல்லாம் காதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தால் கர்ப்பம் தரிக்க தாமதம் கூட ஏற்ப்படலாம்.
முதலில் உங்கள் திருமண வாழ்வின் ஆரம்ப காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கப் பாருங்கள், அதுவே கருத்தரிக்க உதவும்.
கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க்- ல் இதைப் பற்றி தோழிகள் நிறைய பேசியிருக்கிறார்கள். நேரம் கிடைக்கையில் பொறுமையாக படித்துப் பாருங்கள், பயனளிக்கும்.
http://www.arusuvai.com/tamil/forum/297
Hollo vani.my name is indhurani.
enaku inaikoda 35days agudhu home testpani parthathil negativenu katuthu,ethana days kalethu parkanum.nan ipa ena pananumpa. plz ans me
இந்துரானி,
கீழே உள்ள லிங்க்- ஐத் தட்டி படித்துப் பாருங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/28142