என் மகளுக்கு மேல் உதட்டின் மேல், திடீரென்று ஒரு கட்டி வந்துள்ளது. முன்னாடி நாள் தூங்கப்போகும்போது ஒன்றுமில்லை, நேற்று காலையிலதான் எழுந்ததும் பார்த்தால், இந்த கட்டி வந்திருக்கு. பார்க்க வெயில் கட்டி போலத்தான் இருக்கு. இங்கே இந்த வாரம் முதல் வெயில் தூக்கலாக இருக்கு.
நேற்று இரவு படுக்கபோகுமுன் நாமகட்டியை வெந்நீரில் குழைத்து தடவினேன் (கண் கட்டிக்கு இது மிக நல்ல வைத்தியம்). ஆனால் இந்த கட்டிக்கு ஒண்ணும் கேட்கலை. இப்போ,எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. சந்தனமே போட்டு பார்க்கவா?! இது இல்லாம, நேற்று உப்பு போட்டு மோர் கரைத்து குடிக்க வைத்தேன். பழங்கள், வெள்ளரிக்காய் ஸ்லைசஸ் கொஞ்சம் கட்டாயப்படுத்தி காலையில் சாப்பிட வைத்து ஸ்கூல் அனுப்பி இருக்கிறேன்.
மிக அவசரமாக இந்த (வெயில்)கட்டியை குணப்படுத்த வீட்டுவைத்தியம் தேவை. வர வீக்கென்ட் ஸ்கூல் பங்ஷன் வேற இருக்கு. :-( இன்னும் இரண்டு நாளில் என்ன செய்தால், கொஞ்சம் கட்டியை சரி பண்ணலாம், இல்லை சின்னதா வைத்திருக்கலாம், ரொம்ப விசிபிளா தெரியாம வைக்கலாம்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்... இந்த ப்ரச்சனைக்கு யாராவது உடனடி தீர்வு, கைவைத்தியம் சொன்னிங்கன்னா, ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும். நன்றி!
உதவி
என்னடா இது, என்னவோ ரொம்பநாள் கழிச்சி வந்து, பதிவு போட்டாங்க, அப்புறம் ஆளையே காணம்னு நினைச்சிட்டிருக்கிற, அங்கே பதிவு போட்டு வரவேற்பு கொடுத்த எல்லா தோழிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். ஒரே காரணம் வேலை பிசிதான், பசங்க இயர் என்ட் ஆக்டிவிட்டிஸ்வேற, எல்லா இடத்துக்கும் மெல்லமா வரேன். இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்து உதவுங்க தோழீஸ். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
Susri27
எனக்கு தெரிந்து தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணை தலை உச்சி இல் வைத்தால் சூடு குறைந்து கட்டி மறையும்.
சுசிரி
இது சூடு அதிகமானல் இந்த மாதிரி கட்டிகள் வரும், நீங்கள் வாரம் வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கவும். பிறகு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, இந்த மாதிரி பழங்கள், காய்கள் எல்லாம் அதிகமாக சேர்த்துக் கொடுங்கள் இந்த சீக்கிரம் சரியாகி விடும்.
susri
Sorrynga... mobile padhivu. Net down veetula. Enakku therindha vaithiyam... lacto calamine lotion vaangi vainga katti mela. Thinam 3 times, suudaa irundhaa kandippaa kuraiyum.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஜா
இருக்கவே இருக்கு வெண்ணெய். நம்புங்க.
பழைய வெண்ணெய் இன்னும் நல்லது.
தொடர்ந்து போட்டுடே வாங்க. வீட்டில் இருந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போடுங்க.பாப்பாக்கும் கேட்கும் என நினைக்கிறேன்.
நல்லெண்ணெய் சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிக்க வைங்க
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
susri
சூட்டில் தான் வந்திருக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க செய்ங்க. சந்தனம் வைங்க.
ரம்யா வெண்ணெய் வைத்தானும் கட்டி சரியாகுமா தெரியாது எனக்கு, நன்றி.
௧டடி
கட்டிக்கு அரிசி மாவு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஓரு டேபிள் ஸ்பூன் கலந்து ததண்னீர் ஊற்றி கொதிகக விட்டு வெந்த பின் சற்று ஆறின் பிற்கு கடடி மீது போடவும். ஒரு நாளீலேயே கட்டி உடைந்து போகும்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
நன்றி தோழிகளே!
கேட்டதும் ஓடிவந்து டிப்ஸ் கொடுத்த பார்வதி, பாலபாரதி,
வனி (இதுக்கு எதுக்கு சாரி, நெட் இருந்தா நீங்க எப்பவும் தமிழ்லதான போடுவிங்க, எனக்கு தெரியாதா?! ;)), ரம்ஸ் (எத்தனை நாளாச்சி உங்க பதிவுகளை பார்த்து?!), காயத்ரி, பூங்கோதைகண்ணம்மாள் எல்லாருக்கும் மிக்க நன்றி.
இதுவரை செய்தது, சந்தனம் இழைத்து போட்டேன், உணவில் மீண்டும் இன்று காலை வெள்ளரி, பழங்கள். பாலை தவிர்த்து, மோர் இரண்டு வேளை. கூடவே மற்ற டிப்ஸையும் ஃபாலோ பண்ணிபார்க்கிறேன். கட்டாயம் நாளைக்கு நல்லெண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க செய்யவேண்டும் என்று இருக்கிறேன்.
பூங்கோதை, உங்க டிப்ஸ் ரொம்பவே புதுசா இருக்கு, எனக்கும்கூட வெயில் ஜாஸ்தியில் நிறைய கட்டிகள் வருவதுண்டு, இதை யூஸ் பண்ணிக்கறேன். மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.
அன்புடன்
சுஸ்ரீ
Letta pathil
Letta pathil tharein.sorry.tooth pastr thadavugappa seriya aeidom.
உண்மையாய் இரு.