தேதி: May 8, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரை கிலோ
அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
தயிர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 200 கிராம்
புதினா, கொத்தமல்லித் தழை - தலா அரை கட்டு
தனி மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 5
எலுமிச்சை பழம் - ஒன்று
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் பச்சை மிளகாய், பாதி அளவு புதினா மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் வதங்கியதும் சுத்தம் செய்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி வேகவிடவும்.

மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் அரிசியைக் களைந்து போட்டு, அதனுடன் தயிர், மீதமுள்ள புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து, பாதி எலுமிச்சை பழச் சாறு பிழிந்துவிட்டு சிறிது உப்பு சேர்த்து, சரியாக 3 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

3 நிமிடங்கள் கழித்து அரிசிக் கலவையை, வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.

பிறகு கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி, மீதமுள்ள எலுமிச்சை பழத்தை பிழிந்து, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

சுவையான சிக்கன் பிரியாணி தயார். அரை மணி நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு பரிமாறவும்.

Comments
ரேவதி
பிரியாணி ஈசியா இருக்கு ரேவ்ஸ். சூப்பர்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
ரேவ்
அசத்தலா இருக்கு ஒரு பார்சல் ரேவ்
என்றும் அன்புடன்,
கதீஜா
Revathi sis
சிக்கன் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு பார்க்க juicya இருக்கு வாழ்த்துக்கள்
by Elaya.G
Briyani
eanaku briyanina romba pudikum pakave aasaya eruku entha sunday senchutu solrean pa
ரேவதி
யம்மி பிரியாணி சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரேவதி.
சிக்கன்பிரியாணி அழகா பண்ணிருக்கீங்க.ஒன்னுகூட ஒட்டாமல் நீள்மா சூப்பரா இருக்கு.கடைசி பிளேட்டில் இருக்கிர பிரியாணியை நான் எடுத்துகிரேன் ரேவதி.
ரேவதி
சிம்பிளா சிக்கன் பிரியாணி சூப்பரா இருக்கு, நானும் நெய் சேர்க்காமல் தான் செய்வேன்.
பிரியாணி
அன்பு ரேவதி,
சிக்கன் பிரியாணி பார்க்கவே நல்லா இருக்கு. சிம்பிளாகவும் இருக்கும்.
அன்புடன்,
செல்வி.
admin
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & குழுவினர்க்கு நன்றி
Be simple be sample
உமா
ஹாய் உமா . முதல் பதிவு தான்க்ஸ்பா
Be simple be sample
கதீஜா
அட பார்சல் வந்துன்னே இருக்கு .ஹி ஹி ஹி கொஞ்சம் லேட்டா தான்க்யூ கதிஜா
Be simple be sample
இளயா
தான்க்யூ இளயா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க
Be simple be sample
சுகன்யா
எனக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். செய்து
பார்த்துட்டு சொல்லுங்க. தான்க்யூ
Be simple be sample
முசி
தான்க்யூ முசி
Be simple be sample
இனியா
அட ரொம்ப தான்க்ஸ்பா. அப்படியே எடுத்துக்கோங்க
Be simple be sample
வாணி
வாணி ரொம்ப தான்க்ஸ்பா. நானும் நெய் சேர்க்கறது இல்லை
Be simple be sample
செல்விக்கா
தான்க்யூ செல்விக்கா
Be simple be sample
ரேவ்ஸ்
எங்க வீட்டில் பிடிச்ச முறை.. நெய்யில்லாம சூப்பர். செய்துடுறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவதி
ஹாய் தோழி. பிரியாணி சூப்பர் மா.எனக்கு ஒரு சந்தேகம் மா. அரிசியை கொதி தண்ணீரில் போட்டு 3 நிமிடம் கழித்து, தண்ணீரை வடித்து விட்டு சோற்றை மட்டும் போட வேண்டுமா? அல்லது தண்ணீரோடு சேர்க்க வேண்டுமா? கொஞ்சம் சொல்லுங்கள் தோழி
vani
செய்துபார்த்துட்டு சொல்லுங்க வனி.தான்க்ஸ் வனி
Be simple be sample
நசிரா.
பதிவுக்கு தான்க்ஸ் நசிரா.பிரியாணிக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அந்த அளவுக்கு உலை வைத்து ,அதில் அரிசி மற்ற பொருட்கள் சேர்த்து 3நிமிடம் கழித்து உலை நீரோடு அரிசியை சேர்க்கணும்.சந்தேகம் தீர்ந்ததா.
Be simple be sample
revathi
ஓ அப்படியா!நன்றி ரேவதி. சந்தேகம் தீர்ந்தது